உள்ளடக்கத்துக்குச் செல்

அற்பாக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அற்பாக்கா
அற்பாக்கா (Lama pacos)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
V. pacos
இருசொற் பெயரீடு
Vicugna pacos
(L, 1758)
அற்பாக்காக்களின் பரவல்

அற்பாக்கா தென் அமெரிக்காவில் காணப்படும் ஒட்டகத்தின் கிளை இன விலங்கு. இது மேலோட்டமாகப் பார்க்கையிற் சிறு இலாமாவைப் போன்ற தோற்றமளிக்கிறது. இவ்விலங்குகள் அந்தீசு மலைத்தொடரில் 3500 முதல் 5000 மீட்டர் வரை உயரமுள்ள பகுதிகளில் மந்தைகளாக வளர்க்கப்படுகின்றன. இவை பொதுவாக லாமாக்களை விடச் சிறியதாக இருப்பினும் இவை பொதி சுமக்கும் பணிக்காக வளர்க்கப்படுவதில்லை. மாறாக இவற்றின் முடியில் கிடைக்கும் இழைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் பலவகையான குளிர்கால உடைகள் செய்யப் பயன்படுகின்றன. இவ்விலங்கின் மயிர் இழைகள் பெரு நாட்டின் வகைப்பாட்டின் படி 52 நிறங்களில் கிடைக்கின்றன. ஐக்கிய அமெரிக்க வகைப்பாட்டின் படி 16 நிறங்களில் உள்ளன. அல்ப்பாக்காக்களின் காது நேராக இருக்கும். லாமாக்களின் காது வாழைப்பழம் போல் வளைந்து இருக்கும். மேலும் லாமாக்கள் அல்ப்பாக்காக்களை விட ஒன்றிரண்டு அடிகள் உயரமாக இருக்கும்.[1][2][3]

அற்பாக்காக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால் பழக்கப்படுத்தப் பட்டு விட்டதாகத் தெரிகிறது. பெருவின் வடபகுதியில் உள்ள மோச்சே மக்களின் கலைப்பொருட்களில் அற்பாக்காக்களின் உருவம் காணக்கிடைக்கிறது.

அற்பாக்கா ஒன்றுடன் ஒரு கெச்சுவாச் சிறுமி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Harvesting of textile animal fibres". UN Food and Agriculture Organization.
  2. "Alpaca – Lama pacos – Details". Encyclopedia of Life. 
  3.   "Alpaca". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 1. (1911). Cambridge University Press. 721–722. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அற்பாக்கா&oldid=3768547" இலிருந்து மீள்விக்கப்பட்டது