மைப்பூரே மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைப்பூரே
நாடு(கள்)வெனெசுவேலா
பிராந்தியம்ஒரினோக்கோ
Extinct18ம் நூற்றாண்டின் பிற்பகுதி
அரவாக்கன்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3இல்லை
மொழிசார் பட்டியல்
qij
மொழிக் குறிப்புmaip1246[1]

மைப்பூரே மொழி (Maipure language) முன்னர் வென்டுவாரி, சிப்பாப்போ, அவுட்டனா ஆற்றோரங்களில் பேசப்பட்ட மொழியாகும். அத்துடன் மேல் ஒரினோக்கோ பகுதியில் பொது மொழியாகவும் இது இருந்தது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இது அழிந்துவிட்டது. சம்போனி (2003) என்பது இம்மொழியின் இலக்கண விபரம் ஆகும். இதில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பதிவுகளில் இருந்து, பெரும்பாலும் இத்தாலிய சமயப் பரப்புரையாளர் பிலிப்போ எஸ். கிலீயின் எழுத்துக்களில் இருந்து, சேகரிக்கப்பட்ட ஒரு சொற் பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளது. மைப்பூரிய மொழிக் குடும்பத்தை அடையாளம் காண உதவியதால் இது முக்கியத்துவம் உடையது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Maipure". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/maip1246. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைப்பூரே_மொழி&oldid=1875578" இலிருந்து மீள்விக்கப்பட்டது