டான் பிரவுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டான் பிரவுன்
பிறப்புடான் பிரவுன்
சூன் 22, 1964 (1964-06-22) (அகவை 59)
எக்ஸிடர், நியூ ஹேம்ப்சயர், அமெரிக்கா.
தொழில்புதின ஆசிரியர்
வகைபரபரப்பு,
மர்மக் கதைப் புனைவு
கையொப்பம்
இணையதளம்
http://www.danbrown.com/

டேனியல் கெர்ஹார்டு பிரவுன் (Daniel Gerhard Brown) (பிறப்பு ஜூன் 22, 1964) என்பவர் ஒரு அமெரிக்க பரபரப்புப் புதின எழுத்தாளர. இவருடைய இராபெர்ட் லாங்டன் புதினங்களான ஏஞ்சல்ஸ் அன்ட் டீமன்ஸ் (2000) , தி டாவின்சி கோட் (2003), தி லாஸ்ட் சிம்பல் (2009), இன்ஃபெர்னொ (2013), ஆரிஜின்(2017), ஆகியவற்றை எழுதியதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். இவரது கதைகள் அனைத்துமே 24 மணி நேரத்தில் பொக்கிசங்களை கண்டறிவதாக அமைந்திருக்கும்.[1] அமையும் புதையல் வேட்டைகளாக அமைந்த பிரவுனின் புதினங்களில் ரகசிய குறியீடுகள், சாவிகள், அடையாளங்கள், மறையீடாக்கம் மற்றும் ரகசிய சதி கருத்துகள் தொடர்ந்து இடம்பிடிக்கும். 40க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இவரது புதினங்கள் 2009 நிலவரப்படி 80 மில்லியன் பிரதிகளுக்கும் அதிகமாய் விற்றுத் தீர்ந்துள்ளன.

ராபர்ட் லேங்டனை பிரதான பாத்திரமாகக் கொண்டு வரும் பிரவுனின் புதினங்களில் வரலாற்று அம்சங்களும் கிறிஸ்தவமும் தொடர்ந்து வரும் கருத்துகளங்களாக இடம்பெற்றிருக்கும். இதன் விளைவாக, இவை சர்ச்சைகளை உருவாக்கியிருக்கின்றன. தனது புத்தகங்கள் கிறிஸ்தவ விரோதமானவை அல்ல என்றும், தானே ‘தொடர்ந்து ஆன்மீக பயணத்திற்குள்’ செல்பவன் தான் என்றும் தனது இணையதளத்தில் தெரிவிக்கும் பிரவுன் தி டாவின்சி கோட் புத்தகம் பற்றி கூறுகையில், அது “ஆன்மீக கருத்துவிவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு பொழுதுபோக்கு கதை மட்டுமே” என்றும் இப்புத்தகம் “நமது நம்பிக்கையை சுயபரிசோதனை செய்து கொள்வதற்கும் ஆய்வதற்கும் ஒரு நேர்மறையான வினையூக்கியாக” நேர்மறையான வகையில் பயன்படுத்திக் கொள்ளப்பட முடியும் என்றும் தெரிவிக்கிறார்.[2]

தாக்கங்கள்[தொகு]

சிட்னி ஷெல்டன், ஷேக்ஸ்பியர், ராபர்ட் லுட்லம், ஹர்லான் கோபென்,

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

டான் பிரவுன் அமெரிக்காவின் நியூ ஹாம்ப்சயர் மாநிலத்தில் உள்ள எக்ஸிடரில் பிறந்தார், வளர்ந்தார். மூன்று குழந்தைகளில் மூத்தவர் இவர் தான். பிரவுன் பிலிப்ஸ் எக்ஸிடெர் அகாதமி வளாகத்தில் வளர்ந்தார். இவரது தந்தை ரிச்சர்டு ஜி.பிரவுன் இங்கு கணிதத்தில் கவுரவப் பேராசிரியராய் பணிபுரிந்து வந்தார். அவர் 1968 ஆம் ஆண்டு துவங்கி 1982 ஆம் ஆண்டில் ஓய்வுபெறும் வரை பாடப்புத்தகங்களை எழுதி வந்தார்.[3][4] பிரவுனின் பெற்றோர் இருவருமே பாடகர்கள்/இசைக் கலைஞர்கள் திருச்சபையில் இசைக்குழு சேவை செய்தனர், பிரவுனின் தாய் திருச்சபையில் கருவியிசைப்பவராக சேவை செய்தார்.[5] பிரவுன் ஒரு எபிஸ்கோபலியன் ஆக வளர்க்கப்பட்டார்.[3]

ஒரு குழந்தையாக வளர்கையில் இவர் வீட்டில் கண்டவை தான் ரகசியங்கள் மற்றும் புதிர்களில் பிரவுனின் ஆர்வம் வளர்வதற்கு காரணமாய் அமைந்தது. இவரது பெற்றோர் வேலை பார்த்த கணிதம், இசை மற்றும் மொழி ஆகிய துறைகளை பிணைக்கிற அச்சாணி போல் ரகசிய அடையாளங்களும் குறியீடுகளும் இருந்ததை இவர் கண்டிருக்கிறார். எழுத்து மாறிய வார்த்தைகள் மற்றும் குறுக்கெழுத்துப் புதிர்களுடன் இளம் வயது பிரவுன் ஏராளமான நேரம் செலவிட்டார். பிரவுனும் உடன்பிறந்தவர்களும் பிறந்த நாள் மற்றும் விடுமுறை நாட்களில் தமது தந்தையால் வடிவமைக்கப்படும் விரிவான புதையல் வேட்டை விளையாட்டுகளில் பங்கெடுப்பார்கள். உதாரணமாக, கிறிஸ்துமஸை ஒட்டி, பிரவுன் மற்றும் அவரது சகோதரர்க்கெல்லாம் மரத்தின் அடியில் பரிசுப் பொருட்கள் இருக்காது, மாறாக ஒரு புதையல் வரைபடம் இருக்கும், அதில் வீடு முழுக்கவும் மற்றும் நகரிலும் கூட அங்கங்கு குறியீடுகளும் துப்புகளும் ஒளிந்திருக்கும். அவற்றில் இருந்து பரிசுப்பொருட்கள் இருக்கும் இடத்தை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.[6] பிரவுன் மற்றும் அவரது தந்தைக்கு இடையிலான உறவு தான் தி டாவின்சி கோடில் வரும் சோபி நெவு மற்றும் ஜாகஸ் சானிர் பாத்திரங்களுக்கு பாதையமைத்தது. அந்த புதினத்தின் 23வது அத்தியாயம் அவரது சிறுவயது புதையல் வேட்டை சம்பவம் ஒன்றை மனதில் கொண்டு அமைக்கப்பட்டதாகும்.[7]

