அம்பிகா பெரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பிகா பெரி
பிறப்புஅம்பிகா சுபர்வால்
தேசியம்இந்தியர்
பணிகலைக்கூடத்தின் உரிமையாளர்
அறியப்படுவதுகலைஞர்களுக்கான ஓய்வுவிடுதியை ஏற்படுத்தினார்

அம்பிகா பெரி (Ambica Beri) என்று அறியப்படும் இவரது இயற்பெயர் அம்பிகா சுபர்வால் என்பதாகும். இவர், ஒரு இந்திய கலைக்கூடத்தின் உரிமையாளராக இருக்கிறார். மேலும், கலைஞர்களுக்கான ஓய்வு விடுதியை மத்திய பிரதேசத்தில் நிறுவியதற்காக 2018 இல் இவருக்கு நாரி சக்தி விருது விருது வழங்கப்பட்டது.

வாழ்க்கை[தொகு]

அம்பிகா சுபர்வால் ஒரு பெண்ணாக கலையில் ஆர்வம் கொண்டிருந்தார். இவளுடைய தந்தை ஒரு கட்டிடக் கலைஞர் ஆவார். [1]

அம்பிகா பெரி ஒரு கலைக்கூடத்தின் உரிமையாளராக அறியப்படுகிறார். இவரது கலைக்கூடம் 1990 இல் திறக்கப்பட்டது. மேர்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள இது, சமஸ்கிருதி கலைக்கூடம் என்று அழைக்கப்படுகின்றது.

அம்பிகா பெரி கலைஞர்களுக்காக ஒரு ஓய்வு விடுதியை நிறுவினார்.[2] இது "ஆர்ட் இச்சோல்" (Art Ichol) என்று அழைக்கப்படுகிறது, இது,  கஜுராஹோவின் சுற்றுலாப் பகுதியிலிருந்து 140 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறிய கிராமமான இச்சோலில் உள்ளது [3] மேலும், "கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிற்பிகளுக்கான இந்தியாவின் ஒரே நிரந்தரமான ஆக்கப்பூர்வமான ஓய்வு விடுதி என்று கூறப்பட்டது."

வங்காள சரோது இசைக் கலைஞரும், சரோது தவிர பிற இசைக்கருவிகளையும் வாசிக்க கூடியவரும் இசைத்தொகுப்பாளரும், இருபதாம் நூற்றாண்டின் இந்திய பாரம்பரிய இசை ஆசிரியர்களில் மிகப் புகழ்பெற்றவருமான[4][5][6]மத்திய பிரதேசத்தின் மைகாரில் அல்லாவுதீன் கானின் வீட்டை அம்பிகா பெரி மீட்டெடுத்தார். இந்த வீடு மூன்று பகுதிகளாக உள்ளது. இதன் இரண்டு பகுதிகள் கலைக்கூடம் மற்றும் ஓய்வு விடுதியாகவும் அமரியா என்று அழைக்கப்படும் பகுதி எழுத்தாளர்கள் பயன்பாட்டிற்கும் உள்ளது. [7] இந்த இடம், மூன்று ஏக்கர் சிற்ப பூங்காவை உள்ளடக்கியது. அதில் 'சரோத்' இசைக்கருவி வாசிக்கும் அல்லாவுதீன் கானின் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

விருது[தொகு]

கலைஞர்களுக்கான ஓய்வு விடுதியை மத்திய பிரதேசத்தில் நிறுவியதற்காக 2018 இல் இவருக்கு நாரி சக்தி விருது விருது வழங்கப்பட்டது. இது இந்தியாவில் "பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது" ஆகும். அனைத்துலக பெண்கள் தினமான மார்ச்சு 8, 2018 அன்று அம்பிகா பெரிக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. [8] [2] புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இந்த விருதை வழங்கினார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் சுமார் ஒன்பது நிறுவனங்கள் உட்பட, 30 பேர் கௌரவிக்கப்பட்டனர். விருது பெற்ற அனைவரும் விருதுடன் கூடிய பரிசுத்தொகையாக தலா $ 100,000 பெற்றனர். [9] [10]

குறிப்புகள்[தொகு]

  1. "Ambica Beri's Art Ichol: A creative retreat for artists, writers & sculptors in Madhya Pradesh". https://economictimes.indiatimes.com/magazines/panache/ambica-beris-art-ichol-a-creative-retreat-for-artists-writers-sculptors-in-madhya-pradesh/articleshow/47658366.cms. 
  2. 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; pib என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. "India crowns up Sheroes with 'Nari Shakti Puraskar' to mark Int'l Women's Day". www.newsbharati.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-14.
  4. Lavezzoli, Peter (2006). The Dawn of Indian Music in the West. A&C Black. பக். 67–70. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8264-1815-9. https://books.google.com/books?id=OSZKCXtx-wEC&pg=PA69. 
  5. Arnold, Alison, தொகுப்பாசிரியர் (2000). The Garland Encyclopedia of World Music: South Asia : the Indian subcontinent. Taylor & Francis. பக். 203–204. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8240-4946-2. https://books.google.com/books?id=ZOlNv8MAXIEC&pg=RA2-PA204. 
  6. World Music: The Rough Guide. Volume 2: Latin and North America, Caribbean, India, Asia and Pacific. Rough Guides. 2000. பக். 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85828-636-0. https://books.google.com/books?id=QzX8THIgRjUC&pg=PA77. 
  7. "Judge, Doctor, Scholar, Conservationist: 10 Women Honored at Rashtrapati Bhavan". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-03-08. பார்க்கப்பட்ட நாள் 2021-01-14.
  8. "Nari Shakti Puraskar - Gallery". narishaktipuraskar.wcd.gov.in. Archived from the original on 2021-01-14. பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
  9. "On International Women's Day, the President conferred the prestigious Nari Shakti Puraskars to 30 eminent women and 9 distinguished Institutions for the year 2017". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-01-14.
  10. "International Women's Day: President Kovind honours 39 achievers with 'Nari Shakti Puraskar'". The New Indian Express. Archived from the original on 2021-01-14. பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பிகா_பெரி&oldid=3902757" இலிருந்து மீள்விக்கப்பட்டது