ஆசிய மரத் தேரை
தோற்றம்
| ஆசிய மரத்தேரை | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | இராணிடே
|
| பேரினம்: | |
| இனம்: | இ. கோசி
|
| இருசொற் பெயரீடு | |
| இரெண்டாபியா கோசி (பெளலஞ்சர், 1892) | |
| வேறு பெயர்கள் [2] | |
| |
இரெண்டாபியா கோசி (Rentapia hosii), எனும் பௌளெஞ்சர் ஆசிய மரத்தேரை, பொதுவான மரத் தேரை, மலேசியப் பழுப்பு தேரை, பழுப்பு வனத் தேரை[3] அல்லது ஆசிய மஞ்சள் புள்ளி தேரை[4] என்றும் அழைக்கப்படுகிறது. இது பபோனிடே குடும்பத்தில் உள்ள தேரை சிற்றினம் ஆகும்.[4] இது மலாய் தீபகற்பம் (தெற்கு தீபகற்ப தாய்லாந்து உட்பட), போர்னியோ (இந்தோனேசியா, புரூணை மலேசியா) மற்றும் சுமாத்திரா (இந்தோனேசியா) ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[1][3]
இரெண்டாபியா கோசி என்பது 800 m (2,600 அடி) க்கும் குறைவான உயரத்தில் உள்ள பெரிய தாழ் நில ஆறு, காடு உள்ளிட்ட பிற அடர்ந்த வனப்பகுதியில் காணப்படும் மரத்தேரை ஆகும். இது தெளிவான காடுகளில் இனப்பெருக்கம் செய்கிறது. உருமாற்றத்திற்குப் பிறகு, இளம் தவளைகளில் சுற்றியுள்ள காடுகளில் பரவி, படிப்படியாக மரத்தில் தமது வாழ்க்கையினைத் துவங்குகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 IUCN SSC Amphibian Specialist Group (2017). "Rentapia hosii". IUCN Red List of Threatened Species 2017: e.T54862A114110853. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T54862A114110853.en. https://www.iucnredlist.org/species/54862/114110853.
- ↑ "Indosylvirana serendipi (Biju, Garg, Mahony, Wijayathilaka, Senevirathne, and Meegaskumbura, 2014)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. 2019. Retrieved 2019-10-05.
- ↑ 3.0 3.1 Frost, Darrel R. (2019). "Rentapia hosii (Boulenger, 1892)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. Retrieved 27 September 2019.
- ↑ 4.0 4.1 "Asian Yellow-spotted Climbing Toad (Rentapia hosii) on Brunei Check List". iNaturalist. Retrieved 27 September 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]- தீபகற்ப மலேசியாவின் நீர்நில வாழ்வன மற்றும் ஊர்வன[1]
- BioAcoustica இல் Pedostibes hosii இன் ஒலிப்பதிவுகள்