பிலிப்ஸ் எக்ஸிடெரில் இருந்து பட்டம் பெற்றதும், பிரவுன் அமெர்ஸ்ட் கல்லூரியில் பங்குபெற்றார். இங்கு இவர் ப்ஸி உப்ஸிலான் கூட்டத்தின் உறுப்பினராய் இருந்தார். ஸ்குவாஷ் விளையாடுவார், அமெர்ஸ்ட் க்ளீ கிளப்பில் பாடினார், அத்துடன் விருந்தினராக வரும் புதின ஆசிரியரான ஆலன் லெல்சக்கிற்கு எழுதும் மாணவராய் இருந்தார். 1985 பள்ளி ஆண்டை ஸ்பெயின் நாட்டின் செவில்லியில் பிரவுன் செலவிட்டார். இங்கு செவில்லி பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்று படிப்பில் அவர் பதிவு செய்து கொண்டார்.[6] 1986 ஆம் ஆண்டில் அமெர்ஸ்டில் இருந்து பிரவுன் பட்டம்பெற்றார்.[8]

பாடலாசிரியர் மற்றும் பாப் பாடகர்[தொகு]

அமெர்ஸ்டில் இருந்து பட்டம்பெற்றதும், பிரவுன் இசை வாழ்க்கையிலும் கால்வைத்தார். ஸிந்த்அனிமல்ஸ் என்ற தலைப்பில் ஒரு குழந்தைகள் இசைநாடாவை தானே உருவாக்கினார். “ஹேப்பி ஃபிராக்ஸ்” மற்றும் “சுஸுகி எலிஃபெண்ட்ஸ்” போன்ற இசைத்தடங்களின் ஒரு தொகுப்பு இதில் இடம்பெற்றிருந்தது. இது சில நூறு பிரதிகள் மட்டுமே விற்றது. அதன் பின் டாலியான்ஸ் என்ற பெயரில் தனது சொந்த இசைத்தட்டு நிறுவனத்தை இவர் உருவாக்கினார். 1990 ஆம் ஆண்டில் பெர்ஸ்பெக்டிவ் என்ற பெயரில் ஒரு குறுந்தகடை தானே வெளியிட்டார். வயதுமுதிர்ச்சியுற்றவர்களை மனதில் கொண்டு வெளியான இதுவும் சில நூறு பிரதிகள் மட்டுமே விற்றது.

1991 ஆம் ஆண்டில் பாடகர்-பாடலாசிரியர் மற்றும் பியானோ கலைஞராக தனது தொழில்வாழ்க்கையைத் தொடரும் பொருட்டு அவர் ஹாலிவுட்டுக்கு இடம்பெயர்ந்தார். தனக்கு பொருள் ஆதரவிற்காக, பெவெர்லி ஹில்ஸ் தயாரிப்பு பள்ளியில் அவர் வகுப்புகள் கற்பித்தார்.

பாடலாசிரியர்களுக்கான தேசிய அகாதமியிலும் அவர் இணைந்தார். அதன் பல நிகழ்வுகளிலும் பங்குபெற்றார். அங்கு தான் அகாதமியின் கலைஞர் மேம்பாட்டுக்கான இயக்குநராய் இருந்த தனக்கு 12 ஆண்டுகள் மூத்த ப்ளைத் நியூலானை அவர் சந்தித்தார். அதிகாரப்பூர்வமாய் தனது வேலையின் ஒரு பகுதி இல்லையென்றாலும், பிரவுனின் படைப்புகளை விளம்பரப்படுத்த உதவும் அசாதாரண பணியை அவர் எடுத்துக் கொண்டார்; செய்தி வெளியீடுகளை எழுதினார், விளம்பர நிகழ்வுகளை ஏற்பாடு செய்தார், பிரவுனின் தொழில்வாழ்க்கைக்கு ஏற்றமளிக்கக் கூடிய நபர்களுடன் அவருக்கு சந்திப்பை ஏற்பாடு செய்தார். அப்பெண்மணிக்கும் பிரவுனுக்கும் இடையில் ஒரு அந்தரங்க உறவும் உருவானது. இது அவர்களது உடனிருந்தவர்களுக்குக் கூட 1993 ஆம் ஆண்டும் வரை தெரிந்திருக்கவில்லை. அந்த ஆண்டில் பிரவுன் நியூ ஹாம்ப்ஷயருக்கு மீண்டும் திரும்பிய போது, அவருடன் பிளைத்தும் செல்லவிருப்பது தெரியவந்தது. அவர்கள் நியூ ஹாம்ப்ஷயரின் கான்வே பகுதிக்கு அருகில் உள்ள பீ போரிடிஜ் பாண்டில் 1997 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.[9]

1993 ஆம் ஆண்டில், தனது பெயரிலான டான் பிரவுன் என்னும் குறுந்தகடினை வெளியிட்டார். இதில் “976 லவ்” மற்றும் “இஃப் யூ பிலீவ் இன் லவ்” ஆகியவை உள்ளிட்ட பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

1994 இல், ஏஞ்சல்ஸ் & டெமான்ஸ் என்று தலைப்பிட்ட ஒரு குறுந்தகடை பிரவுன் வெளியிட்டார். ஓவியரான ஜான் லேங்டன் இதில் உருவாக்கித் தந்த அதே கலையெழுத்து வடிவம் தான் பின்னர் ஏஞ்சல்ஸ் & டெமான்ஸ் புதினத்திலும் பயன்படுத்தப்பட்டது. “தளர்ச்சியில்லாத இணைஎழுத்தாளராக, இணைதயாரிப்பாளராக, இரண்டாம் பொறியாளராக, மற்றும் சிகிச்சையாளராக” இருந்த தனது துணைவிக்கு நன்றி தெரிவிக்கும் வாசகங்களும் மீண்டும் அதில் இடம்பெற்றிருந்தன. “ஹியர் இன் தீஸ் ஃபீல்ட்ஸ்” மற்றும் ஆன்மீக ரீதியான “ஆல் ஐ பிலீவ்” போன்ற பாடல்களை இந்த குறுந்தகடு உள்ளடக்கியிருந்தது.[10]

