ஆர்மோன் மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர்மோன் மருத்துவம் அல்லது இயக்குநீர் மருத்துவம் (ஆங்கில மொழி: Hormone therapy) என்பது ஆர்மோன் என்றறியப்படும் இயக்குநீரைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஒரு மருத்துவச் சிகிச்சை முறை. ஆர்மோன்கள் என்பவை நாளமில்லா சுரப்பிகளில் தோற்றுவிக்கப்படும் மிக முக்கியமான வேதிப்பொருட்களாகும். இவை உடலின் பல பகுதிகளிலும் பயன்படுகின்றன. சூல்பை, தைராய்டு, பிசூட்டரி போன்றவை மிக முக்கியமான ஆர்மோன் சுரப்பிகளாகும். புற்றுநோய் மருத்துவத்தில் ஆர்மோன்கள் முக்கியப் பங்கினை வகிக்கின்றன. எனினும் ஆர்மோன் மருத்துவம் முதல்நிலை மருத்துவமுறை ஆகாது. அறுவை மருத்துவம், கதிர் மருத்துவம் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆர்மோன் மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது.

வேறுபாடு[தொகு]

சில வேளைகளில் ஆர்மோனின் அளவு குறையும் போது அதனை ஈடுசெய்ய ஆர்மோன்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. இது ஆர்மோன் ஈடுசெய் மருத்துவம் எனப்படும். ஆர்மோன் மருத்துவமும் ஆர்மோன் ஈடுசெய் மருத்துவமும் முற்றிலும் மாறுபட்டவையாகும். இவை இரண்டினையும் ஒன்றெனக் கருதக்கூடாது. எடுத்துக்காட்டாக ஆர்மோன் ஏற்கும் மார்பகப்புற்றுநோய்க்கும் ஏற்காத மார்பகப்புற்றுநோய்க்கும் தனித்தனி மருந்துகள் உள்ளன.

மார்பகப்புற்றுநோய் சிகிச்சை[தொகு]

முலைப்புற்றுக்கு இரு வழிகளில் ஆர்மோன் மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது.

  1. எசுட்ரசன் ஆர்மோனின் அளவை உடலில் குறைப்பது
  2. எசுட்ரசன் செயல்பாட்டினைக் கட்டுப்படுத்துவது

பெரும்பகுதி எசுட்ரசன் சூலகங்களில் உற்பத்தியாகின்றது. எசுட்ரசன் ஏற்புநிலை மார்பகப்புற்றை வளரச் செய்கின்றது. எனவே எசுட்ரசனின் அளவைக் குறைப்பது அல்லது தடுப்பது மார்பகப்புற்று வளருவதையும், மறுபடியும் வளருவதையும் தடுக்க உதவும். இந்த மருந்துகள் எசுட்ரசன் ஆர்மோனை ஏற்காத மார்பகப்புற்று நோயாளிகளிடம் பயன்தராது.

எசுட்ரசனைக் குறைக்கச் சிலவேளைகளில் சூலகங்களும் பாலோப்பியன் குழாய்களும் அறுவைமூலம் நீக்கப்படுகின்றன. டமாகிசிபென், லிட்டரசால், பாக்டிடாக்செல் போன்ற மாத்திரைகள் மார்பகப்புற்று நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.[1]

புராசுடேட் புற்றுநோய் சிகிச்சை[தொகு]

புராசுடேட் புற்று வளர டெசுட்டோசுடரான் என்ற இயக்குநீர் உதவுகிறது. இந்த இயக்குநீர் சுரப்பதைக் கட்டுப்படுத்த விரைநீக்கம் செய்யப்படுவதுண்டு.

உசாத்துணைகள்[தொகு]

  • பாபா அணு ஆய்வு மையக்குறிப்பு

சான்றுகள்[தொகு]

  1. Early Breast Cancer Trialists' Collaborative Group (23 July 2015). "Aromatase inhibitors versus tamoxifen in early breast cancer: patient-level meta-analysis of the randomised trials". The Lancet. doi:10.1016/S0140-6736(15)61074-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்மோன்_மருத்துவம்&oldid=2747425" இருந்து மீள்விக்கப்பட்டது