ஆர். பாலாஜி ராவ்
ஆர். பாலாஜி ராவ் (R. Balaji Rao)(1842-1896) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இவர் சென்னை மகாஜன சபையின் நிறுவனர் மற்றும் முதல் செயலாளர் ஆவார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]பாலாஜி ராவ் 1842ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மராத்தியர் தேசஸ்த் பிராமண குடும்பத்தில் பிறந்தார்.[2][3] தஞ்சாவூரிலும், சென்னையிலும் பள்ளி மற்றும் உயர் கல்வியைப் பெற்றார். இவர் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார். தனது படிப்பை முடித்ததும், பாலாஜி ராவ் இந்தியச் சுதந்திர இயக்கத்தில் சேருவதற்கு முன்பு வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார்.[4]
அரசியல்
[தொகு]பாலாஜி அரசியலில் சேர்ந்து சென்னை மகாஜன சபையின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.[1] ச. அ. சாமிநாத ஐயருடன் இந்தியத் தேசிய காங்கிரசின் முதல் அமர்வில் இவர் தஞ்சாவூரினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1] செங்கல்பட்டு மாவட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக பாலாஜி ராவ் செங்கல்பட்டு நிவாரண நிதியை நிறுவினார்.
இறப்பு
[தொகு]பாலாஜி ராவ் 1896இல் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 P. Yanadi Raju (2003). Rayalaseema during colonial times: a study in Indian nationalism. Northern Book Centre. p. 139. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8172111398.
- ↑ John Jeya Paul (1991). The legal profession in colonial South India. Oxford University Press. p. 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195625585.
R. Balaji Rao, a Desastha Brahman and a family friend from Tanjore, under whom they apprenticed;
- ↑ R. Suntharalingam (1974). Politics and nationalist awakening in South India, 1852-1891. University of Arizona Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0816504474.
- ↑ John Jeya Paul (1991). The legal profession in colonial South India. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195625587.