பிரவுன் மற்றும் பிளைத் நியூ ஹாம்ப்ஷயரில் இருக்கும் பிரவுனின் தாய் நகரத்துக்கு 1993 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்தனர். படித்த இடமான பிலிப்ஸ் எக்ஸிடெரிலேயே ஆங்கில ஆசிரியரான பிரவுன், ஹாம்ப்டன் ஃபால்ஸில் சுமார் 250 மாணவர்களுடன் 8 ஆம் வகுப்பு வரை கொண்டிருந்த ஒரு சிறிய பள்ளியான லிங்கன் ஆகெர்மென் பள்ளியில் 6வது, 7வது, மற்றும் 8வது வகுப்பு பிள்ளைகளுக்கு ஸ்பேனிஷ் வகுப்புகள் எடுத்தார்.[11]

எழுத்துப் பணி[தொகு]

1993 ஆம் ஆண்டில் டஹிதியில் விடுமுறையில் இருந்த சமயத்தில்,[6] தி டூம்ஸ்டே கான்ஸ்பிரசி என்னும் சிட்னி ஷெல்டன் புதினத்தை பிரவுன் படித்தார், அதற்குப் பின் ஒரு பரபரப்புக் கதை எழுத்தாளர் ஆகும் ஆசை அவருக்கு உந்தியது.[6][12][13] டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் உருவாக்குவதில் வேலையைத் துவங்கினார். கதைக்களமாய் அதிகம் இருந்தது இவர் 1985 வாக்கில் படித்து வந்திருந்த ஸ்பெயினின் ஸெவில்லி ஆகும். ”டேனியல் பிரவுன்” என்கிற புனைப்பெயரின் கீழ் 187 மென் டூ அவாய்ட்: எ கைட் ஃபார் தி ரொமாண்டிக்கலி ஃப்ரஸ்ட்ரேடட் வூமன் என்கிற ஒரு நகைச்சுவை புத்தகத்தை தனது மனைவியுடன் சேர்ந்து எழுதினார். இந்த புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பு இவ்வாறு கூறுகிறது: “டேனியல் பிரவுன் இப்போது நியூ இங்கிலாந்தில் வசிக்கிறார்: பள்ளியில் கற்பித்துக் கொண்டு, புத்தகங்கள் எழுதிக் கொண்டு, மனிதர்களைத் தவிர்த்துக் கொண்டு.” பதிப்புரிமை டான் பிரவுனுக்கு உரிமைப்பட்டதாய் இருந்தது.

1996 இல் முழு நேர எழுத்தாளராகும் பொருட்டு தனது ஆசிரியர் வேலையை பிரவுன் துறந்து விட்டார். டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் 1998 இல் வெளியிடப்பட்டது. அவரது மனைவி ப்ளித் தான் செய்தி வெளியீடுகளை ஏற்பாடு செய்வது, கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பிரவுனை பங்கேற்க செய்வது, மற்றும் செய்தியாளர் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்வது என இந்த புத்தகத்தின் விளம்பர வேலைகளைப் பார்த்துக் கொண்டார். சில மாதங்கள் கழித்து, பிரவுனும் அவரது மனைவியும் சேர்ந்து தி பால்ட் புக் என்னும் இன்னுமொரு நகைச்சுவை புத்தகத்தை வெளியிட்டனர். அதிகாரப்பூர்வமாக இந்த புத்தகம் அவரது மனைவி எழுதியதாகக் குறிப்பிடப்பட்டது, ஆனாலும் வெளியீட்டாளரின் ஒரு பிரதிநிதி அது அடிப்படையாக பிரவுன் மூலம் எழுதப்பட்டது தான் என்று தெரிவித்தார். அதனையடுத்து டிசெப்ஷன் பாயிண்ட் மற்றும் ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் புத்தகங்களை பிரவுன் எழுதினார். பிந்தையதில் தான் தலைமை பாத்திரமான ஹார்வர்டு குறியீட்டுத்துறை நிபுணர் ராபர்ட் லேங்டன் பாத்திரம் முதன்முதலில் இடம்பெற்றது.

பிரவுனின் முதல் மூன்று புதினங்களும் குறைவான வெற்றிகளையே பெற்றன. ஒவ்வொன்றும் 10,000க்கும் குறைவான பிரதிகளே விற்றன. இவரது நான்காவது புதினமான தி டாவின்சி கோட் மிகச் சிறப்பாய் விற்பனையானது, 2003 இல் புத்தகம் வெளிவந்த முதல் வாரத்திலேயே நியூயார்க் டைம்ஸ் சிறந்த விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. 2009 நிலவரப்படி உலகெங்கிலும் 81 மில்லியன் பிரதிகள் விற்றிருக்கும் நிலையில், இப்போது, எல்லா காலத்திலும் மிகப் பிரபலமாய் இருந்த புத்தகங்களில் ஒன்றாக குறிப்பிடப்படும் பெருமையைப் பெற்றிருக்கிறது.[14][15] இப்புத்தகத்தின் வெற்றி பிரவுனின் முந்தைய புத்தகங்களின் விற்பனையும் அதிகரிக்க உதவியிருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் இவரது நான்கு புதினங்களுமே ஒரே வாரத்தில் நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் இடம்பிடித்திருந்தன,[16] 2005 ஆம் ஆண்டில், டைம் இதழ் வெளியிட்ட அந்த ஆண்டின் 100 மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் அவருக்கு இடம் கிடைத்தது. ஃபோர்ப்ஸ் இதழ் 2005 இதழில் வெளியிட்ட “பிரபலங்கள் 100” பட்டியலில் பிரவுனுக்கு 12வது இடம் கிட்டியது. அவரது வருடாந்திர வருவாய் 76.5 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டிருந்தது. டாவின்சி கோட் விற்பனை மூலமான அவரது வருவாய் 250 மில்லியன் டாலர் என தி டைம்ஸ் மதிப்பிட்டது.

