அராம் பானு பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அராம் பானு பேகம்
Aram Banu Begum
இளவரசி, முகலாயப் பேரரசு
பிறப்பு22 திசம்பர் 1584
பத்தேப்பூர் சிக்ரி, ஆக்ரா, முகலாயப் பேரரசு
இறப்பு17 சூன் 1624(1624-06-17) (அகவை 39)
முகலாயப் பேரரசு
புதைத்த இடம்
அக்பர் கல்லறை, சிக்கந்தரா, ஆக்ரா
மரபுதைமூர் வம்சம்
தந்தைஅக்பர்
தாய்பீபி தௌலத்து சாத்து
மதம்சுன்னி இசுலாம்

அராம் பானு பேகம் (Aram Banu Begum) இந்தியாவின் முகலாயப் பேரரசைச் சேர்ந்த ஒரு முகலாய இளவரசியாவார். மூன்றாவது முகலாய பேரரசர் அக்பரின் இளைய மகளாக அறியப்படுகிறார்.[1] 1584 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.

வாழ்க்கை.[தொகு]

அக்பர் மற்றும் பீபி தௌலத் சாத்து தம்பதியருக்கு மகளாக அராம் பானு பேகம் பிறந்தார். இவருக்கு சக்கர்-உன்-நிசா பேகம் என்ற ஒரு சகோதரியும் இருந்தார்.[1]

அராம் பானு பேகம் மிகவும் வெளிப்படையாகவும் குறும்புத்தனமாகவும் இருந்தார். அந்தப்புரத்தின் பட்டாம்பூச்சி என்று இவர் அழைக்கப்பட்டார். அக்பரால் அன்பாக லாட்லி பேகம் என்று அழைக்கப்பட்டார். அராம் பானு பேகம் விரைவான புத்திசாலியாகவும், பதிலளிப்பதில் கூர்மையாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. சகாங்கீரின் கூற்றுப்படி, அக்பர் இவரை மிகவும் விரும்பினார். மேலும் இவரது இணக்கமற்ற தன்மையை பணிவு என்றும் விவரித்தார்.[2]

பாபா! என்னைப் போலவே, எனக்குப் பிறகு, என் அன்பான இந்த சகோதரிக்கும் இரக்கம் காட்டுங்கள்.[2] என்று அக்பர் சகாங்கீரை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மரணம்.[தொகு]

அராம் பானு திருமணமாகாமல் இருந்தார், அவரது சகோதரர் சகாங்கீரின் ஆட்சியின் போது இறந்தார். வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட ஆரம் பானு பேகம் 1624 ஆம் ஆண்டு சூன் மாதம் 17 ஆம் தேதியன்று இறந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Fazl, Abul. The Akbarnama. III. Calcutta: ASIATIC SOCIETY OF BENGAL. பக். 661. "One of the occurrences was the birth of Ārām Bānū Begam.* On 12 Dai, 22 December 1584, divine month, and the 19th degree of Sagittarius, and according to the calculation of the Indians, one degree and 54 minutes, that night-gleaming jewel of fortune appeared, and glorified the harem of the Shāhinshāh." 
  2. 2.0 2.1 Jahangirnama Volume I. பக். 36. 
  3. The Jahangirnama: Memoirs of Jahangir, Emperor of India. Freer Gallery of Art; Arthur M. Sackler Gallery. பக். 423. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அராம்_பானு_பேகம்&oldid=3920849" இலிருந்து மீள்விக்கப்பட்டது