அயூத்தியா (வரலாற்று நகரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
அயூத்தியா நகரம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
அயூத்தியா வரலாற்று பூங்கா வரைபடம்
வகைCultural
ஒப்பளவுiii
உசாத்துணை576
UNESCO regionஉலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1991 (15th தொடர்)
அயூத்தியா வரலாற்றுப் பூங்காவில் உள்ள தூபிகள்
புத்தர் தலை,வாட் மகாதாட்

அயூத்தியா (தாய் மொழி: อุทยานประวัติศาสตร์พระนครศรีอยุธยา) பண்டையக்கால சியாமின் (அயூத்தியா பேரரசு) தலைநகராகும். இது தற்போதைய தாய்லாந்து நாட்டில் உள்ளது. தனிச்சிறப்புமிக்க கோபுரங்களுக்காகவும், பெரும் மடாலயங்களுக்காகவும் சிறப்புடையது. உலகின் மிகப்பெரும் நகரங்களில் ஒன்றாகவும், வர்த்தக மையமாகவும், கலாச்சார களமாகவும் 14 ஆம் நூற்றாண்டு தொடங்கி 18 ஆம் நூற்றாண்டு விளங்கியது. 1767 இல் பர்மா ராணுவத்தால் அழிக்கப்படும்வரை சியாமின் தலைநகராக இருந்தது. 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

சியாமின்(அயூத்தியா அரசு) தலைநகராக சுகோதாய்க்குப் பிறகு 1350 ஆம் ஆண்டு அரசர் முதலாம் இராமாதிபோதியால் நிறுவப்பட்டது. 1569 இல் பர்மாவிடம் அயூத்தியா அரசு தோற்றது. அதனைத் தொடர்ந்து 15 ஆண்டுகள் தன்னாட்சியை இழந்திருந்தது.1584 இல் அரசர் நரேசுவன் பர்மியர்களைத் தோற்கடித்துத் தன்னாட்சியை திரும்பப்பெற்றார். புகழ்பெற்ற அரசர் நராயின்(கி.பி.1656 - கி.பி.1688) தலைநகராக அருகண்மை நகரான லோப் பூரியுடன் இணைந்து விளங்கியது. 417 ஆண்டுகளையும் 35 அரசர்களையும் கண்ட இந்நகரை,இரண்டு ஆண்டுகள் கடுமையான போருக்குப்பின் 1767 இல் பர்மா ராணுவம் நிர்மூலமாக்கியது. அரசர் சூரியட்-அமரின் என்ற ஏகாதத் இங்கிருந்து ஆண்ட கடைசி அரசராவார். பின் சியாமின் தலைநகராக பாங்காக் ஆனது.

அமைவிடம்[தொகு]

அயூத்தியா சாவோ பிரயா,பசக், லோப் பூரி என்ற மூன்று ஆறுகள் இணைவதால் உருவாகும் தீவில் அமைந்துள்ளது. மொத்தம் 289 ஹெக்டர் பரப்பளவுடையது. சுற்றிலும் மலை நெற்கழனிகளைக் கொண்டது. தற்காலத்திய பிரா நாகோன் சி அயூத்தியா மாவட்டத்தில் உள்ளது. சியாம் வளைகுடா அருகண்மையில் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் நதியின் மேல்புறம் அமைந்திருந்ததால் அரபு, ஐரோப்பிய அரசுகளிடமிருந்து பாதுகாப்பளித்தது.

பொருளாதாரம்[தொகு]

அயூத்தியா நேர்த்தியான சாலைகளையும், கால்வாய்களையும், அகழிகளையும் கொண்டு சிறப்பான நீர் மேலாண்மையையும் கொண்டிருந்தது. சியாம் வளைகுடாவிற்கு அருகண்மையில் இருந்ததும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் சம தூரத்தில் இருந்ததும் வர்த்தகம் சிறப்புற வழிசெய்தது. கிழக்கிற்கும் மேற்கிற்கும் இணைப்புப் புள்ளியாக விளங்கியது.

கலாச்சாரம்[தொகு]

அயூத்தியாவின் கலாச்சாரத்தில் அரிசி[சான்று தேவை] முக்கிய பங்கு வகித்தது. அதுவே முக்கிய உணவாகவும், முக்கிய வர்த்தக பொருளாகவும் இருந்தது. அரிசியே வரியாகவும் வசூலிக்கப்பட்டது. அயூத்தியா சமூகம் மூன்று நிலைகளைக் கொண்டிருந்தது. மேல் நிலையில் அரசரும், அடி நிலையில் பொதுமக்களும் அடிமைகளும் இருந்தனர். அயூத்தியா அரண்மனைக்கருகில் அயல்நாட்டவர்களுக்கான தனிக் குடியிருப்புப் பகுதிகள் இருந்தன. அயூத்தியாவின் கலை மற்றும் கட்டிட பாணியில் வெளிநாட்டு தாக்கத்தை காணலாம். அயூத்தியாவின் அரண்மனை மற்றும் பௌத்தவிகாரங்கள் மேம்பட்ட உள்ளூர் தொழில்நுட்பத்தையும், யப்பான், சீன, இந்திய, பாரசீக, ஐரோப்பிய கூறுகளையும் கொண்டுள்ளன.

வெளிநாட்டுறவு[தொகு]

அயூத்தியாவின் தூதுவர்கள் பிரெஞ்சு அரசுசபை, டெல்லியில் முகலாயர்கள் அரசுசபை மட்டுமில்லாமல் சீன, யப்பான் அரசுசபைகளிலும் இருந்தனர். அதேபோல் அயல்நாட்டவர்கள் அயூத்தியாவின் அரசில் தூதுவர்களாகவும், அதிகாரிகளாகவும் இருந்தனர். 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐரோப்பியர்கள் அயூத்தியா வந்தனர்.1511 இல் போர்ச்சுகீசியத் தூதரகம் திறக்கப்பட்டது. பின் ஸ்பானியர்கள் வந்தனர். 17 ஆம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் வந்தன. 1662 இல் டச்சு, பிரித்தானிய, பிரான்சு நாடுகள் வந்தன.

தற்கால நிலை[தொகு]

அயூத்தியா 1767 இல் பர்மிய போரில் பெரிதும் அழிவுற்றது. பௌத்தவிகாரங்களும் அரண்மனைகளும் இடிக்கப்பட்டன. அயூத்தியாவின் பொருளாதாரம் சரிவுற்றது. எனவே, நகரம் கைவிடப்பட்டது. மக்கள் புதிய அரசின் தலைநகரான பாங்காக்கிற்கு நகர்ந்தனர். எனினும், புதிய நகரம் தாய் மொழி‎யில் ’அயூத்தியா’ என்ற சொல்லைக் கொண்டுள்ளது.

காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

Lua பிழை: Module:Navbar:58: Invalid title பௌத்த யாத்திரைத் தலங்கள்.