ஆர். கே. சண்முகம் (கதாசிரியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். கே. சண்முகம்
பிறப்புஆர். கே. சண்முகம்
இறப்புசெப்டம்பர் 12, 2017 2017 (அகவை 86–87)
சென்னை
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர், கதாசிரியர்
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
தேவி
பிள்ளைகள்4 மகள்கள்

ஆர். கே. சண்முகம் (1930 - செப்டம்பர் 12, 2017) தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், கதாசிரியரும், திரை வசனகர்த்தாவும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

1930ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் பிறந்த இவர், இயக்குநர் பி. ஆர். பந்துலுவிடம் உதவியாளராய் இருந்து, சாண்டோ சின்னப்பா தேவரின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக அறிமுகமாகி தொடர்ந்து எம். ஜி. ஆரின் பெரும்பாலான திரைப்படங்களுக்கும், சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்களுக்கும் வசனகர்த்தாவாக பணிபுரிந்தார்.

1980 இல் இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருதை வழங்கிக் கௌரவித்தது. தமிழக முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர் சென்னை லாயிட்ஸ் சாலையிலுள்ள ஒரு வீட்டை அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]