அருணிமா சின்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருணிமா சின்கா
Arunima sinha.png
பிறப்பு20 சூலை 1988 (அகவை 33)
அம்பேத்கர் நகர் மாவட்டம்
பணிமலையேறுநர், கைப்பந்தாட்ட வீரர்
விருதுகள்விளையாட்டுக்கான பத்மசிறீ
இணையத்தளம்http://ArunimaSinha.com

அருணிமா சின்கா (Arunima Sinha, பிறப்பு-1988) என்பவர் இடது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் எவரெசுடு மலை முகட்டை ஏறித் தொட்ட முதல் பெண்மணியும் இந்தியரும் ஆவார்[1][2][3]. இவர் தொடக்கத்தில் கைப்பந்து விளையாட்டில் சிறந்தவராக இருந்தார்.

வரலாறு[தொகு]

உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் நகரில் பிறந்த அருணிமா சின்கா கல்லூரியில் பட்ட மேற்படிப்பை முடித்துவிட்டு சட்டத்தையும் படித்தார். தேசிய அளவிலான கைப்பந்து ஆட்ட வீராங்கனையான[4] அருணிமா 2011ஆம் ஆண்டில் தொடர்வண்டியில் பயணம் செய்தபோது கொள்ளையர்களால் தாக்கப்பட்டு ஓடும் தொடர்வண்டியிலிருந்து வெளியே தூக்கி எறியப் பட்டார். அதன் விளைவாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு இவரின் இடது கால் துண்டிக்கப்பட்டது[5]. 2012 ஆம் ஆண்டில் நடுவண் தொழில் பாதுகாப்புப் படையில் தலைமைக் காவலராகப் பணியில் சேர்ந்தார்[6].

மலையேற்றம்[தொகு]

இடது கால் துண்டிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோதே எவரெசுடு மலையில் ஏறவேண்டும் என்று விரும்பினார்[7]. அவ்வாறே 2013 ஆம் ஆண்டு மே மாத 21 ஆம் பக்கலில் எவரெசுடு மலையேறி உச்சியை எட்டினார். எவரெசுடு மலை மட்டும் அல்லாது உலகில் உள்ள மற்ற மிக உயர்ந்த மலைகளிலும் ஏறவேண்டும் என்று அருணிமா ஆசைப்பட்டார். ஆதலால் ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை ஐரோப்பாவின் எல்பராஸ் ஆத்திரேலியாவின் கொஸ்கியஸ்கோ ஆகிய மலைகளில் ஏறினார். மேலும் மெக்கின்லே, வின்சன் மாசிப், அக்கோன்காகுவா என்னும் மலைகளில் ஏறி உலகச் சாதனை படைக்க விரும்புகிறார் அருணிமா.

பிற சிறப்புகள்[தொகு]

2015 ஆம் ஆண்டில் இவருக்கு பத்மசிறீ பட்டம் வழங்கப் பட்டது[8]. இவருடைய தன் வரலாற்று நூல் 2014 திசம்பரில் இந்தியத் தலைமை அமைச்சரால் வெளியிடப்பட்டது. உடல் குறைபாடு கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டில் பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் சந்திரசேகர் ஆசாத் விக்லாங்க் கேல் அகாதமி என்னும் ஓர் அமைப்பை நிறுவி உள்ளார்[9].

மேற்கோள்[தொகு]

  1. "Arunima Sinha, Indian Woman, Is First Female Amputee To Climb Everest". The Huffington Post. 2013-05-22. http://www.huffingtonpost.com/2013/05/22/arunima-sinha-first-female-amputee-everest_n_3317252.html. பார்த்த நாள்: 2013-05-22. 
  2. http://www.indoscopy.com/2013/05/first-indian-amputee-climb-everest.html பரணிடப்பட்டது 2014-02-22 at the வந்தவழி இயந்திரம் | Arunima Sinha first Indian amputee to climb Mt Everest
  3. "Arunima becomes first Indian amputee to scale Everest". தி இந்து. 2013-05-21. http://www.thehindu.com/news/national/arunima-becomes-first-indian-amputee-to-scale-everest/article4736281.ece. பார்த்த நாள்: 2013-05-21. 
  4. "National player thrown off train in UP, loses leg". India Today. 2011-04-13. http://indiatoday.intoday.in/story/national-player-thrown-off-train-in-uttar-pradesh-loses-leg/1/135153.html. பார்த்த நாள்: 2013-05-21. 
  5. "Arunima Sinha becomes first Indian amputee to scale Mt Everest". இந்தியன் எக்சுபிரசு. 2013-05-21. http://www.indianexpress.com/news/arunima-sinha-becomes-first-indian-amputee-to-scale-mt-everest/1118709/. பார்த்த நாள்: 2013-05-21. 
  6. "Amputee Everest climber Arunima Sinha to be an officer in CISF". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2013-05-23. Archived from the original on 2013-06-09. https://web.archive.org/web/20130609061702/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-23/india/39474986_1_everest-climber-arunima-sinha-cisf. பார்த்த நாள்: 2013-05-24. 
  7. "Win: Arunima Sinha is first Indian amputee to scale Mount Everest". First Post (India). 2013-05-21. http://www.firstpost.com/sports/win-arunima-sinha-is-first-indian-amputee-to-scale-mount-everest-801977.html. பார்த்த நாள்: 2013-05-24. 
  8. "Padma Awards 2015". Press Information Bureau. மூல முகவரியிலிருந்து 26 ஜனவரி 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 January 2015.
  9. "Arunima chases her next dream: A sports academy in Unnao". Hindustan Times. Archived from the original on 2018-12-24. https://web.archive.org/web/20181224204010/https://www.hindustantimes.com/archive-news/. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணிமா_சின்கா&oldid=3286085" இருந்து மீள்விக்கப்பட்டது