அல் பாத்தினா பிராந்தியம்

ஆள்கூறுகள்: 24°N 57°E / 24°N 57°E / 24; 57
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல் பாத்தினா
ஆளுநரகம்
Al Batinah, Governorate of Oman
Al Batinah, Governorate of Oman
ஆள்கூறுகள்:
நாடுஓமான்
தலைநகரம்சோஹர்
பரப்பளவு
 • மொத்தம்12,500 km2 (4,800 sq mi)
மக்கள்தொகை (2010 மக்கள் கணக்கெடுப்பு)
 • மொத்தம்7,72,590
 • அடர்த்தி62/km2 (160/sq mi)

அல் பாத்தினா (Al Batinah Region, அரபு மொழி: ٱلْبَاطِنَة‎ ) [1] என்பது ஓமானின் ஒரு முன்னாள் பிராந்தியமாகும். இது அக்டோபர் 28, 2011 அன்று அல்-பாத்தினா வடக்கு ஆளுநரகம் மற்றும் அல்-பாத்தினா தெற்கு ஆளுநரகம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. [2] [3] [4]

ஓமான் வளைகுடா கடற்கரைப் பகுதியில் இப்பிராந்தியமானது ஒரு முக்கியமான இடத்தில் உள்ளது. இது வடக்கில் காட்மத் மலாஹாவிற்கும் தெற்கில் ராஸ் அல்-ஹம்ராவிற்கும் இடையில் அமைந்துள்ளது. மேலும் இதன் மேற்கில் அல் அசார் மலைத்தொடரையும், கிழக்கில் ஓமான் வளைகுடா ஆகியவையும் கொண்டுள்ளது. ஹஜார் மலைகள் மற்றும் கடலுக்கு இடையிலான பசுமையான சமவெளிகளால் ஓமானின் பெரும்பாலான மக்கள் இந்த பிராந்தியத்தில் இருந்தனர்.

அல் பாத்தினா பிராந்தியத்தில் பன்னிரண்டு மாகாணங்கள் (விலாயத்) இருந்தன. அவை சோஹர், அர் ருஸ்டாக், ஷினாஸ், லிவா, சஹாம், அல்-கபுரா, சுவேக், நக்கால், வாடி அல் மாவில், அல் அவாபி, அல்-முசன்னா, பார்கா ஆகியவை ஆகும். பிராந்தியத்தின் மிகப்பெரிய மாகாணமாக சுவேக் கருதப்படுகிறது.

சோஹர் நகரமானது பிராந்தியத்தின் தலைநகராக இருந்தது. இது ஒரு கார்னிச், மீன் சூக் மற்றும் ஏராளமான பள்ளிவாசல்களைக் கொண்ட நகரமாகும்.

ஓமினின் வரலாற்று வரைபடங்கள் பாத்தினாவைக் காட்டுகின்றன[தொகு]

குறிப்புகள்[தொகு]