ஆசிரியர் கல்விக்கான தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிரியர் கல்விக்கான தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு 2009 (National Curriculum Framework for Teacher Education 2009) என்பது இந்திய அரசு அமைப்பான தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால், தேசிய ஆசிரியர் கல்விச் சட்டம் ( #73, 1993) இன் கீழ் தேசிய ஆசிரியர் கல்விக்குத் தேவையான மாற்றங்களையும், புதுப்பித்தல்களையும் முன்மொழிவதற்காக அமைக்கப்பட்ட ஒரு கலைத்திட்ட வரைவாகும்.[1][2][3]

கட்டமைப்பின் வரலாறு[தொகு]

இக்கலைத்திட்ட வடிவமைப்பானது தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் பள்ளி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், முனைவர் பட்டம் ஆகிய நிலைகளில் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்க தர மற்றும் அளவு மேம்பாட்டிற்கான கருத்துக்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.இதன் முந்தைய கலைத்திட்ட வடிவமைப்பானது 1978 இல் இதே குழுமத்தால் உருவாக்கப்பட்டது (அந்த நேரத்தில் அது ஒரு சுயாதீன அமைப்பாக இல்லாமல் ஒரு துறையாக இருந்தது). 1988 ஆம் ஆண்டில் தேசியக் கல்வியியல் ஆரய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவால் தரமான ஆசிரியர் கல்விக்கான கலைத்திட்டம் உருவானது.

கட்டமைப்பின் நோக்கங்கள்[தொகு]

வரைவுக் கலைத்திட்ட வடிவமைப்பின்படி பின்வரும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

  • ஆசிரியர் கல்விக்கான பாடப்பொருள் குறித்த பார்வை
  • தொடக்கப்பள்ளி ஆசிரியர் கல்விக்கான கல்விசார் பகுதிகள்
  • நடப்பு ஆசிரியர் கல்வித் திட்டங்களின் மாதிரி மறுவடிவமைப்பு திட்டங்கள்
  • திறன்களை வெளிக்கொணரும் ஆசிரியர்களை மதிப்பீடு செய்தல்
  • பணியிடைப் பயிற்சி மற்றும் தொடர்ச்சியான தொழிற்திறன் மேம்பாடு
  • ஆசிரியப் பயிற்றுநர்களைத் தயார்செய்தல்.

இந்த வரைவிலிருந்து உருவாக்கப்பட்ட ஆசிரியர் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு பரணிடப்பட்டது 2019-11-01 at the வந்தவழி இயந்திரம், ஆசிரியர் கல்வியின் ஆர்வமூட்டுதலின் தேவையின் முக்கியத்துவத்தினைக் காட்டுகிறது, இது பணிமுன் பயிற்சி மற்றும் பணியிடைப் பயிற்சிக்கான ஆசிரியர் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களைத் தயார்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இதன்முழு ஆவணமும் பரணிடப்பட்டது 2019-11-01 at the வந்தவழி இயந்திரம் கருத்து வரைபடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது .

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Portal of India". India.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-10-17.
  2. "NCTE,National Council for Teacher Education". Archived from the original on 13 January 2010. பார்க்கப்பட்ட நாள் 22 December 2009.
  3. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 27 September 2011. பார்க்கப்பட்ட நாள் 22 December 2009.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)