அரி சிங் நல்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சர்தார் அரி சிங் நல்வா
1791 - 1837
Hari Singh Nalwa british museum.jpg
"முழுக் கவசத்துடன் போர்புரியும் நிலையில் அமர்ந்திருக்கும் அரி சிங் நல்வா"- - சேர் ஜான் மக்குவீனின் நாட்டார் ஓவிய நகல்
பட்டப்பெயர்
  • பாக் மார்[1]
  • (சிங்க-வேட்டையாளர்)
பிறப்பு 1791 (1791)
இறப்பு 1837 (அகவை 45–46)
சார்பு Sikh Empire flag.jpg சீக்கியப் பேரரசு
பிரிவு சீக்கிய கால்சாப் படை
சேவை ஆண்டு(கள்) 1804–1837
தரம்
  • சீக்கிய கால்சாப் படையின் தளபதி (ஜார்னைல்)
  • ஆப்கானித்தானிய எல்லைப்புறத்தில் தலைமைத் தளபதி (1825–1837)
ஆணை
சமர்/போர்கள் கசூர் சண்டை (1807), அட்டோக் சண்டை (1813), மூல்தான் சண்டை (1818), சோபியான் சண்டை (1819), மங்கல் சண்டை (1821), மான்கெரா சண்டை (1821), நவ்செரா சண்டை (1823), சியால்கோட் சண்டை (1824), சைது சண்டை (1827), பெசாவர் சண்டை (1834), ஜம்ருத் சண்டை (1837)]]
விருதுகள் இசாசி-இ-சர்தாரி
உறவினர்
  • குருதாஸ் சிங் (தந்தை)
  • தர்ம் கவுர் (அன்னை)

அரி சிங் நல்வா (Hari Singh Nalwa, நலுவா) (1791–1837) பேரரசர் இரஞ்சித் சிங்கின் சீக்கியப் பேரரசுப் படையான சீக்கிய கால்சாப் படையின் தலைமைத் தளபதியாக இருந்தவர். கசூர், சியால்கோட், அட்டோக், முல்தான், காஷ்மீர், பெசாவர் மற்றும் ஜம்ருத்தை கைப்பற்றியமைக்காக அறியப்படுகின்றார். மேலும் இவர் பாக்கித்தானில் உள்ள அரிப்பூர் நகரத்தை கட்டமைத்தார்; இவரது பெயராலேயே இந்த நகரம் அழைக்கப்படுகின்றது.

சீக்கியப் பேரரசின் எல்லைகளை சிந்து ஆற்றிற்கு அப்பால் கைபர் கணவாய் நுழைவு வரை விரிவுபடுத்தியதற்கு அரிசிங் நல்வா காரணமாவார். இவர் இறந்தபோது பேரரசின் மேற்கு எல்லை ஜம்ருதாக இருந்தது.

காஷ்மீர், பெசாவர் மற்றும் பாக்கித்தானிலுள்ள அசாரா பகுதிகளுக்கு ஆளுநராக (திவான்) பொறுப்பாற்றியுள்ளார். சீக்கியப் பேரரசுக்கு காசுமீர், பெசாவர் பகுதிகளிலிருந்து வரி வசூலிக்க நாணயச்சாலையை நிறுவினார்.[3]

மேற்சான்றுகள்[தொகு]

மேற்கோள்கள்

  1. ( [[#CITEREF|]])
  2. 2.0 2.1 2.2 2.3 ( [[#CITEREF|]])
  3. ( [[#CITEREF|]])

நூற்கோவை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரி_சிங்_நல்வா&oldid=2716914" இருந்து மீள்விக்கப்பட்டது