அல்ஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல்ஸ்டர் (Ulster; சுகாத்து: Ulstèr [1] [2] [3] அல்லது Ulster ) [4] [5] [6] என்பது அயர்லாந்து பிரிக்கப்படுவதற்கு முந்தைய நான்கு பாரம்பரிய ஐரிய மாகாணங்களில் ஒன்றாகும். இது ஒன்பது மாவட்டங்களால் ஆனது. இவற்றில் ஆறு மாவட்டங்கள் வடக்கு அயர்லாந்திலும் ( ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி), மீதமுள்ள மூன்று மாவட்டங்கள் அயர்லாந்து குடியரசிலும் உள்ளன.

இது அயர்லாந்தின் நான்கு பாரம்பரிய மாகாணங்களில் இரண்டாவது பெரிய ( மன்ஸ்டருக்குப் அடுத்து) மற்றும் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட ( லெய்ன்ஸ்டருக்கு அடுத்து) மாகாணமாக இருந்தது. இதன் மிகப்பெரிய நகரமாக பெல்பாஸ்ட் இருந்தது. மற்ற மாகாணங்களைப் போலல்லாமல், அல்ஸ்டரில் புராட்டஸ்டன்ட்டு கிறித்துவர்கள் அதிக விழுக்காடு வாழக்கூடியதாக இருந்தது. அவர்கள் மாகாண மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி இருந்தனர். ஆங்கிலம் முக்கிய மொழியாகவும், அல்ஸ்டர் ஆங்கிலம் முக்கிய பேச்சுவழக்காகவும் இருந்தது. சிறுபான்மையினர் ஐரிஷ் மொழியையும் பேசுகினர். இதில் தெற்கு கவுண்டி லண்டன்டெரி, கேல்டாக்ட் காலாண்டு, பெல்ஃபாஸ்ட், டோனிகல் கவுண்டியில் கேல்டாக்டா ஆகிய ஐரிய மொழி பேசும் பகுதிகளாக இருந்தன. மொத்தமாக, இந்த மூன்று பகுதிகளும் அயர்லாந்தின் மொத்த கேல்டாக்ட் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினரைக் கொண்டிருந்தது. [7] இதில் அல்ஸ்டர்-ஸ்காட்ஸ் மொழியும் பேசப்படுகிறது. கிழக்கில் உள்ள லாஃப் நிக என்பது பிரித்தானியத் தீவுகளின் மிகப்பெரிய ஏரியாகும். அதே சமயம் மேற்கில் உள்ள லௌ எர்னே அதன் மிகப்பெரிய ஏரி வலையமைப்புகளில் ஒன்றாகும். முக்கிய மலைத்தொடர்கள் மோர்ன்ஸ், ஸ்பெரின்ஸ், க்ரோக்கார்ம்ஸ், டெர்ரிவேக் மலைகள் ஆகும்.

குறிப்புகள்[தொகு]

  1. Ulster Scots – Ulstèr-Scotch பரணிடப்பட்டது 25 சனவரி 2009 at the வந்தவழி இயந்திரம் NI Department for Regional Development.
  2. Ulster's Hiddlin Swaatch – Culture Northern Ireland பரணிடப்பட்டது 22 சூன் 2018 at the வந்தவழி இயந்திரம் Dr Clifford Smyth
  3. Guide to Monea Castle – Ulster-Scots version பரணிடப்பட்டது 30 ஆகத்து 2011 at the வந்தவழி இயந்திரம் Department of the Environment.
  4. "North-South Ministerial Council: 2010 Annual Report in Ulster Scots" (PDF). 27 February 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது.
  5. "North-South Ministerial Council: 2009 Annual Report in Ulster Scots" (PDF). 1 April 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது.
  6. "Tourism Ireland: 2008 Yearly Report in Ulster Scots". 30 September 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  7. "Results". census.cso.ie. 26 May 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-11-22 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்ஸ்டர்&oldid=3672918" இருந்து மீள்விக்கப்பட்டது