அல்போன்சு டி லாமார்ட்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அல்போன்சு டி லாமார்ட்டின்
Alphonse de Lamartine, ca.1865

அல்போன்சு டி லாமார்ட்டின் (Alphonse de Lamartine, அக்டோபர் 21, 1790 - பெப்ரவரி 28, 1869) 19 ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியராக கணிக்கப்படுகிறார். 1790 அக்டோபர் 21ல் பிரான்சில் பிறந்த இவர் 1869 பிப்ரவரி 28 ல் காலமானார். கவிஞராகவும், எழுத்தாளராகவும் மிளிர்ந்த இவர் பிரான்சின் வெளியுறவு அமைச்சராகவும் 1848 லிருந்து சில காலம் சேவையாற்றியுள்ளார்.

இவருடைய ஏரி ( லெ லாக், Le Lac) என்னும் தன்வரலாற்றுக் கவிதை புகழ்பெற்றது. இக் கவிதை ஒருவகையான உள்குமைப் (தியான) பண்பு உடையதென்பர். காதலில் ஆழ்ந்த இருவரின் அன்பை பறிகொடுத்தவன் ஒருவன் நோக்கில் எழுதியது இப்பாடல். இதன் முதல் சில புகழ்பெற்ற வரிகள்:

Ainsi, toujours poussés vers de nouveaux rivages,
Dans la nuit éternelle emportés sans retour,
Ne pourrons-nous jamais sur l'océan des âges
Jeter l'ancre un seul jour ?

ஆக, மீண்டும் புதிய கரைக்கு தள்ளல்,
தீரா இரவு! மீண்டும் வரவில்லையே
என்றேனும் நாம் ஒருநாள் ஆழ்கடல் வாழ்நாளில் (l'océan des âges)
நங்கூரம் ஊன்றி நிற்போமா?

லமார்ட்டினைப் போல கவிதையும் எழுதி அரசியலிலும் செல்வாக்குடன் இருந்தவர்கள் பிரான்சில் குறைவு. கத்தோலிக மதம் பின்பற்றுவராக முதலில் இருந்தார், பின்னர் எல்லாக் கடவுள் ஏற்பும் கொண்டார்.