ஆர்த்தி அக்ரவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்த்தி அக்ரவால்
தேசியம்இந்தியர்
துறைஇயற்பியல், ஒளியியல்,ஒளியணுவியல் மற்றும் பொறியியல்
கல்வி கற்ற இடங்கள்இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி
ஆய்வு நெறியாளர்அனுராக் சர்மா

ஆர்த்தி அக்ரவால் (Arti Agrawal), இந்தியாவின் புது தில்லியைச் சேர்ந்த அறிவியலாளரும், பொறியியலாளரும் ஆவார். கணக்கீட்டு ஒளியணுவியலுக்காகவும், "ஸ்டெம்" (STEM) என்ற அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் என்பதின் பன்முகத்தன்மையும், சமத்துவமும் குறித்த ஆய்வுப் பணிக்காகவும் பரவலாக அறியப்பட்டவர். இந்த இரண்டு பிரிவுகளிலும் பல விருதுகள் அளிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.[1] [2]

கணிணி பாவனையாக்கம் , ஒளியணுவியல் சாதனங்கள் மற்றும் ஒளியியல் கூறுகளின் உருவகப்படுத்துதலில் கவனம் செலுத்தி ஆராய்ந்து வரும் ஆர்த்தி தற்போது சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்[3] இணைப் பேராசிரியராகவும், IEEE ஒளியணுவியல் சங்கத்தின் தகவல் தொழில்நுட்பத்தில் பெண்கள் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.[4]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ஆர்த்தி, இந்தியாவின் புது தில்லியில் பிறந்தவராவார்.[5] 2005 ஆம் ஆண்டில் தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இயற்பியல் பாடப்பிரிவில், அனுராக் சர்மாவுடன் இணைந்து அலை வழிகாட்டிகளில்[6][7] ஒளிப் பரவலைப் படிக்க கணித நுட்பங்களை உருவாக்கியதன் மூலம் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். லண்டன் பல்கலைக்கழகத்தால் ஒளியணுவியல் படிக இழைகளைப் படிப்பதற்காக இவருக்கு ராயல் சொசைட்டி முதுநிலை முனைவர் நிதியுதவி வழங்கப்பட்டது; அங்கேயே படித்து முடித்ததோடு, ஆராய்ச்சியாளர், விரிவுரையாளர் மற்றும் முனைவர் பட்ட ஆலோசகர் என பல்வேறு பரிணாமங்களில் பணியாற்றியுள்ளார்.

ஆய்வும் பணியும்[தொகு]

ஆசிரியர் அல்லது இணைஆசிரியராக இருந்து கணக்கீட்டு ஒளியணுவியல் சம்மந்தப்பட்ட[8] [9] பல்வேறு புத்தகங்களையும் 50 க்கும் மேற்பட்ட மதிப்பாய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். [10] [11] வரையறுக்கப்பட்ட உறுப்பு முறைகள், சூரிய மின்கலங்கள், ஒளியணுவியல் படிக இழைகள், மீச்சிறு ஒளியணுக்கள், பாராக்சியல் அல்லாத ஒளியியல், சூப்பர் கான்டினூம் ஜெனரேஷன் மற்றும் உயிர்மருத்துவப் பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் கொண்ட இவர் இயற்பியல், ஒளியியல் மற்றும் பொறியியல் படிப்புகளை பல்கலைக்கழகங்களில் கற்பித்து வருகிறார்.

விருதுகள்[தொகு]

  • "உலகளாவிய ஒளியியல் மற்றும் ஒளியணுவியல் சமூகம் முழுவதும் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் ஒரு அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக." ஒளியியல் கழகம் மூலம் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்துக்கான போராளிக்கான அங்கீகார விருது[12]
  • ஆஸ்திரேலிய இயற்பியல் நிறுவன உறுப்பினர் [13]
  • ஒளியியல் கழகத்தின் மூத்த உறுப்பினர்,
  • IEEE ஒளியணுவியல் சங்கத்தின் மூத்த உறுப்பினர்
  • "பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய முன்முயற்சிகளின் நாயகனாக ஒளியணுவியல் சங்கத்தின் விதிவிலக்கான பங்களிப்புகளுக்காக." சிறப்புமிக்க சேவை விருது 2020, IEEE ஒளியணுவியல் சங்கத்தின் மூலமாக[14]
  • லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களில் கற்பித்தலில் சிறந்தவர் பட்டம் [15]
  • ஒளியியல் கழகத்தின் தூதர், 2016 [15]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஆர்த்தி தன் பாலினத்தேர்வை ஒரு நேர்பாலீர்ப்பு பெண் என பகிங்கரமாக அடையாளப்படுத்துயுள்ளதோடு [16] [17] [18] மேலும்அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் அடங்கிய ஸ்டெம்(STEM) என்பதின் நநஈதி+ மாணவர்களுக்கு ஆதரவாக பல நிறுவனங்களை நிறுவி, அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் [17] [16] [19] [20] அறிவியல், கொள்கை, சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மை மற்றும் கற்பித்தல் பற்றிய தனிப்பட்ட வலைப்பதிவை அவர் பராமரித்து அதன் மூலமும் கற்பித்து வருகிறார். [21]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dr. Arti Agrawal, Biography, University of Technology Sydney".
  2. "Arti Agrawal, Distinguished Service Award, IEEE Photonics Society".
  3. "Arti Agrawal, Living History, OSA".
  4. "Membership Council, IEEE Photonics Society".
  5. "Arti Agrawal, Interview, SAGE (Science in Australia Gender Equity)". Archived from the original on 2022-01-07. பார்க்கப்பட்ட நாள் 2020-06-13.
  6. Agrawal, Arti (2004). "Paraxial and Non-Paraxial Wave Propagation Through Optical Waveguides, PhD dissertation" (PDF).
  7. Sharma, Anurag; Agrawal, Arti (2004). "New method for nonparaxial beam propagation" (in EN). JOSA A 21 (6): 1082–1087. doi:10.1364/JOSAA.21.001082. பன்னாட்டுத் தர தொடர் எண்:1520-8532. பப்மெட்:15191191. Bibcode: 2004JOSAA..21.1082S. https://www.osapublishing.org/josaa/abstract.cfm?uri=josaa-21-6-1082. 
  8. Recent Trends in Computational Photonics. https://www.springer.com/gp/book/9783319554372. 
  9. "Finite Element Modeling Methods for Photonics, Artech House". Archived from the original on 2020-06-13. பார்க்கப்பட்ட நாள் 2020-06-13.
  10. "Publications of A. Agrawal, CityLibrary, City University of London".
  11. "Arti Agrawal, Profile, ORCiD".
  12. "2020 Diversity & Inclusion Advocacy Recognition Winners".
  13. "Fellows List, Australian Institute of Physics".
  14. "Arti Agrawal, Distinguished Service Award, IEEE Photonics Society".
  15. 15.0 15.1 "Prestigious award for City engineering academic, City University of London News".
  16. 16.0 16.1 "Arti Agrawal, Profile, 500 Queer Scientists".
  17. 17.0 17.1 "Arti Agrawal, Interview, SAGE (Science in Australia Gender Equity)". பார்க்கப்பட்ட நாள் 2020-06-13.
  18. "Arti Agrawal, LGBTQ Faith project".
  19. "We Need to Support Our LGBT Community, IEEE Spectrum". 11 January 2019.
  20. "About GWN Multicultural, LGBTQ+ Women's Network". 5 September 2015.
  21. "artiagrawal".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தி_அக்ரவால்&oldid=3891382" இலிருந்து மீள்விக்கப்பட்டது