அருணா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருணா தேவி
பீகாரின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2015
முன்னையவர்பிரதீப் மகதோ
தொகுதிவாரிசாலிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2000–2005
முன்னையவர்ராமசரய் பிரசாத் சிங்
பின்னவர்பிரதீப் மகதோ
தொகுதிவாரிசாலிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1976 (1976-01-01) (அகவை 48)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2015-தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (2005-15)
லோக் ஜனசக்தி கட்சி (before 2005)
துணைவர்அகிலேசு சிங்

அருணா தேவி (Aruna Devi) இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான இவர் தற்போது நவாடா மாவட்டத்தின் வாரிசாலிகஞ்ச் தொகுதியின் பிரதிநிதியாக பீகார் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக பீகார் சட்டமன்ற உறுப்பினராக சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்ரவரி 2005 இல் லோக் ஜனசக்தி கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். பின்னர் இவர் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார் மற்றும் அக்டோபர் 2005 & 2010 இல் காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்டு ஐக்கிய ஜனதா தளத்தின் பிரதீப் மகதோவிடம் தோல்வியடைந்தார். [1] [2] பின்னர் 2015 இல் பாரதிய ஜனதா கட்சிக்கு தாவி 2015 மற்றும் 2020 இல் வெற்றி பெற்றார். [3][4] [5] [6] [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ARUNA DEVI (Indian National Congress(INC)):Constituency- Warsaliganj (Nawada ) - Affidavit Information of Candidate:". myneta.info.
  2. "Aruna Devi(Indian National Congress(INC)):Constituency- Warsaliganj(NAWADA) - Affidavit Information of Candidate:". myneta.info.
  3. "Bihar Assembly Election 2020: Two-time MLA Aruna Devi to fight Satish Kumar in Warsaliganj". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-10-26. பார்க்கப்பட்ட நாள் 2023-01-27.
  4. "Aruna Devi(Bharatiya Janata Party(BJP)):Constituency- WARSALIGANJ(NAWADA) - Affidavit Information of Candidate:". myneta.info.
  5. "Aruna Devi(Bharatiya Janata Party(BJP)):Constituency- WARSALIGANJ(NAWADA) - Affidavit Information of Candidate:". myneta.info.
  6. "Parties give tickets to criminals and kin in Bihar". The Sunday Guardian Live. 2020-10-10.
  7. "Warsaliganj Election and Results 2020, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணா_தேவி&oldid=3646423" இலிருந்து மீள்விக்கப்பட்டது