அர்குன் ஆறு (ஆசியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அர்குன்
Argun or Ergune
River
Argun River near Inner Mogolia.jpg
சீனாவின் ஷிவெய்யிலிருந்து, எடுக்கப்பட்டது. எதிர் பக்கத்தில் உள்ள இரசியா.
பெயர் மூலம்: மொங்கோலியன்: ergene, "wide"
நாடுகள்  சீனா,  உருசியா
இரசியப் பிரதேசம் சபைக்கால்சுக்கி பிரதேசம்
Chinese Region ஹுலுன்புயிர் Hulunbuir
உற்பத்தியாகும் இடம் கெர்லன் ஆறு
 - அமைவிடம் about 195 கிலோமீட்டர்கள் (121 mi) from உலான் பத்தூர்
 - உயர்வு 1,961 மீ (6,434 அடி)
கழிமுகம் அமுர் ஆறு
நீளம் 1,620 கிமீ (1,007 மைல்)
வடிநிலம் 1,64,000 கிமீ² (63,321 ச.மைல்)
Discharge
 - சராசரி
Amur watershed.png
அர்குன் ஆறு (ஆசியா)
Amurrivermap.png
அர்குன் ஆற்றின் அமுர் ஆற்றுப் பள்ளத்தாக்கு
சீனப் பெயர்
சீனம் 额尔古纳河
Mongolian name
Mongolian Эргүнэ мөрөн
Russian name
Russian Аргу́нь

அர்குன் ஆறு (Argun or Ergune River); இது, 1,621 கிலோமீட்டர் (1,007 மைல்) நீளம் கொண்டது. இந்த ஆறும் அமுர் ஆறும் சேர்ந்து கிழக்கு சீனா - இரசியா எல்லையின் பகுதியாக அமைந்துள்ளன. இந்த ஆற்றின் மேல் பகுதி, சீனாவில் ஹைலர் ஆறு (ஆங்கிலம்: Hailar River; எளிய சீனம்: 海拉尔 河; பின்யின்: ஹெயிலர் ஹெ (Hăilā'ěr Hé) என அழைக்கப்பபடுகின்றது. அமுர் ஆற்றினை அடையும்வரையிலான அர்குன் ஆற்றின் பகுதியானது, இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலுள்ள 944 கிலோமீட்டர் (587 மைல்) நீள எல்லையாக (1689 ஆம் ஆண்டில் நெர்சின்ஸ்க் (Treaty of Nerchinsk) ஒப்பந்தத்தால் நிறுவப்பட்டது) அமைந்துள்ளது.[1]

பெயர் மரபு[தொகு]

அர்குன் எனும் இந்த ஆற்றின் பெயரானது, புரியாத்திய மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளது. அம்மொழியில் "உர்கெங்கோல்" எனும் சொல்லுக்கு (Urgengol 'wide river' ) அகன்ற ஆறு என்பது பின்வருமாறு பிறக்கிறது. ( உர்கென் 'பரந்த' + கோல் 'ஆறு' (urgen 'wide' + gol 'river' ). மேலும் மொங்கோலிய மொழியின் சொற்படி "ergün" (பாரம்பரிய மங்கோலியன்) அல்லது "örgön" (நவீன மங்கோலியன்) "பரந்த" என்று பொருள்.[2]

நிலவியல்[தொகு]

இந்த ஆறு சீனாவின் உள் மங்கோலியாவில் உள்ள "மகா கிங்கன் மலைத்தொடர்" ( Greater Khingan Range) இன் மேற்கத்திய சாய்விலிருந்து பாய்ந்து செல்கிறது.[3] மேலும் சீனத்தின் அமுர் (ஹெயிலோங்) ஆற்றை உருவாக்கக்கூடிய இருபிரிவுகளில் ஒன்றாக இது உருவாக்குகிறது. மேலும் இது இரசியாப் பகுதியில் உள்ள உஸ்ட் ஸ்ட்ரெல்காவில் உள்ள சில்கா ஆற்றுடன் (Shilka River) சங்கமித்து அமுர் ஆற்றை உருவாக்குகிறது.[4]

கெர்லென் - எர்குன் - அமுர்[தொகு]

பொதுவாக அதீதமான மழை பெய்யும் ஆண்டுகளில், வடக்கு சீனாவின் உள் மங்கோலியாவில் உள்ள ஒரு பெரிய ஏரியான ஹுலுன் (Hulun Lake) எனும் ஏரி நிரம்பி வழியும் உபரி நீர் அதன் வடக்கு கரையில் வெளியேறி, சுமார் 30 கிலோமீட்டர் (19 மைல்) நீளத்திற்கு பிறகு நீர்த்தேக்கமாக "எர்குன்" (அர்குன்) Ergune ஆற்றை அடைகிறது.[5] கெர்லென் - எர்குன் - அமுர் அமைப்பின் மொத்த நீளம் 5,052 கிலோமீட்டர் (3,139 மைல்) ஆகும்.[6]

வரலாறு[தொகு]

1227 இல் மங்கோலிய அரச குடும்பத்திற்காக மங்கோலிய மொழியில், பழமையான இலக்கிய வேலைப்பாடுடன் எழுதப்பட்ட "மங்கோலியர்களின் இரகசிய வரலாறு" (The Secret History of the Mongols) எனும் நூலில் "எர்குனே குன்" (Ergüne hun) என்ற மங்கோலிய மூதாதையர் தொடர்பான ஒரு புராணமேயாகும்.[7] இது, மங்கோலியப் பேரரசைத் தோற்றுவித்த மன்னரான செங்கிஸ் கான் மரணத்திற்கு பிறகு எழுதப்பட்டதாகும். [8] அந்த புராணத்தில், மங்கோலியர்கள் மற்ற பழங்குடியினரைக் கைப்பற்றியதோடு, அத்தகைய படுகொலைகளை நடத்தினர், முடிவில் இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் எஞ்சி வாழ்ந்தனர்.பின்னர், இந்த இரண்டு குடும்பங்களும், எதிரிக்கு பயந்து, பயமுறுத்தாத நிலப்பகுதிக்கு ஓடின, அவை சாலைகள் அல்லாத மலைகளும் காடுகளும் மட்டுமே இருந்தன.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்குன்_ஆறு_(ஆசியா)&oldid=2753871" இருந்து மீள்விக்கப்பட்டது