அருந்ததி பாண்டவனே
Appearance
அருந்ததி பாண்டவனே Arundhati Pantawane | |
---|---|
நேர்முக விவரம் | |
பிறப்பு பெயர் | அருந்ததி பாண்டவனே |
நாடு | இந்தியா |
பிறப்பு | 2 செப்டம்பர் 1989 நாக்பூர் மகாராட்டிரம் இந்தியா |
வசிக்கும் இடம் | நாக்பூர் மகாராட்டிரம் இந்தியா |
உயரம் | 5"4 அடி |
எடை | 50 கிலோ கிராம் |
கரம் | வலது கை |
பயிற்சியாளர் | புல்லேலா கோபிசந்த் |
பெண்கள் ஒற்றையர் | |
விளையாட்டு பட்ட(ம்/ங்கள்) | 2012 பகுரைன் பன்னாட்டு போட்டி |
விளையாடியவை | 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் |
பெரும தரவரிசையிடம் | 49 (27 சூன் 2013) |
தற்போதைய தரவரிசை | 52 (9 ஆகத்து 2013) |
இ. உ. கூ. சுயவிவரம் |
அருந்ததி பாண்டவனே (Arundhati Pantawane) இந்தியப் பெண் இறகுப்பந்தாட்ட வீராங்கனையாவார். 1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒற்றையர் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக அருந்ததி விளையாடுகிறார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் அணி நிகழ்வில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [1] 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்றார், மேலும் 75ஆவது மூத்த தேசிய இறகுப்பந்து வெற்றியாளர் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். [2] [3]
வெற்றிகள்
[தொகு]தனிப்பட்டவை
[தொகு]வ. எண் | ஆண்டு | போட்டி | இறுதிப்போட்டியில் எதிரணி | புள்ளிகள் |
---|---|---|---|---|
1 | 2012 | பகுரைன் பன்னாட்டு போட்டி | தன்வி லாடு | 20–22, 21–12, 21–19 |
தனிப்பட்ட இரண்டாமிடம்
[தொகு]வ. எண் | ஆண்டு | போட்டி | இறுதிப்போட்டியில் எதிரணி | புள்ளிகள் |
---|---|---|---|---|
1 | 2011 | எசுதோனிய பன்னாட்டுப் போட்டி | மிச்செல் சான் கிட் யிங்கு | 16–21, 19–21 |
2 | 2011 | செக் பன்னாட்டுப் போட்டி | கிறிசுடினா காவ்ன்கோல்டு | 10–21, 18–21 |
குடும்பம்
[தொகு]2016 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் அருந்ததி கோழிக்கோடு இறகுப்பந்து வீரர் அருண் விசுணுவை மணந்தார். [4] இந்த தம்பதிக்கு அதர்வ் அருண் விசுணு என்ற மகன் உள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Asian Games: Indian shuttlers out of badminton team events". http://www.dnaindia.com/sport/report-asian-games-indian-shuttlers-out-of-badminton-team-events-1465956. பார்த்த நாள்: 8 April 2016.
- ↑ "Arundhati and Guru Sai Dutt bag badminton titles". http://www.thehindu.com/todays-paper/tp-sports/arundhati-and-guru-sai-dutt-bag-badminton-titles/article1478903.ece. பார்த்த நாள்: 8 April 2016.
- ↑ "75th Senior National Badminton Championships,Rohtak-2010". பார்க்கப்பட்ட நாள் 8 April 2016.
- ↑ Nayse, Suhas (January 4, 2016). "Badminton player Arundhati weds Arun Vishnu" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.