ராபர்ட் லேங்டன் இடம்பெற்ற பிரவுனின் மூன்றாவது புதினமான தி லாஸ்ட் சிம்பல் செப்டம்பர் 15, 2009 அன்று வெளியிடப்பட்டது.[17] வெளியீட்டாளர் கூறிய விபரங்களின் படி, தனது வெளியீட்டின் முதல்நாளில் இந்த புத்தகம் அட்டை வடிவம் மற்றும் இணைய-புத்தக வடிவத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாய் விற்றது. இதனையடுத்து முதல் பதிப்பில் அச்சிட்ட ஐந்து மில்லியன் பிரதிகளுக்கு கூடுதலாக 600,000 பிரதிகள் அச்சிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.[18] இந்த புத்தகத்தின் கதைக்களம் வாஷிங்டன் டி.சி. பகுதியில் 12 மணி நேர கால அளவுக்குள் நடப்பதாய் அமைக்கப்பட்டுள்ளது. ஃப்ரீமேஷன்ஸ் இதில் இடம்பெறுகிறது. வர்ஜினியாவின் லாங்லியில் இருக்கும் சிஐஏ தலைமையகத்தில் உள்ள க்ரிப்டோஸ் சிற்பம் குறித்த இரண்டு குறிப்புகள் உட்பட சில புதிர்கள் தி டாவின்சி கோட் புத்தக அட்டைக்குள் ஒளிந்திருக்கின்றன என்றும், அவை இந்த சம்பவ தொடர்ச்சி குறித்த குறிப்புகளை கொண்டிருப்பதாகவும் பிரவுனின் விளம்பர இணையத் தளம் கூறுகிறது. பிரவுனின் ஆரம்ப படைப்புகளில் இருந்தான ஒரு கருப்பொருளை இது மீண்டும் கொண்டுவருகிறது. உதாரணமாக, டிஸெப்ஷன் பாயிண்ட் புத்தகத்தின் நிறைவில் உள்ள ஒரு புதிரை விடுவித்தால் “தி டாவின்சி கோட் மேலெழும்” என்கிற செய்தியைத் தருகிறது.[9]

வருங்காலத்தில் ராபர்ட் லேங்டன் இடம்பெறும் சுமார் 12 புத்தகங்களுக்கான கரு தன்னிடம் இருப்பதாக பிரவுன் கூறியிருக்கிறார்.[19]

பிரவுனின் புத்தகங்களில் வரும் பாத்திரங்கள் பல சமயங்களில் அவரது உண்மை வாழ்க்கையில் வரும் பெயர்களைத் தாங்கியிருக்கும். ஏஞ்சல்ஸ் & டெமான்ஸ் குறுந்தகடு மற்றும் புதினத்தில் பயன்படுத்தப்பட்ட கலையெழுத்து வடிவங்களை உருவாக்கிய ஓவியரான ஜான் லேங்டனின் பெயரில் தான் ராபர்ட் லேங்டன் பாத்திரம் உருவாக்கப்பட்டது. “ஆன் எ க்ளெய்ர் டே” கார்ட்டூனிஸ்ட் நண்பரான கார்லா வெண்ட்ரெஸ்காவின் பெயரில் கேமர்லெங்கோ கார்லோ வெண்ட்ரெஸ்கா பெயர் இடப்பட்டது. வாடிகன் ஆர்கைவ்ஸ் புத்தகத்தில், லேங்டன் டிக் மற்றும் கோனி ஆகிய இரண்டு பேரின் திருமணத்தை நினைவுகூருகிறார். இவை அவரது பெற்றோரின் பெயர்களாகும். ராபர்ட் லேங்டனின் எடிட்டராக வரும் ஜோனாஸ் ஃபாக்மேன் என்கிற பெயர் பிரவுனின் உண்மை வாழ்க்கை எடிட்டரான ஜேசன் கவுஃப்மேனில் இருந்து வருவதாகும். நியூ ஹாம்ப்ஷயர் நூலகர், மற்றும் ஆண்ட்ரி வெர்னெட் எனும் ஒரு எக்ஸிடெர் பிரெஞ்சு ஆசிரியர் ஆகியோரின் அடிப்படையிலும் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டதாக பிரவுன் தெரிவித்திருந்தார். ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸில் வரும் கார்டினல் அல்டோ பேகியா, பிலிப்ஸ் எக்ஸிடெர் அகாதமியில் நவீன மொழிகள் கற்பிப்பவராய் வரும் அல்டோ பேகியாவின் பேரால் வைக்கப்பட்டதாகும்.

தனது மனைவி ஒரு கலை வரலாற்று ஆசிரியர் மற்றும் ஓவியர் என்று பேட்டிகளில் பிரவுன் தெரிவித்திருக்கிறார். இவர்கள் முதலில் சந்தித்தபோது, அப்பெண் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பாடலாசிரியர்களுக்கான தேசிய அகாதமியில் கலை மேம்பாட்டு இயக்குநராக இருந்தார். தி டாவின்சி கோட் பதிப்புரிமை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட 2006 வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்த சமயத்தில் ப்ளித் இந்த புத்தகத்திற்காக ஆய்வுகள் செய்திருந்தது தெரிய வந்தது.[20] ஒரு அறிக்கையில் அவர் “தலைமை ஆய்வாளராய்” குறிப்பிடப்படுகிறார்.[21]

தாக்கங்கள் மற்றும் பழக்கங்கள்[தொகு]

சிட்னி ஷெல்டன் தவிர, தனது எழுத்துகளை பாதித்த இன்னும் ஏராளமான இலக்கிய தாக்கங்கள் குறித்தும் டான் பிரவுன் வெளிப்படையாய் தெரிவித்திருக்கிறார். ஷேக்ஸ்பியரின் மச் அடூ எபவுட் நத்திங் பற்றி பேசுகையில் அதன் நகைச்சுவை மற்றும் பகடி குறித்து அவர் மிகவும் சிலாகிக்கிறார்: “ஒரு ஆங்கில ஆசிரியராக மாறி அதனைக் கற்றுக் கொடுக்கும் வரை மச் அடூ எபவுட் நத்திங் என்னும் இந்த நாடகம் எவ்வளவு ரசனை மிக்கதாய் இருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டிருக்கவில்லை. அதனை விட நகைச்சுவையானது எங்குமில்லை."[22] தனது சொந்த நண்பரும், புதிர் எழுத்து ஆசிரியருமான ஹர்லான் கோபென், மற்றும் ராபர்ட் லுட்லமின் போர்னெ புத்தக வரிசைகளையும் அவர் பட்டியலிடுகிறார். லுட்லம் குறித்து குறிப்பிடுகையில், “லுட்லமின் புத்தகங்கள் சிக்கலானவை, அழகானவை, ஆயினும் மின்னல் வேகத்தில் செல்பவை. பெரிய கருத்து, சர்வதேச பரபரப்புக் கதைகள் வகையில் எனக்கு ஆர்வம் ஏற்படுத்தியது இந்த புத்தக வரிசை.”[23] தன்னுடைய சாதாரண வாழ்க்கையில் இருந்து அகற்றப்பட்டு ஒரு புதிய வாழ்க்கைக்குள் நுழையும் நாயகர்கள், வலிமையுடனான பெண் பாத்திரங்கள், சுவாரஸ்யமான இடங்களுக்கு பயணம் செய்தல் மற்றும் கதை நடைபெறும் 24 மணி நேர கால அளவு இவையெல்லாம் பிரவுன் தனது புதினங்களில் பொதுவாய் தொடர்ந்து நுழைக்கும் அம்சங்களாகும்.[1]

