ஆரிஜின் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆரிஜின்
Origin
நூலாசிரியர்டான் பிரவுன்
நாடுஐக்கிய அமெரிக்க மாநிலம்
மொழிஆங்கிலம்
தொடர்ராபர்ட் லாங்டனின்
வகைகுற்றப்புனைவு, மர்மப் புனைவு,அறிவியல் புனைவு, விறுவிறு புனைவு
வெளியீட்டாளர்Doubleday
வெளியிடப்பட்ட நாள்
2017 அக்டோபர்
ஊடக வகைஅச்சு (அட்டைக் கட்டு மற்றும் காகித கட்டு), ஒலிநூல், மின்நூல்.
ISBN978-0-593-07875-4
முன்னைய நூல்இன்பெர்னோ

ஆரிஜின் (Origin) என்பது 2017 ஆண்டய அறிவியல் புனைவு மர்மப் புனைவு ஆகும். இதை எழுதியவர் அமெரிக்க எழுத்தாளரான டான் பிரவுன்[1] ஆவார். இது ராபர்ட் லாங்டன் தொடர் வரிசை புதினங்களில் ஐந்தாவது ஆகும்.  இந்த வரிசையில் இதற்கு முன் வெளிவந்தவை ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ், த டா வின்சி கோட், தி லாஸ்ட் சிம்பல், இன்பெனோ புதினங்கள் ஆகும்.[2] இந்த புத்தகம் 2017 அக்டோபர் 3 அன்று வெளியானது.[3][4]

கதை[தொகு]

கதையின் நாயகர் ‘குறியியல்’ துறைப் பேராசிரியர் ராபர்ட் லாங்டன் ஆவார். இவரின் முன்னாள் மாணவரான எட்மண்ட் கிர்ஷ் தன் 40 வயதிலேயே ஸ்டீவ் ஜாப்ஸ் போல சாதனைகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரராக ஆகிவிட்டவர்.

எட்மண்ட் கிர்ஷ், உலகத்தையே புரட்டிப்போடவிருக்கும், குறிப்பாக சமயங்களின் இடத்தைத் தகர்க்கும் தனது அறிவியல் கண்டுபிடிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடும் நிகழ்ச்சி தொடங்கும் முன் படுகொலை செய்யப்படுகிறார். தன் முன்னாள் மாணவரின் கண்டுபிடிப்பை எப்படியாவது உலகத்தின் முன் வெளிப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ராபர்ட் லாங்டன், ஸ்பெயினின் வருங்காலப் பட்டத்து ராணியான ஆம்ரா பீடலின் உதவியுடனும், வின்ஸ்டன் என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடனும் ஸ்பெயினின் புகழ்பெற்ற கட்டிடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார். எட்மண்டின் பல்ஊடக விளக்கக் கோப்பை திறக்கும் 47 எழுத்துக் கடவுச்சொல்லை (அது ஒரு கவிதை வரி) கண்டுபிடிப்பதற்கான தேடல் வேட்டையில் ஈடுபடுகிறார். இதற்கிடையில், சில கொலைகள் நிகழ்கின்றன. கொலைகளுக்குக் காரணம் யார் என்று இறுதியில் தெரியவரும்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின்மீது வாசகர்களுக்கு பெரும் அச்சம் தோன்றுகிறது.

குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்[தொகு]

  1. Schaub, Michael (May 30, 2017). "New Dan Brown book, 'Origin,' will continue his mega-selling Da Vinci Code series".
  2. Raynor, Madeline (September 28, 2016). "Dan Brown's Origin gets fall 2017 release date".
  3. Flood, Alison (September 28, 2016). "Dan Brown returns to Da Vinci decoder for new novel Origin".
  4. Cowdrey, Katherine (28 September 2016). "New Dan Brown novel Origin out next year".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரிஜின்_(புதினம்)&oldid=2446935" இருந்து மீள்விக்கப்பட்டது