அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் (Alladi Krishnaswamy Iyer) (14 மே 1883 – 3 அக்டோபர் 1953), வழக்கறிஞரும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினரும் ஆவார். மேலும் 1929 முதல் 1944 முடிய சென்னை மாகாண அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றியவர்.

இளமை வாழ்க்கை[தொகு]

சென்னை மாகாணத்தின், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் 1883ல் பிறந்த அல்லாடி கிருஷ்ணசாமியின் தந்தை ஏகாம்பர சாஸ்திரி ஒரு கோயில் பூசாரி ஆவார்.

1899ல் பள்ளிப் படிப்பை முடித்த கிருஷ்ணசாமி சென்னை கிறித்தவக் கல்லூரியில் வரலாறு படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் வழக்கறிஞர் படிப்பை, சென்னை சட்டக் கல்லூரியில் முடித்தவர்.[1] பின்னர் வெங்கலலட்சுமியை மணந்தார்.

1929 முதல் 1944 முடிய சென்னை மாகாண அரசின் தலைமை அரசு வழக்கறிஞராகவும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.[2][3][4]

அல்லாடி நினைவு அறக்கட்டளை[தொகு]

அல்லாடி கிருஷ்ணசாமியின் மகன் அல்லாடி குப்புசாமி, தன் தந்தையின் நினைவாக, சென்னையில் 1983ல் அல்லாடி நினைவு அறக்கட்டளையை நிறுவினார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. V.S, Ravi (28 September 2003). "Tribute: Legal Luminary". The Hindu. பார்த்த நாள் 12 April 2012.
  2. http://tamil.thehindu.com/opinion/letters/இப்படிக்கு-இவர்கள்-சட்ட-தினமும்-கல்வெட்டு-வாசகமும்/article9403885.ece
  3. Gopal, Madan (1990). K.S. Gautam. ed. India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 191. 
  4. http://www.asianage.com/columnists/legacy-br-ambedkar-308
  5. Alladi Memorial Lectures by M. Hidayatullah and S. Ranganathan, 2009 ISBN 978-81-89487-56-0

வெளி இணைப்புகள்[தொகு]

  1. Article in the Hindu by V.S. Ravi, grandson of Alladi Krishnaswamy Iyer

மேலும் படிக்க[தொகு]

  • Austin, G. 1966. The Indian Constitution: Cornerstone of a Nation. Clarendon Press, Oxford.