ஆட்டோபேட்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆட்டோபேட்சர்
Autopatcher Logo.gif
உருவாக்குனர் அந்நோனிஸ் கலாடிஸ்
பிந்தைய பதிப்பு 5.6 / பெப்ரவரி 2007
இயக்குதளம் மைக்ரோசாப்ட் வின்டோஸ்
இயக்குதளம் மைக்ரோசாப்ட் வின்டோஸ்
மொழிகள் ஆங்கிலம் (ஏனை மொழி மொழிபெயர்ப்புகளும் கிடைக்கின்றது)
வகை சாப்ட்வேர் யுட்டிலிட்டி
அனுமதி இலவசமென்பொருள்
இணையத்தளம் ஆட்டோபச்சர்.காம்

ஆட்டோபேட்சர் அல்லது ஓட்டோபச்சர் (இலங்கை வழக்கு) வின்டோஸ் மேம்படுத்தல்களுக்கான மாற்றாக அந்தோனிஸ் கலாடிஸ் இனால் ஓர் இயங்குதள மேம்படுத்தல்களை ஒன்றாகச் சேர்க்கப்பட்ட வின்டோஸ் பாதுகாப்பு மேம்படுத்தல்கள், சேர்க்கைகள் மற்றும் ரெஜிஸ்டிரி மேம்படுத்தல்கள் ஒன்றாகப் பொதிசெய்து வின்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 2, வின்டோஸ் 2000 சேவைப் பொதி 4, விண்டோஸ் சேவர் 2003 சேவைப்பொதி 1 மற்றும் விண்டோஸ் விஸ்டா இயங்குதள மேம்படுத்தல்களை ஒவ்வொரு முறையும் இணையத்துடன் இணைக்காமல் கணினியில் இருந்தவாறே மேற்கொள்ளவியலும்.

4 வருடங்களாகப் பாவனையில் இருந்த ஆட்டோபச்சர் 29 ஆகஸ்ட், 2007 முதல் இடைநிறுத்தபட்டுள்ளது. [1] இதற்கு மைக்ரோசாப்ட் இயங்குதளப் பாதுகாப்பு மேம்படுத்தலக்ளை மூன்றாம் தரப்பூடாக மேற்கொள்வதால் இயங்குதளத்தில் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படும் என்று கூறிய பொழுதும் இதுதான் உண்மையான காரணம் என்று தெரியவில்லை. இம்மேம்படுத்தல்கள் உரிமையுடைய விண்டோஸ் மாத்திரமன்றி நகல் எடுக்கப்பட்ட விண்டோஸ் கணினிகளில் இதை நிறுவக்கூடியது காரணமாக் இருக்கக்கூடும் என்பதையும் மறுதலித்துள்ளனர். [2]

பயன்பாடுகள்[தொகு]

ஆட்டோபச்சர் கீழ்வரும் பயனர்களிற்குப் மிகவும் உபயோககரமானது.

  • அடிக்கடி வன்வட்டினை (ஹார்டு டிஸ்க்) ஐ ஃபார்மட் பண்ணும் பயனர்களிற்கு
  • விரைவாக பல்வேறு கணினிகளில் மேம்படுத்தல்களை மேற்கொள்ளவிருக்கும் வலையமைப்பு நிர்வாகிகளுக்கு.
  • பாதுக்காப்பைப் பற்றிக் கவலையுறும் பயனர்கள் அதாவது பாதுக்காப்புக் குறைவான கணினியில் இருந்து மேம்படுத்தும் போது இணைய இணைப்பைப் பயன்படுத்துவதால் சிக்கல்கள் ஏதும் ஏற்படக்கூடும் என எண்ணும் பயனர்களுக்காக.

மேம்படுத்தும் முறை[தொகு]

ஆட்டோபச்சர் எந்தவொரு கழற்றக்கூடிய கணினி ஊடகத்தினூடாக மேம்படுத்தல்களை மேற்கொள்ளலாம் அதாவது இறுவட்டு (சீடி), டிவிடி, யுஎஸ்பி பிளாஷ்டிஸ்க், போன்றவற்றினூடாகவோ கணினி வலையமைப்பூடாகவோ கோப்பினைப் பெற்று மேம்படுத்தலாம்.

உசாத்துணைகள்[தொகு]

  1. ஆட்டோபச்சரின் துக்கதினம் அணுகப்பட்டது ஆகஸ்ட் 30, 2007 (ஆங்கில மொழியில்)
  2. பச்சாகிப் போன ஆட்டோபச்சர் அணுகப்பட்டது, 30 ஆகஸ்ட், 2007 (ஆங்கில மொழியில்)


வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்டோபேட்சர்&oldid=2195165" இருந்து மீள்விக்கப்பட்டது