ஆசன்சோல் பெண்கள் கல்லூரி
This article கொண்டுள்ள மேற்கோள்கள் / சான்றுகள் அதிகமாக முதல்நிலை மூலங்களில் தங்கியுள்ளன.. (பெப்பிரவரி 2024) |
வகை | இளங்கலைக்கான பொதுக் கல்வி நிலையம் |
---|---|
உருவாக்கம் | 1950 |
சார்பு | காசி நஸ்ருல் பல்கலைக்கழகம்; தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை |
தலைவர் | ஸ்ரீ மோலோய் கட்டக் |
பொறுப்பாசிரியர் | டாக்டர் சந்தீப் கே.ஆர். |
மாணவர்கள் | 1000 ♀ க்கும் மேற்பட்டவர்கள் |
அமைவிடம் | Dr. Anjali Roy Sarani , , , 723304 , 23°41′07″N 86°56′44″E / 23.6853102°N 86.9454366°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | www |
படிமம்:Asansol Girls' College logo.jpg | |
ஆசன்சோல் பெண்கள் கல்லூரி (Asansol Girls' College) என்பது இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள பாஸ்கிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள ஆசன்சோலில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி, மேற்கு வங்கத்தின், ஆசன்சோலில் உள்ள காசி நஸ்ருல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [1]
வரலாறு
[தொகு]மேற்கு வங்கத்தின் தொழில்துறை பகுதியும் நிலக்கரி சுரங்கங்கள் நிறைந்த இப்பகுதியில் 1950 ஆம் ஆண்டில் இக்கல்லூரி நிறுவப்பட்டது.[2] அப்போதைய சுரங்க சுகாதார வாரிய மருத்துவர். லலித் மோகன் சென்னின் அயராத முயற்சிகள் மற்றும் அவரது மதிப்பிற்குரிய துணைவி திருமதி கமலா சென்னின் முயற்சியால், மணிமாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டு இது சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது [3] இந்த காரணத்திற்காக, உள்ளூர் மக்களால் மணிமாலா கல்லூரி என்று அறியப்பட்டாலும் அசன்சோல் பெண்கள் கல்லூரி அதன் அதிகாரப்பூர்வ பெயராக இருந்தது. நிறுவன தினத்தன்று, கல்லூரியிலிருந்து மணிமாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஊர்வலம் சென்று அதன் ஆரம்ப நிலைக்கு மரியாதை செலுத்துகிறது.
ஆரம்பத்தில், இக்கல்லூரி கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. பின்னர் பர்த்வான் பல்கலைக்கழகம் தொடங்கிய பிறகு அந்த பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது .மீண்டும் 24 ஜூன் 2015 முதல், இக்கல்லூரி அசன்சோலின் காசி நஸ்ருல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இணைப்புகள்
[தொகு]- கல்கத்தா பல்கலைக்கழகம்
- பர்த்வான் பல்கலைக்கழகம்
அங்கீகாரம்
[தொகு]இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [4] இந்தக் கல்லூரி டிசம்பர் 2016 இல் 'ஏ லெவல்' சான்றிதழுடன் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (NAAC) மறு அங்கீகாரம் பெற்றுள்ளது [5] இக்கல்லூரி 2000 ஆம் ஆண்டில் பொன்விழா கொண்டடியுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Affiliated College of Kazi Nazrul University". Archived from the original on 8 February 2020. பார்க்கப்பட்ட நாள் 15 June 2017.
- ↑ Colleges in West Bengal, University Grants Commission பரணிடப்பட்டது 16 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Asansol Girls' College". Asansol Girls' College. http://agc.org.in/. பார்த்த நாள்: 2 January 2013.
- ↑ Colleges in West Bengal, University Grants Commission பரணிடப்பட்டது 16 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Asansol Girls' College, Asansol". www.agc.org.in. பார்க்கப்பட்ட நாள் 2016-12-16.