இன்பெர்னோ (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்பெர்னோ
முதல் பதிப்பின் அட்டைப்படம்
நூலாசிரியர்டான் பிரவுன்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஐக்கிய ராஜ்யம்
மொழிஆங்கிலம்
தொடர்ராபர்ட் லாங்டன் #4
வகைமர்ம புதினம்
வெளியீட்டாளர்டபுல் டே
வெளியிடப்பட்ட நாள்
மே 14, 2013
ஊடக வகைஅச்சு, மின்னூல்
பக்கங்கள்480 பக்கங்கள்
ISBN978-0-385-53785-8
OCLC824723329
முன்னைய நூல்தி லாஸ்ட் சிம்பல்

இன்பெர்னோ (Inferno) என்பது அமெரிக்க எழுத்தாளரான டான் பிரவுன் என்பவரால் 2013 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு மர்ம புதினம் ஆகும்.இது அவரின் ராபர்ட் லாங்க்டன் தொடர் புதினத்தின் நான்காவது பாகமாகும்.

அதன் முந்திய பாகங்கள் ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ்,த டா வின்சி கோட்,தி லாஸ்ட் சிம்பல்[1] ஆகிய புதினங்களின் தொடர்ச்சியாகும்.

இது 2013 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது[2].அதிலிருந்து தொடர்ந்து பதினோரு வாரங்கள் புத்தக விற்பனையில் முதலிடத்திலும், பதினேழு வாரங்கள் மின்னூல் விற்பனையிலும் முதலிடத்தில் இருந்ததாக தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் சிறந்த விற்பனை தரவரிசையில் முதலிடம் பெற்றிருந்தது.

திரைப்படம்[தொகு]

சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இப்புத்தகத்தை தழுவி ஒரு திரைப்படத்தை தயாரிக்கின்றது.இதில் ரான் ஹாவர்ட் (Ron Howard) இயக்குனராகவும் டேவிட் கோப் (David Koepp) திரைக்கதையிலும் உருவாகும் இப்படத்தில் டாம் ஹன்க்ஸ் (Tom Hanks) கதையின் நாயகன் ராபர்ட் லாங்க்டனாகவும் நடிக்கின்றார்.இப்படம் டிசெம்பர் 18, 2015 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Meslow, Scott (பெப்பிரவரி 20, 2013). "Dan Brown's Inferno: Everything we know so far". The Week. பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 22, 2013.
  2. McLaughlin, Erin (சனவரி 15, 2013). "New Dan Brown Novel, 'Inferno,' Set for May Release". ABC News. பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 22, 2013.
  3. "Tom Hanks And Ron Howard To Return For Next Dan Brown Movie 'Inferno'; Sony Sets December 2015 Release Date". Deadline.com. சூலை 16, 2013. பார்க்கப்பட்ட நாள் சூலை 16, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்பெர்னோ_(புதினம்)&oldid=3665460" இலிருந்து மீள்விக்கப்பட்டது