ஆ. செல்லதுரை
ஆ. செல்லதுரை (A. Chelladurai) (பிறப்பு 17 செப்டம்பர் 1939) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியினைச் சார்ந்தவர். 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]