இவரது புதினங்கள் ஆராய்ச்சி செறிந்தனவாய் இருப்பதால், பிரவுன் அவற்றை எழுதுவதற்கு இரண்டு ஆண்டுகள் வரை செலவிடுவார். இத்தகைய படைப்புகளில் கவனத்தை குவிப்புடன் கொண்டிருப்பதற்காக, இத்தகைய புதினத்திற்கான கருவை (இதனை அவர் “பெரிய சிந்தனை” என்று குறிப்பிடுகிறார்) மற்றும் அதன் விஷயத்தை தேர்வு செய்யும்போது, அவை தனக்கு ஆர்வமூட்டுபவையாக இருக்குமாறு பிரவுன் பார்த்துக் கொள்கிறார். பிரவுனின் பார்வையில், சரியான கருத் தலைப்பு என்பது எளிதாய் சரி அல்லது தவறு என்று வரையறுக்கத்தக்கதாய் இருப்பதில்லை, மாறாக ஒரு விவாதத்திற்கு அழைத்துச் செல்லக் கூடிய ஒரு தார்மீக ஆய்வுப் பகுதியை வழங்க வேண்டும். குறியீடுகள், புதையல் வேட்டைகள், ரகசிய அமைப்புகள் மற்றும் தெளிவற்ற விஷயங்கள் மீதான சித்தாந்த உரைகள் எல்லாம் இவரது பிடித்த விஷயங்களாய் இருப்பதால், இவற்றை தனது புதினங்களில் கொண்டுவர விரும்புவார். எழுத்து என்பது தொடர்ந்த பழக்கத்தில் இருக்க வேண்டிய ஒரு கலை என பிரவுன் கருதுவதால், தனது திறன்களை பராமரிப்பதற்கான பயிற்சிகளை அவர் தொடர்ந்து மேற்கொள்வார். காலை 4 மணிக்கு இவர் எழுந்தாரென்றால் எந்த கவனச் சிதறலும் இருக்காது. (டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் எழுதும் சமயத்தில் பகல் சமயத்தில் அவருக்கு இரண்டு கற்பித்தல் வேலைகள் இருந்ததால் இப்பழக்கம் ஏற்பட்டது) அத்துடன் அவர் உற்பத்தித்திறன் உச்சத்தில் இருப்பதாய் உணர்வார். ஒவ்வொரு நாளும் முதல் வேலையாக அதனைச் செய்வது என்பது அடையாளரீதியாய் முக்கியத்துவம் அளிக்கிறது என்பதே அதன் காரணம். பழமையான மணிக்குடுவையை தனது மேஜை மீது வைத்திருப்பார். ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு உடல் பக்குவப் பயிற்சிகள் மற்றும் நீட்டும் பயிற்சிகள் எல்லாம் செய்து ரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக்கிக் கொள்வார்.[24] பிரவுன் எழுதுவதை தனது மேல்தளத்தின் சிறு அறையில் தான் உட்கார்ந்து செய்கிறார். எழுத்தாளரின் முட்டுமுனை நிலையை சமாளிக்க தான் தலைகீழ் சிகிச்சைமுறையைப் பயன்படுத்துவதாகவும் இவர் தனது ரசிகர்களிடம் தெரிவித்திருக்கிறார். புவியீர்ப்பு காலணிகளைப் பயன்படுத்தும் இவர் கூறுகிறார்: “மேலிருந்து கீழாய் தொங்குவது எனது ஒட்டுமொத்த பார்வையையும் மாற்றி கதைக்கள சவால்களை தீர்க்க உதவியாய் இருக்கிறது.”[25]

திரைப்பட தழுவல்கள்[தொகு]

2006 ஆம் ஆண்டில், பிரவுனின் தி டாவின்சி கோட் புதினம் கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில் திரைப்படமாய் வெளியானது. ரோன் ஹோவார்டு இதனை இயக்கினார். இந்த படத்தில் ராபர்ட் லேங்டன் வேடத்தில் டோம் ஹாங்க்ஸ், சோஃபி நெவு வேடத்தில் ஆட்ரி டௌடோவ் மற்றும் சர் லே டீபிங் வேடத்தில் சர் இயன் மெக்கெலன் ஆகியோர் நடித்தனர். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியதோடு 2006 கேன்ஸ் திரைப்பட விழாவில் துவக்கமாய் திரையிடப்பட்டது என்றாலும், மொத்தமாய் இது சராசரிக்கும் குறைந்த வரவேற்பையே பெற்றது. திரைப்பட விமர்சன தொகுப்பு இணையதளமான ராடன் டொமடோஸ், எடுத்துக் கொண்ட 214 விமர்சனங்களில் 165 எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று தற்போதைய மதிப்பீட்டில் 24% மதிப்பீட்டை பெற்றுள்ளதாய் தெரிவித்தது.[26] பின்னர் எபெர்ட் & ரோபெரில் [27] 2006 ஆம் ஆண்டின் மோசமான படங்கள் வரிசையில் இப்படம் பட்டியலிடப்பட்டது. ஆனாலும் அந்த ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய இரண்டாவது படமாக ஆனது. உலகெங்கிலும் 750 மில்லியன் டாலர் தொகையை வசூல் செய்து கொடுத்தது.[28] தி டாவின்சி கோட் திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்களில் ஒருவராகப் பட்டியலிடப்பட்ட பிரவுன் இந்த படத்திற்காக கூடுதல் குறியீடுகளையும் உருவாக்கினார். பிரவுன் எழுதி நடித்த “பியனோ” என்கிற அவரது ஒரு பாடல் இந்த படத்தின் இசைத்தடத்தின் பகுதியாய் இடம்பெற்றது. படத்தில், ஆரம்ப புத்தக கையெழுத்திடும் காட்சிகளில் ஒன்றில் பிரவுனும் அவரது மனைவியும் பின்புலத்தில் இருப்பதைக் காண முடியும்.

