ஆஃப்மேன் மார்சியசு மறுசீராக்கல் வினை
ஆஃப்மேன்-மார்சியசு மறுசீராக்கல் வினை (Hofmann–Martius rearrangement) N-அல்கைலேற்ற அனிலினை அதற்குத் தொடர்புடைய ஆர்த்தோ மற்றும் / அல்லது பாரா அரைல்-அல்கைலேற்ற அனிலினாக மாற்றும் ஒரு கரிம வேதியியல் மறுசீராக்க வினையாகும். இந்த வினை நிகழ, வெப்பம், ஐதரோகுளோரிக் காடி போன்ற ஒரு அமில வினைவேகமாற்றி ஆகியவை தேவைப்படுகிறது.[1][2]
வினைவேகமாற்றியானது ஒரு உலோக ஆலைடாக இருக்கும் போது இந்த வினையானது ரெய்லி-இக்கின்பாட்டம் மறுசீராக்க வினை (Reilly–Hickinbottom rearrangement) எனவும் அழைக்கப்படுகிறது.[3]
இந்த வினையானது அரைல் ஈதர்களில் சிறப்பாக நிகழ்கிறது. இதற்கு கருத்துரீதியாக ஒத்த இரண்டு வினைகளாவன: ஃப்ரீஸ் மறுசீராக்க வினை மற்றும் பிசர்-எப் மறுசீராக்க வினை ஆகியவை ஆகும். இதன் வினை வழிமுறையானது, வினைபடுபொருள், பிரீடல்-கிராப்ட்சு அல்கைலேற்ற வினையில் நேர்மின்சுமை கொண்ட மிகுதியான கரிம அல்கைல் தொகுதியானது, அனிலின் வளையத்தை தாக்குவதை மையமாகக் கொண்டதாகும்.
ஆய்வறிக்கை ஒன்றில் இந்த மறுசீராக்க வினையானது 3-N(CH3)(C6H5)-2-ஆக்சின்டோலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது:[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hofmann, A. W.; Martius, C. A. (1871). "Methylirung der Phenylgruppe im Anilin". Berichte der deutschen chemischen Gesellschaft 4 (2): 742. doi:10.1002/cber.18710040271.
- ↑ Hofmann, A. W. (1872). "Umwandlung des Anilins in Toluidin". Berichte der deutschen chemischen Gesellschaft 5 (2): 720. doi:10.1002/cber.18720050241.
- ↑ Reilly, J.; Hickinbottom, W. J. (1920). "XV.—Intramolecular rearrangement of the alkylarylamines: Formation of 4-amino-n-butylbenzene". J. Chem. Soc. 117: 103–137. doi:10.1039/ct9201700103. https://archive.org/details/sim_journal-of-the-chemical-society_1920_117/page/103.
- ↑ Magnus, Philip; Turnbull, Rachel (2006). "Thermal and Acid-Catalyzed Hofmann–Martius Rearrangement of 3-N-Aryl-2-oxindoles into 3-(Arylamino)-2-oxindoles". Organic Letters 8 (16): 3497–9. doi:10.1021/ol061191z. பப்மெட்:16869644.
- ↑ heating 1 in toluene at 80 °C gives 30% 2-o (ortho) and 37% 2-p (para)