ஆர். சண்முகசுந்தரம் (வழக்கறிஞர்)
ஆர். சண்முகசுந்தரம் | |
---|---|
தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2021 | |
முன்னையவர் | விஜய் நாராயண் |
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 2002-2008 | |
தொகுதி | தமிழ்நாடு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 அக்டோபர் 1953 |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
மூலம்: [1] |
இராஜகோபால் சண்முகசுந்தரம் என்பவர் தமிழக அரசுத் தலைமை வழக்கறிஞராக உள்ளவராவார்.[1] திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1953 இல் பிறந்தவரான சண்முக சுந்தரம் 1977இல் வழக்கறிஞராக பதிவு செய்தார். 1989 -1991 இல் திமுக ஆட்சியில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும், 1996-2001 திமுக ஆட்சியில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றி அரசு வழக்கறிஞராக அனுபவம் பெற்றவர்.[2][3] இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டு 2002-2008 காலகட்டத்தில் இருந்தார். 1995 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி ஜெயலலிதா மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப் போகும் போது இவர் தாக்கப்பட்டார். "வெல்டிங் "குமார் மற்றும் 6 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதற்குதண்டனை பெற்றனர்.[4][5][6]
குறிப்புகள்
[தொகு]
- ↑ "R Shanmugasundaram is new advocate-general of Tamil Nadu". Subra Mani. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 May 2021. பார்க்கப்பட்ட நாள் 12 May 2021.
- ↑ "R. Shunmugasundaram". Rajya Sabha. Archived from the original on 27 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 April 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952-2019" (PDF). மாநிலங்களவை. பார்க்கப்பட்ட நாள் 12 May 2021.
- ↑ "Lifer for attack on lawyer". Frontline. 29 November 1997. பார்க்கப்பட்ட நாள் 12 May 2021.
- ↑ "New AG was once attacked for filing case against Jaya". Daily Thanthi. 11 May 2021. Archived from the original on 12 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 12 May 2021.
- ↑ "What it was like to work with Karunanidhi". தி எகனாமிக் டைம்ஸ். 12 August 2018. பார்க்கப்பட்ட நாள் 12 May 2021.