அடுத்த படமான ஏஞ்சல்ஸ் & டெமான்ஸ் மே 15, 2009 அன்று வெளியானது. இதிலும் ஹோவார்டு மற்றும் ஹாங்க்ஸ் நடித்தனர். முந்தைய படத்தை விட இப்படத்திற்கு விமர்சகர்கள் சற்று அனுதாபம் காட்டினர் என்றாலும் இப்படமும் பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களையே பெற்றது. As of செப்டம்பர் 2009 ரோடன் டொமடோஸ் தளத்தில் இது 36% மதிப்பீட்டைக் கொண்டிருக்கிறது.[29]

பதிப்புரிமை மீறல் வழக்குகள்[தொகு]

2006 ஆகஸ்டில், உள்ளடக்கத்தை திருடியதாகக் கூறி எழுத்தாளர் லூயிஸ் பெர்ட்யூ பிரவுன் மீது வழக்கு தொடுத்தார். தி டாவின்சி கோட் புத்தகத்திற்கும் தனது புதினங்களான தி டாவின்சி லெகஸி (1983) மற்றும் டாட்டர் ஆஃப் காட் (2000) புத்தகங்களுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகளைக் காண முடியும் என்று அவர் வாதிட்டார். ஆனால் அவரது தரப்பு வெற்றி பெறவில்லை. நீதிபதி ஜார்ஜ் டேனியல்ஸ் கூறியதன் ஒரு பகுதி இவ்வாறு கூறியது: “ஒரு கண்ணியமான சராசரி மனிதர் இதனை கவனித்து ஒப்பிட்டுப் பார்த்தால் தி டாவின்சி கோட் புத்தகம் டாட்டர் ஆஃப் காட் புத்தகத்திற்கு நிறைய ஒத்திருப்பதாய் முடிவுக்கு வர மாட்டார்.”[30]

2006 ஏப்ரலில், எழுத்தாளர்கள் மைக்கேல் பெய்ஜெண்ட் மற்றும் ரிச்சர்டு லே தன் மீது கொண்டுவந்த பதிப்புரிமை மீறல் வழக்கில் பிரவுன் வெற்றி பெற்றார். தாங்கள் 1982 ஆம் ஆண்டில் எழுதிய வரலாற்றுப் புனைவு நூலான ஹோலி பிளட் ஹோலி கிரெய்ல் புத்தகத்தில் இருந்து பிரவுன் தனது 2003 புதினமான தி டாவின்சி கோட் புத்தகத்திற்கு கருத்துகளை திருடியதாக அவர்கள் தங்களது வழக்கில் தெரிவித்திருந்தனர். ஹோலி பிளட் ஹோலி கிரெய்ல் புத்தகத்தில் தான் பெய்ஜெண்ட், லே மற்றும் இணையாசிரியர் ஹென்ரி லிங்கன் ஆகியோர் யேசுவும் மேரி மெக்டலீனும் திருமணம் செய்து கொண்டனர் என்றும் அவர்களுக்கு ஒரு குழந்தை உண்டு என்றுமான ஒரு கருத்தை முன்னெடுத்தனர். அதன் மீதான சர்ச்சை இன்று வரை தொடர்கிறது. இந்த இரண்டு ஆசிரியர்களின் பெயர்களையும் கூட பிரவுன் தனது புத்தகத்தில் மறைமுகமாய்க் குறிப்பிடுகிறார். புதினம் மற்றும் படம் இரண்டிலுமே தலைமைப் பாத்திரமாக வரும் லே டீபிங், லேயின் பெயரை முதல் பெயராய் பயன்படுத்துகிறார். தனது கடைசிப் பெயரை பெய்ஜெண்டின் பெயரில் இருந்து எழுத்து மாற்றி தருவித்துக் கொள்கிறார். திரு ஜஸ்டிஸ் பீட்டர் ஸ்மித் பிரவுனின் தரப்பில் நியாயம் இருப்பதாகக் கருதியதோடு, தனது சொந்த மகிழ்ச்சியில், எழுதிய தீர்ப்பில் தனது சொந்த ஸ்மித்தி குறியீடையும் பொதித்து வைத்தார்.[31]

2007 மார்ச் 28 அன்று பிரவுனின் நூல் வெளியீட்டாளரான ரேண்டம் ஹவுஸ் பதிப்பகத்தார் பதிப்புரிமை மீறல் வழக்கின் மேல்முறையீட்டிலும் வென்றனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மேல்முறையீட்டு நீதிமன்றம் பெய்ஜெண்ட் மற்றும் லேயின் முயற்சிகளை நிராகரித்தது. அத்துடன் சுமார் 6 மில்லியன் டாலர்கள் சட்டச் செலவுகளுக்கும் அவர்களை பொறுப்பாளிகளாக்கியது.[32] இந்த ஆசிரியர்கள் தங்களது படைப்புகளை புனைவு அல்லாத வகையாக வழங்கியிருந்தனர் என்பது இந்த வழக்கின் தீர்ப்பிற்கு ஒரு முக்கியமான காரணியாய் அமைந்தது. பொதுவாக புனைவு எழுதுபவர்கள் புனைவு அல்லாத எழுத்துகளில் இருந்து உள்ளடக்கத்தை ஆய்வு செய்வது வழக்கமான ஒன்று தான்.

கொடைப்பணி[தொகு]

அக்டோபர் 2004 இல், பிரவுன் மற்றும் அவரது சகோதரர்கள் பிலிப்ஸ் எக்ஸிடெர் அகாதமிக்கு தங்களது தந்தையை நினைவுகூரும் விதமாக, “உதவி அவசியப்படும் மாணவர்களுக்கு கணினிகள் மற்றும் உயர்தொழில்நுட்ப சாதனங்களை வழங்க” உதவும் ரிச்சர்டு ஜி.பிரவுன் தொழில்நுட்ப கொடைநிதியை அமைப்பதற்கு 2.2 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையளித்தனர்.[33]

விமர்சனம்[தொகு]

பிரவுனின் உரைநடை குழப்பமாய் அமைந்திருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.[34] டாவின்சி கோட் புத்தகத்தின் முன்னுரையில், ஓபஸ் டேய் மற்றும் பிரையாரிட்டி ஆஃப் ஸியோன் ஆகியவை தொடர்பான உண்மைகளின் அடிப்படையில் இந்த புதினம் அமைந்ததாகவும் ”புதினத்தில் காணப்படும் கலைப்படைப்பு, கட்டுமானக் கலை, ஆவணங்கள் மற்றும் ரகசிய சடங்குகள் குறித்த அனைத்து விவரிப்புகளும் துல்லியமானவை” என்றும் பிரவுன் கூறுவது குறித்து அநேக சர்ச்சைகள் மையம் கொண்டிருக்கின்றன.[35][36]

