அருணா ரெட்டி
தனித் தகவல்கள் | |
---|---|
நாடு | இந்தியா |
இருப்பிடம் | ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா |
உயரம் | 4 அடி 8 அங்குலம்[1] |
வகை | பெண்கள் கலையாற்றல் |
நிலை | மூத்த சர்வதேச எலைட் (இந்திய தேசிய அணி) |
தேசிய அணியில் ஆண்டுகள் | 2013 |
கல்லூரி அணி | புனித மேரி கல்லூரி, ஐதராபாத்து |
புத்தா அருணா ரெட்டி (Budda Aruna Reddy; பிறப்பு 25 திசம்பர் 1995) ஓர் இந்திய பெண் கலைநய சீருடற்பயிற்சியாளர் ஆவார். இவர் சர்வதேச போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மெல்பேர்னில் நடந்த 2018 உலகக் கோப்பை சீருடற்பயிற்சியில் பெண்கள் வால்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். சீருடற்பயிற்சி உலகக் கோப்பையில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் இவர் படைத்தார். பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப்பில் நடந்த 2013 உலக கலை சீருடற்பயிற்சி வாகைப்போட்டி உட்பட உலக வாகையாளர் போட்டிகளில் அவர் போட்டியிட்டார்.[2] துடுப்பாட்ட வீரர் ராகுல் டிராவிட் தடகள வழிகாட்டி திட்டத்தின் மூலம் இவர் கோஸ்போர்ட்ஸ் அறக்கட்டளையால் (GoSports Foundation) ஆதரிக்கப்படுகிறார். இது இந்தியாவில் விளையாட்டுச் சூழலில் தொழில்முறையையும், நேர்மறையையும் புகுத்தும் தனி நோக்கத்துடன் 2008இல் நிறுவப்பட்டது, இது பல உதவித் தொகைத் திட்டங்கள் மூலம் பல ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் துறைகளைச் சேர்ந்த பல விளையாட்டு வீரர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]அருணா ரெட்டி, தெலங்காணாவின் ஐதராபாத்தில் கணக்காளரான நாராயண ரெட்டி என்பவருக்கும் சுபத்ரா என்பவருக்கும் மகளாகப் பிறந்தார். ஒரு நிறுவனச் கம்பெனி செயலாளராக இருக்கும் பவானி ரெட்டி என்ற ஒரு மூத்த சகோதரி இருக்கிறார்.[3] 2013 ஆம் ஆண்டில் ஐதராபாத்தின் பசீர்பாக் புனித மேரி இளையோர் கல்லூரியில் இடைநிலைப் படிப்பை முடித்தார். பின்னர், 2017 இல் ஐதராபாத்து, புனித மேரி கல்லூரியில் இளங்கலை வணிகவியலை முடித்தார். இவர் கராத்தேவில் கருப்பு பட்டையை கொண்டுள்ளார். இவர் சீருடைப் பயிற்சியில் சேரும் வரை கராத்தேப் பயிற்சியாளராக இருந்தார்.
ஆரம்பகால சீருடைப் பயிற்சித் தொழில்
[தொகு]அருணா ரெட்டிக்கு ஐந்து வயதாக இருந்தபோது, இவரது தந்தை இவரை கராத்தேவிலிருந்து வெளியேற்றி, சீருடைப் பயிற்சியில் சேர்த்தார். அவர் இவரது உடலின் நெகிழ்வுத்தன்மையைக் கண்டறிந்து சீருடைப் பயிற்சியில் இவரை ஈடுபடுத்தினார். பின்னர் இவரது தந்தை அருணாவை பயிற்சியாளர்கள், சொர்ணலதா, இரவீந்தர் ஆகியோரின் பயிற்சியின் கீழ் ஐதராபாத்து லால் பகதூர் சாஸ்திரி விளையாட்டரங்கத்தில் சேர்த்தார்.
சொர்ணலதாவின் கணவர் கிரிராஜ், அருணாவின் திறமையை கவனித்தபின் தனக்குக் கீழ் பயிற்சிக்கு அழைத்துச் சென்றார். கிரிராஜ் 2008இல் ஒரு விபத்தில் இறந்தார். பின்னர் அருணா பயிற்சியாளர் பிரிஜ் கிஷோர் என்பவரின் கீழ் பயிற்சி பெற்றார். அவருடன் மூன்று இந்தியாவின் தேசிய விளையாட்டுகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றார்.
சர்வதேச சீருடைப் பயிற்சித் தொழில்
[தொகு]அருணா 2013, 2014 2017, 2019 ஆம் ஆண்டுகளில் அன்ட்வெர்ப் (பெல்ஜியம்), நானிங் (சீனா), மொண்ட்ரியால்(கனடா), இசுடுட்கார்ட்(டாய்ட்ச் ) ஆகிய நகரங்களில் நடந்த உலக வாகையாளர் போட்டிகளில் பங்கேற்றார். ஆனால் இவரால் தகுதிச் சுற்றுகளை தாண்டி முன்னேற முடியவில்லை.[4]
உலகக் கோப்பை வெண்கலப் பதக்கம்
[தொகு]இவர் 2018 சீருடைப் பயிற்சி உலகக் கோப்பையில் கலந்து கொண்டார். இப்போட்டியில் தனிநபர் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார்.[5]
அருணா இந்த வெற்றியை தனது திறனை தூண்டிய தன்னை ஒரு சீருடைபயிற்சியாளாராக உணரத் தூண்டிய மறைந்த தனது தந்தைக்கு தனது அர்ப்பணித்தார். தெலங்காணா முதலமைச்சர் க. சந்திரசேகர் ராவிடமிருந்து ₹ 2 கோடி ரொக்கப் பரிசையும் பெற்றார்.[6]
பொதுநலவாய விளையாட்டு
[தொகு]ஆத்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட், 2018 பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கச் செய்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archived copy". Archived from the original on 12 March 2018. பார்க்கப்பட்ட நாள் 11 March 2018.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "2013 World Gymnastics Championships athletes - Aruna Budda Reddy". longinestiming.com. பார்க்கப்பட்ட நாள் 27 January 2016.
- ↑ Aruna Budda Reddy: Father's commitment helps Aruna clinch top honours | More sports News - Times of India
- ↑ "Aruna Budda Reddy: All you need to know about India's first Gymnastics World Cup medallist - Firstpost". www.firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 2018-02-27.
- ↑ "Aruna Budda Reddy clinches bronze at 2018 Gymnastics World Cup". India Today (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-02-24. பார்க்கப்பட்ட நாள் 2018-02-24.
- ↑ KCR announces Rs 2 cr prize money for gymnast Aruna