ஆர்த்தி மஜும்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்த்தி மன்
பிறப்புமார்ச்சு 3, 1978 (1978-03-03) (அகவை 46)
கனெடிகட், அமெரிக்க ஐக்கிய நாடு
இருப்பிடம்லாஸ் ஏஞ்சலஸ்[1]
தேசியம்அமெரிக்கன்
மற்ற பெயர்கள்ஆர்த்தி மஜூம்தார்[1]
கல்விஷாடி சைட் அகாடமி, நியூயார்க் பல்கலைக்கழகம்[1]
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2006 முதல் தற்போது வரை
அறியப்படுவதுதி பிக் பேங் தியரி[2]
சொந்த ஊர்பாக்ஸ் சாப்பல், பென்சில்வேனியா[1]
தொலைக்காட்சிதி பிக் பேங் தியரி
பெற்றோர்வசந்தி மஜும்தார் (அம்மா)[1][3]
வாழ்க்கைத்
துணை
புர்வேஷ் மன்காட்
பிள்ளைகள்நிகிதா (மகள்)[1][3]

ஆர்த்தி மஜும்தார் (Aarti Majumdar) 1978 மார்ச் 3 அன்று பிறந்த, அவரது மேடை பெயரான "ஆர்த்தி மான்" என்ற பெயரில் நன்கு அறியப்பட்ட இந்திய-அமெரிக்க நடிகை ஆவார். ஹீரோஸ் உட்பட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் நடித்திருக்கிறார். 'தி பிக் பேங் தியரியில் பிரியா குத்ரப்பல்லி என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக நன்கு அறியப்படுகிறார்.[1][3]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

மன், இது அவரது திருமண பெயரின் சுருக்கமாகும்,[1] மார்ச் 3, 1978 இல் கனெக்டிகட்டில்[1] பிறந்த இவர் முதல் தலைமுறை இந்திய அமெரிக்க[4] வம்சாவளியைச் சேர்ந்தவர்.

அவரது பெற்றோர்களுக்கு மன் இன்னும் ஒரு சிறு குழந்தை தான், மூத்த சகோதரி கிருதி இன்னொரு சகோதரி, கிருட்டி மற்றும் இளைய சகோதரர் நிஷாத் ஆகியோருடன், பென்சில்வேனியாவைச் சுற்றி பல இடங்களுக்குச் சென்றார்.[1] அவள் ஒரு சிறு குழந்தையாக இருந்தபோது பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, மவுன்ட் லெபனான், வேக்ஸ்ஃபோர்ட், பாக்ஸ் சேப்பல் போன்ற இடங்களில் வாழ்ந்துள்ளார்.[1] அவரது தாயார், வசந்தி மஜும்தார், பிட்ஸ்பர்க் மருத்துவ மைய (UPMC) பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர், இன்னும் பாக்ஸ் சேப்பலில் வசிக்கிறார் மற்றும் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர் ஆவார்.[1][3] மன்னின் த்ந்தையும் ஒரு மருத்துவர் ஆவார்.,[4] அவர் உயர்நிலை பள்ளியில் இருந்தபோது இவரது தந்தை இறந்தார்.[1]

பாயின்ட் பிரீஸ் என்ற இடத்தில் உள்ள ஷாடி சைட் அகடமி உயர் நிலைப்பள்ளியில் படித்த போது மன் ஒருபோதும் நடிப்பில் ஈடுபட்டதில்லை, ஆனாலும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடிப்பு பயின்ற அவர் திரைக் கதை மற்றும் இயக்கம் போன்றவற்றில் பட்டம் பெற்றார்.[1][3]

தொழில்[தொகு]

2000 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நடிக்க ஆரம்பித்த இவர், ஆரம்பத்தில் சிறு வேடங்களில் நடித்தார். அவர் ஆர்த்தி மஜும்தார் மற்றும் ஆர்தி ம்ன் என்ற இரு பெயர்களை தனது தொழில்முறை பெயர்களாகப் பயன்படுத்துகிறார்.[1][3][4]

சொந்த வாழ்க்கை[தொகு]

மன் தனது மகள் நிகிதா மற்றும் அவரது கணவர் பர்வீஷ் மன்கட் ஆகியோருடன் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கிறார்.[1][3][4]

குறிப்புகள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 Owen, Rob (May 11, 2011). "Former Pittsburgher's role in 'The Big Bang Theory' comes to a head in finale -- post-gazette.com". Pittsburgh Post-Gazette. http://www.post-gazette.com/pg/11131/1145534-67.stm. பார்த்த நாள்: September 22, 2011. 
  2. Darrell, Ezabeth (22 January 2014). "Can Aarti Mann link Hollywood and the lucrative East Indian market". fansshare.com. பார்க்கப்பட்ட நாள் 12 September 2014.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "Biography of Aarti". BeerTripper. 2012. பார்க்கப்பட்ட நாள் February 13, 2013.
  4. 4.0 4.1 4.2 4.3 Cohn, Paulette (13 May 2013). "What Ethnicity is Aarti Mann?". American Profile. பார்க்கப்பட்ட நாள் 12 September 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தி_மஜும்தார்&oldid=3477582" இலிருந்து மீள்விக்கப்பட்டது