2009 செப்டம்பரில், தி டுடே ஷோ நிகழ்ச்சியில் மேட் லேருக்கு அளித்த பேட்டியில், பிரவுன் இவ்வாறு பதிலளித்தார்: “ஒரு கதையைச் சொல்வதற்கு உண்மையையும் கற்பனையையும் ஒரு நவீனமான திறம்பட்டதொரு பாணியில் கலந்து கொடுப்பதைத் தான் இந்த புத்தகங்களில் நான் செய்கிறேன். அதாவது . சிலர் நான் செய்வதைப் புரிந்து கொள்கிறார்கள், அவர்கள் என்னுடைய ரயிலில் ஏறி பயணம் செய்கிறார்கள் பெருமகிழ்ச்சியுறுகிறார்கள். இன்னொரு பிரிவினரும் இருக்கிறார்கள், அவர்கள் வேறு யாருடைய எழுத்துக்களையாவது வாசிப்பது தான் அவர்களுக்கு சிறந்ததாகும்.”[37]

படைப்புகள்[தொகு]

குறுந்தகடுகள்[தொகு]

 • ஸிந்த்அனிமல்ஸ் , குழ்ந்தைகள் பாடல்தொகுப்பு
 • பெர்ஸ்பெக்டிவ் , 1990, டாலியான்ஸ். இசைக் குறுந்தகடு
 • டான் பிரவுன் , 1993, DBG ரெக்கார்ட்ஸ்
 • ஏஞ்சல்ஸ் & டெமான்ஸ் , 1994, DBG ரெக்கார்ட்ஸ்
 • ம்யூசிகா அனிமலியா , 2003, குழந்தைகளுக்கான குறுந்தகடு, விலங்குகளை கவிதைகள் மற்றும் பாடல்களில் சித்தரிக்கும் 15 பாடல்கள் கொண்டது. வருவாய் ஃபேமிலிஸ் ஃபர்ஸ்ட் தொண்டு அமைப்புக்கு உதவியளித்தது.[38]

நகைச்சுவை எழுத்து[தொகு]

 • 187 மென் டூ அவாய்ட்: எ கைட் ஃபார் தி ரொமாண்டிக்கலி ஃப்ரஸ்ட்ரேடட் வூமன் , 1995, பெர்க்லி வெளியீட்டுக் குழுமம் (டேனியல் பிரவுன் என்கிற புனைப் பெயரில் தனது மனைவியுடன் சேர்ந்து எழுதியது). ISBN 0-425-14783-5, 2006 ஆகஸ்டில் மறுவெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டது
 • தி பால்ட் புக் , 1998, மனைவி ப்ளித் பிரவுன் உடன் இணைந்து எழுதியது. ISBN 0-7860-0519-X

புதினங்கள்[தொகு]

 • டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் , 1998
 • ஏஞ்சல்ஸ் & டெமான்ஸ் , 2000
 • டிஸப்ஷன் பாயிண்ட் , 2001
 • தி டாவின்சி கோட் , 2003
 • தி லாஸ்ட் சிம்பல் , 2009

திரைப்படங்கள்[தொகு]

குறிப்புதவிகள்[தொகு]

