அலைவரைவி
அலைவரைவி Kymograph | |
---|---|
நோய் கண்டறிச் செயல்முறைகள் | |
ம.பா.த | D007734 |
அலைவரைவி ( kymograph ) என்பது ஒரு வரைபடத்தின் மூலம் நேரத்தின் அடிப்படையில் இடவெளி நிலைபாட்டை வரைகின்ற சாதனம் ஆகும். சுருக்கமாகச் சொல்வதென்றால் இக்கருவியை ஒர் அலையெழுதி என்றும் கூறலாம். இவ்வரைபடத்தில் இடவெளி அச்சானது நேரத்தைக் காட்டுகிறது. பொதுவாக இச்சாதனத்தின் அமைப்பு, காகிதத்தால் மூடப்பட்ட சுழல்உருளியின் மீது ஓர் எழுத்தாணி முன்னும் பின்னுமாக நகர்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வெழுத்தாணி ஒரு நிகழ்வில் உணரப்பட்ட இயக்க அல்லது அழுத்த மாற்றங்களை நகர்ந்து பதிவுசெய்கிறது[1].
1840 ஆம் ஆண்டு கார்ல் லுட்விக் என்ற செருமானிய உடற்செயலியல் வல்லுநர் இச்சாதனத்தைக் கண்டறிந்தார். முதன்முதலில் இச்சாதனம் இரத்த அழுத்தத்தை ஊடுருவி கண்காணிக்க பயன்படுத்தப்பட்டது. பின்னர் மருத்துவத் துறையில் பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு உபயோகிக்கப்படுகிறது[2]. உடலியக்கத்தில் நிகழும் தசைச்சுருக்க மாற்றங்கள் அல்லது பேச்சொலி உட்பட நிகழும் பிற செயல்முறைகளை அளவிடுவது இச்சாதனத்தின் முதன்மையான பயனாகும். இவை தவிர வளிமண்டல அழுத்தத்தை அளவிடல், இசைக் கவைகளின் அதிர்வுகளை அளவிடல் மற்றும் நீராவி இயந்திரத்தின் செயல்பாட்டை அளவிடல் போன்ற செயல்பாடுகளுக்கும் அலைவரைவி பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Photo and Description of a 1903 kymograph dead link". Archived from the original on 2007-06-05. பார்க்கப்பட்ட நாள் 2015-09-10.
- ↑ "Primary source texts and quotes on kymographs". Archived from the original on 2008-12-11. பார்க்கப்பட்ட நாள் 2015-09-10.