உயிர்மருத்துவப் பொறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு செயற்கை இதயம். உயிர்மருத்துவப் பொறியியலின் சாதனையான இவ்விதயம் இயந்திரப் பொறியியல் துணையோடு ஒத்தியங்கக்கூடிய பொருட்களால் இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக செய்யப்பட்டது.
சுமார் 40,000 குறை நுண்ணணிகள், சோதனையுணர்வியால் காட்டப்பட்டவை. ஒன்று மட்டும் பெரிதாக்கப்பட்டுள்ளது.

உயிர்மருத்துவப் பொறியியல் (Biomedical engineering) என்பது பொறியியற் கொள்கைகளையும், மருத்துவக் கொள்கைகளையும் ஒருங்கிணைந்த ஒரு பாடப்பிரிவாகும். பொறியியலின் சிறந்த வடிவமைப்பு மற்றும் தீர்வு தொடர்பான அறிவை மருத்துவத் துறையில் வெற்றிகரமாக செயல்படுத்துவதில் இப்பிரிவு மிக சிறப்பான பங்கு வகிக்கிறது. மேலும் இப்பிரிவின் மூலம் நோய் சிகிச்சை, கண்டறிதல் மற்றும் ஆராய்தல் ஆகியன தொடர்பான மருத்துவம் நன்கு வளர்ந்துள்ளது.

உயிர்மருத்துவப் பொறியியல் அண்மைக் காலத்தில் வளர்ச்சியடைந்த பொறியியல் துறையாகும். புலக்கலப்பு சிறப்புத் துறைகள் ஏற்கனவே நன்கு நிறுவப்பட்டுள்ள நிலையில், இது போன்ற வேறுபட்ட புலங்கள் கலந்து ஏற்படுத்தப்படும் புதிய புலங்கள் வளர்ச்சியின் அடையாளங்கள் ஆகும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் உயிர்மருத்துவப் பொறியியல் தொடர்பான துணைப்பிரிவுகள் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளன. மருத்துவக் கருவிகள் செய்தல், மருத்துவ சிகிச்சை மற்றும் நோய் கண்டறிதல் தொடர்பான முறைகள் மற்றும் கருவிகள், கதிர்வருடிகள், படக்கருவிகள் மற்றும் உணர்விகள் ஆகியன இத்துறையால் கிடைத்த சிறப்பான பயன்பாடுகள் ஆகும்.

உயிர்மருத்துவப் பொறியியலின் துணைப்பாடப் பிரிவுகள்[தொகு]

உயிர்மருத்துவப் பொறியியல் துணைப்பாடப்பிரிவுகள் நிறைந்த துறையாகும். அவற்றுள் கீழ்காண்பவை சிறப்பு வகைகளாக அமைந்துள்ள பாடப்பிரிவுகள் ஆகும்.

 • உயிரியந்திர மின்னணுவியல்
 • உயிர்க்கருவியியல்
 • உயிர்ப்பொருளியல்
 • உயிரியக்கவியல்
 • உயிர்மின்துகளியல்
 • அணு, திசு மற்றும் மரபுப்பொறியியல்
 • மருத்துவப் பொறியியல்
 • மருத்துவப் படமாக்கல்
 • எலும்புசார் உயிர்ப்பொறியியல்
 • மறுவாழ்வுப் பொறியியல்
 • அமைப்புசார் உடலியல்
 • உயிர்மீநுண் தொழிற்நுட்பவியல்
 • நரம்புசார் பொறியியல்