அரவாக்கன் மொழிகள்
அரவாக்கன் மைப்பூரியன்
| |
---|---|
புவியியல் பரம்பல்: |
ஈக்குவடோர், உருகுவே, சிலி ஆகியவை தவிந்த எல்லாத் தென்னமெரிக்க நாடுகளிலும் இருந்து நடு அமெரிக்கா மற்றும் கரிபியப் பகுதிகள். (பரவிய வழி) |
மொழி வகைப்பாடு: | பெரும் அரவாக்கன் ? அரவாக்கன் |
துணைப்பிரிவு: |
வட
தென்
|
ISO 639-5: | awd |
தென்னமெரிக்காவில் மைப்பூரியன் மொழிகள் (கரிபியப் பகுதிகளும் நடு அமெரிக்காவும் சேர்க்கப்படவில்லை): வடமைப்பூரியன் (தெளிவான நீலம்), தென்மைப்பூரியன் (கடும் நீலம்), புள்ளிகள் வழக்கொழிந்த மொழிகளின் அமைவிடங்களைக் காட்டுகின்றன, சாம்பல்நிறப் பகுதிகள் முன்னைய அமைவிடங்களைக் காட்டுகின்றன. |
அரவாக்கன் மொழிகள் (Arawakan languages) தென்னமெரிக்காவின் பண்டைத் தாயக மக்கள் மத்தியில் உருவான ஒரு மொழிக் குடும்பம். இவை மைப்பூரிய மொழிகள் எனவும் அறியப்படுகின்றன. இக்குடும்பத்தின் கிளைகள் நடு அமெரிக்கா, இன்றைய பகாமாசு உள்ளடங்கிய கரிபிய மற்றும் அத்திலாந்திக் பகுதிகளில் உள்ள பெரிய அன்டிலெசு ஆகியவற்றுக்கும் பரவின. ஈக்குவடோர், உருகுவே, சிலி ஆகிய நாடுகள் மட்டுமே இன்று அரவாக்கன் மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்டிருக்கவில்லை.
வெனெசுவேலாவில் உள்ள மைப்பூரே மொழியைத் தழுவி இக்குடும்பத்துக்கு மைப்பூரே என்னும் பெயர் முதலில் 1782 ஆம் ஆண்டில் பிலிப்போ எஸ். கிலிஜ் என்பவரால் இடப்பட்டது. இம்மொழியையே அவர் இக்குடும்பம் பற்றி ஆராய்வதற்கு அடிப்படையாகக் கொண்டார். ஒரு நூற்றாண்டின் பின்னர், பண்பாட்டு அடிப்படையில் முக்கியமான அரவாக் மொழியின் பெயரைத் தழுவி இக்குடும்பத்துக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வட அமெரிக்க அறிஞர்கள் பரந்த பெரும் அரவாக்கன் என்னும் முன்மொழிவை வைக்கும்வரை அரவாக்கன் என்னும் பெயர் நிலைத்திருந்தது. பின்னர் மைப்பூரிய மொழிகள் என்னும் பெயர் மூலக் குடும்பத்துக்கான பெயராக மீள்விக்கப்பட்டுள்ளது.