ஆசிரியர் கல்விக்கான தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆசிரியர் கல்விக்கான தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு 2009 என்பது இந்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் மாற்றங்களையும் புதுப்பித்தல்களையும் முன்மொழிவதற்காக அமைக்கப்பட்ட ஒரு கலைத்திட்ட வரைவாகும்.[1][2][3]

கட்டமைப்பின் வரலாறு[தொகு]

இக்கலைத்திட்ட வடிவமைப்பானது தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் பள்ளி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், முனைவர் பட்டம், பிந்தைய முனைவர் பட்டம் ஆகிய நிலைகளில் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்க தர மற்றும் அளவு மேம்பாட்டிற்கான கருத்துக்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும். இது 1978 ஆம் ஆண்டில் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் உருவாக்கப்பட்ட கலைத்திட்டம், 1988 ஆம் ஆண்டில் தேசியக் கல்வியியல் ஆரய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவால் உருவாக்கப்பட்ட கலைத்திட்டம் மற்றும் 1988 ஆம் ஆண்டில் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் உருவாக்கப்பட்ட தரமான ஆசிரியர் கல்விக்கான முதல் கலைத்திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவானது. பின்னர் இது 2005 ஆம் ஆண்டு முகேஸ் தேவந்தால் உருவாக்கப்பட்டது.

கட்டமைப்பின் நோக்கங்கள்[தொகு]

வரைவுக் கலைத்திட்ட வடிவமைப்பின்படி பின்வரும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

  • ஆசிரியர் கல்விக்கான பாடப்பொருள் குறித்த பார்வை
  • தொடக்கநிலை ஆசிரியர் கல்விக்கான கல்விசார் பகுதிகள்
  • நடப்பு ஆசிரியர் கல்வித் திட்டங்களின் மாதிரி மறுவடிவமைப்பு திட்டங்கள்
  • வளர்ந்து வரும் ஆசிரியர்களை மதிப்பீடு செய்தல்
  • பணியிடைப் பயிற்சி மற்றும் தொடர்ச்சியான தொழிற்திறன் மேம்பாடு
  • ஆசிரியப் பயிற்றுநர்களைத் தயார்செய்தல்

மேற்கோள்கள்[தொகு]