உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்மாராம் மகன்பாய் பட்டேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆத்மாராம் மகன்பாய் படேல் (Atmaram Maganbhai Patel) இந்திய நாட்டின் குசராத்து மாநிலத்தினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் மெக்சனா மாவட்ட மக்களவைத் தொகுதியிலிருந்து 13வது மக்களவை உறுப்பினராகவும் [1] குசராத்து மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். [2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

1918 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதியன்று குசராத்து மாநிலம் மெக்சனா மாவட்டத்தில் ஆத்மாராம் மகன்பாய் படேல் பிறந்தார். பின்னர் அரசு தொடக்கப் பள்ளியில் படித்தார். [3] 2002 ஆம் ஆண்டு சூலை மாதம் 23 ஆம் தேதியன்று, தனது 85 ஆவது வயதில் புதுதில்லியில் [4] நீண்டகால நோய்க்குப் பிறகு இறந்தார். [5] மெக்சனா மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த உறுப்பினர் இவர் ஆவார். [6] [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members of 13th Lok Sabha from Gujarat". பார்க்கப்பட்ட நாள் 2022-11-04.
  2. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1995 TO THE LEGISLATIVE ASSEMBLY OF GUJARAT".
  3. "Members Bioprofile".
  4. "Cong MP dies; LS adjourned for the day". பார்க்கப்பட்ட நாள் 2022-11-04.
  5. "Veteran Congress leader Atmaram dead". பார்க்கப்பட்ட நாள் 2022-11-04.
  6. "LS adjourned over Congress MP's death". பார்க்கப்பட்ட நாள் 2022-11-04.
  7. "Signposts". பார்க்கப்பட்ட நாள் 2022-11-04.