ஆர். பி. வி. எஸ். மணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். பாலவேங்கட சுப்பிரமணியன் (சுருக்கமாக:ஆர். பி. வி. எஸ். மணியன்), ஆன்மீகப் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் முன்னர் விசுவ இந்து பரிசத்தின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர். இவர் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்த பாலவேங்கட சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் வணிக வரித்துறையில் பணியாற்றினார். படிக்கும் காலத்திலிருந்தே இவருக்கு விவேகானந்தர் மீது ஈடுபாடு இருந்ததால், அவரது கொள்கைகளைப் பரப்பும் பணியில் ஈடுபடுவதற்காக வேலையை விட்டார்.

கன்னியாகுமரியில் 1970ம் ஆண்டில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கும் பணி நடைபெற்றபோது, ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் சார்பில் நன்கொடை திரட்டம் பணியில் ஆர். பி. வி. எஸ். மணியன் தீவிரமாக ஈடுபட்டார். 1970களில் விவேகானந்த கேந்திரம் சார்பில் மாணவர்கள் மத்தியில் தீவிரமாகப் பேசி வந்த மணியன், 1980ஆம் ஆண்டுவாக்கில் தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் அமைப்பில் இணைந்தார்.

ஆர். பி. வி. எஸ். மணியன் 11 செப்டம்பர் 2023 அன்று பாரதியும் விவேகானந்தரும் என்ற தலைப்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய வித்தியா பவன் கிளையில் உரையாற்றினார். சனாதன தர்மத்தை ஆதரித்துப் பேசிய மணியன், சர்ச்சைக்குரிய விதத்தில் திருவள்ளுவர் மற்றும் அம்பேத்கரைக் குறித்துப் பேசினார். இதனால் காவல்துறையால் 14 செப்டம்பர் 2023 அன்று கைது செய்யப்பட்ட ஆர். பி. வி. எஸ். மணியன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 29 செப்டம்பர் 2023 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.[1][2][3][4]3 அக்டோபர் 2023 அன்ற்ய் ஆர்.பி. வி. எஸ் மணியன் நிபந்தனை பிணையின் பேரில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பி._வி._எஸ்._மணியன்&oldid=3804189" இலிருந்து மீள்விக்கப்பட்டது