 1. 1.0 1.1 பிரவுன். சாட்சி அறிக்கை; பக்கங்கள் 17 & 21.
 2. The Da Vinci Code FAQ page; Official website of Dan Brown
 3. 3.0 3.1 Paulson, Michael. "Dan Brown on religion and writing" Boston.com; September 20, 2009
 4. Kaplan, James (September 13, 2009). "Life after 'The Da Vinci Code'". http://www.parade.com/news/2009/09/13-dan-brown-life-after-da-vinci-code.html. பார்த்த நாள்: September 13, 2009. 
 5. "Da Vinci Code Author Dan Brown and Siblings, Valerie Brown '85 and Gregory Brown '93 Establish New Fund in Honor of their Father" The Exeter Initiatives. பரணிடப்பட்டது 2009-05-23 at the வந்தவழி இயந்திரம்நவம்பர் 1, 2009 பரணிடப்பட்டது 2009-05-23 at the வந்தவழி இயந்திரம்
 6. 6.0 6.1 6.2 6.3 "Dan Brown witness statement in The Da Vinci Code case". March 14, 2006 இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 13, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090813230608/http://www.docstoc.com/docs/5264978/Dan-Brown-witness-statement-in-The-Da-Vinci-Code. பார்த்த நாள்: September 13, 2009. 
 7. பிரவுன். சாட்சி அறிக்கை; பக்கம் 36.
 8. அமெர்ஸ்ட் முன்னாள் மாணவர் பக்கம்
 9. 9.0 9.1 வால்டர்ஸ், ஜோயன்னா மற்றும் அலைஸ் ஓ’கீஃபெ. How Dan Brown's wife unlocked the code to bestseller success தி அப்சர்வர் , மார்ச் 12, 2006.
 10. ரோகக், லிசா. The Man Behind the Da Vinci Code - an Unauthorized Biography of Dan Brown . ஆண்ட்ரூஸ் மெக்மீல் பப்ளிஷிங், 2005. ISBN 0-7407-5642-7
 11. "Lincoln Akerman School website". http://www.sau21.org/las/aboutlas.htm. பார்த்த நாள்: September 13, 2009. [தொடர்பிழந்த இணைப்பு]
 12. ஷெல்டன் எவ்வாறு பிரவுனுக்கு முன்மாதிரியானார் என்பதில் ஆதாரங்கள் மாறுபடுகின்றன. ஷெல்டனின் புத்தகம் கவனம் ஈர்க்கும் பக்கங்களை திருப்பச் செய்யும் புத்தகமாய் எத்தகைய வண்ணம் இருக்கிறது, அது எத்தகைய சுவாரஸ்யமான வாசிப்பைத் தருவதாய் அவருக்கு நினைவூட்டியது என்பதையெல்லாம் தனது சாட்சி அறிக்கையின் மூன்றாம் பக்கத்தில் அவர் சுட்டிக் காட்டுகிறார். ஆனால் ஷெல்டனை விடவும் தன்னால் இன்னும் “நன்றாய் செய்ய முடியும்” என்பதாய் அவர் கருதியதாக பிபிசி ஆதாரம் சுட்டிக்காட்டுகிறது.
 13. "Decoding the Da Vinci Code author". BBC. 2004-08-10. http://news.bbc.co.uk/2/hi/entertainment/3541342.stm. பார்த்த நாள்: 2009-05-18. 
 14. Daniel Henninger. "Holy Sepulchre! 60 Million Buy 'The Da Vinci Code'". The Wall Street Journal. http://online.wsj.com/google_login.html?url=http%3A%2F%2Fonline.wsj.com%2Farticle%2FSB114799749952457278.html%3Fmod%3Dgooglenews_wsj. பார்த்த நாள்: 2009-05-18. 
 15. Marcus, Caroline (September 13, 2009). "Brown is back with the code for a runaway bestseller". Sydney Morning Herald. http://www.smh.com.au/news/entertainment/books/brown-is-back-with-the-code-for-a-runaway-bestseller/2009/09/12/1252519678923.html. பார்த்த நாள்: September 13, 2009. 
 16. Mehegan, David (2004-05-08). "Thriller instinct". The Boston Globe. http://www.boston.com/news/globe/living/articles/2004/05/08/thriller_instinct/. பார்த்த நாள்: 2009-04-20. 
 17. Carbone, Gina (2009-04-20). "Dan Brown announces new book, 'The Lost Symbol'". Boston Herald இம் மூலத்தில் இருந்து 2012-02-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120222014659/http://bostonherald.com/entertainment/books/view/2009_04_20_Dan_Brown_announces_new_book___The_Lost_Symbol_/srvc%3Dhome%26position%3Drecent. பார்த்த நாள்: 2009-04-20. 
 18. "Dan Brown’s ‘Lost Symbol’ Sells 1 Million Copies in the First Day". The New York Times. 2009-09-16. http://artsbeat.blogs.nytimes.com/2009/09/16/dan-browns-lost-symbol-sells-1-million-copies-in-the-first-day/?scp=3&sq=Dan%20Brown&st=cse. பார்த்த நாள்: 2009-09-16. 
 19. "'Da' Last Big Interview". Entertainment Weekly. 2006-03-26 இம் மூலத்தில் இருந்து 2009-05-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090524031023/http://www.ew.com/ew/article/0,,1176351_1,00.html. பார்த்த நாள்: 2009-05-18. 
 20. "Librarian comments on 'Da Vinci' lawsuit". USA Today. 2006-03-01. http://www.usatoday.com/life/books/news/2006-03-01-da-vinci-lawsuit_x.htm. பார்த்த நாள்: 2009-05-18. 
 21. "Brown duels in court". தி ஸ்டாண்டர்டு. 2006-03-16. http://www.thestandard.com.hk/news_detail.asp?pp_cat=18&art_id=14142&sid=7052348&con_type=1. பார்த்த நாள்: 2009-05-18. 
 22. "ஷேக்ஸ்பியர் குறித்து டான் பிரவுன்" இம் மூலத்தில் இருந்து 2011-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110713031845/http://www.infloox.com/influence?id=71a9b3e1. 
 23. "ராபர்ட் லுட்லமின் போர்னெ வரிசை குறித்து டான் பிரவுன்" இம் மூலத்தில் இருந்து 2011-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110713032120/http://www.infloox.com/influence?id=3cba3bcb. 
 24. பிரவுன். சாட்சி அறிக்கை; பக்கங்கள் 6 & 7.
 25. "Brown plays down Code controversy". BBC. 2006-04-24. http://news.bbc.co.uk/1/hi/entertainment/4937754.stm. பார்த்த நாள்: 2009-05-18. 
 26. தி டாவின்சி கோட் ராடன் டொமடோஸில்
 27. கவுரவ திறனாய்வாளர் மைக்கேல் பிலிப்ஸ் தனது பட்டியலில் தி டாவின்சி கோடை ஆல் தி கிங்’ஸ் மென்னுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் பட்டியலிட்டார் . "2006 ஆம் ஆண்டின் மோசமான படங்கள்", எபெர்ட் & ரோபெர், ஜனவரி 13, 2007
 28. பாக்ஸ் ஆஃபிஸ் மோஜோ. தி டாவின்சி கோட் (2006)
 29. ஏஞ்சல்ஸ் & டெமான்ஸ் ராடன் டொமடோஸில்
 30. "Author Brown 'did not plagiarise'". BBC. 2005-08-06. http://news.bbc.co.uk/1/hi/entertainment/4126710.stm. பார்த்த நாள்: 2009-05-18. 
 31. "நீதிபதி தனது சொந்த டாவின்சி குறியீட்டை உருவாக்குகிறார்". BBC News. ஏப்ரல் 27, 2006. http://news.bbc.co.uk/1/hi/entertainment/4949488.stm. பார்த்த நாள்: செப்டம்பர் 13, 2009. 
 32. "Historians lose Da Vinci Code plagiarism appeal". London: தி டைம்ஸ். 2007-03-28. http://business.timesonline.co.uk/tol/business/law/article1579277.ece. பார்த்த நாள்: 2009-05-18. 
 33. "Da Vinci Code Author Dan Brown and Siblings, Valerie Brown '85 and Gregory Brown '93 Establish New Fund in Honor of their Father". 2004-11-01 இம் மூலத்தில் இருந்து 2009-05-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090523225741/http://phillips.exeter.edu/ei/news/news_danbrown.html. பார்த்த நாள்: 2009-05-18. 
 34. "The Lost Symbol and The Da Vinci Code author Dan Brown's 20 worst sentences". 2009-09-15. http://www.telegraph.co.uk/culture/books/booknews/6194031/The-Lost-Symbol-and-The-Da-Vinci-Code-author-Dan-Browns-20-worst-sentences.html. பார்த்த நாள்: 2009-09-20. 
 35. ரிச்சர்ட் அபனெஸ், The Truth Behind The Da Vinci Code (ஹார்வெஸ்ட் ஹவுஸ் பப்ளிஷர்ஸ், 2004 ISBN 0-7369-1439-0).
 36. David F. Lloyd. "Facing Facts" இம் மூலத்தில் இருந்து 2008-12-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081206004328/http://www.vision.org/visionmedia/article.aspx?id=1333. பார்த்த நாள்: 2009-05-18. 
 37. "Dan Brown on dealing with criticism". today.msnbc.com. செப்டம்பர் 2009 இம் மூலத்தில் இருந்து 2009-07-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090711124656/http://today.msnbc.msn.com/id/26184891/vp/31775632#32850984. பார்த்த நாள்: செப்டம்பர் 21, 2009. 
 38. "Families First press release about Musica Animalia" இம் மூலத்தில் இருந்து 2010-11-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101129212353/http://familiesfirstseacoast.org/pressReleaseDetail.cfm?PR_ID=13. 

புற இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Dan Brown Books etc

"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்_பிரவுன்&oldid=3810082" இருந்து மீள்விக்கப்பட்டது