மைகார்
மைகார் என்பது இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் சத்னா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் மற்றும் நகராட்சியாகும். திரிகுடா மலையில் அமைந்துள்ள இந்துக்களின் தாய் தெய்வமான சரஸ்வதி கோயிலுக்கு இந் நகர் பெயர் பெற்றது.
வரலாறு
[தொகு]மைகார் வரலாறு பாலியோலிதிக் யுகத்துடன் தொடர்புடையது. இந்த நகரம் முன்னர் மைகார் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்தது. 1778 ஆம் ஆண்டில் ஜோகிஸ் குலத்தினரால் இந்த மாநிலம் நிறுவப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் ஒரு சுதேச மாநிலமாக மாறியது. மேலும் மத்திய இந்தியா நிறுவனத்தில் புந்தேல் கந்த் ஏஜன்சியின் ஒரு பகுதியாக நிர்வகிக்கப்பட்டது. 1871 ஆம் ஆண்டில் மைகார் உட்பட புந்தல் கந்த் ஏஜென்சியின் கிழக்கு மாநிலங்கள் பிரிக்கப்பட்டு மத்திய இந்தியாவில் பாகேல் கந்தின் புதிய நிர்வாகத்தை உருவாக்கின. 1933 ஆம் ஆண்டில் மைகார், மேற்கு பாகல்கண்டில் உள்ள பத்து மாநிலங்களுடன் மீண்டும் புந்தல் கந்த் ஏஜென்சிக்கு மாற்றபட்டது. இந்த மாநிலத்தை எச்.எச். மகாராஜா ஸ்ரீமந்த் சாஹேப் அக்ஷய் ராஜ் சிங் ஜூ தியோ பகதூர் ஆட்சி செய்தார். மாநிலத்தின் பரப்பளவு 407 சதுர மைல்கள் (1,050 கி.மீ. 2 ) ஆகும். 1901 ஆம் ஆண்டில் இப்பகுதியில் 63,702 மக்கள் வசித்தனர். தாம்சா நதியால் பாய்ச்சப்பட்ட இந்த மாநிலமானது மணற்கற்களை உள்ளடக்கிய வண்டல் மண்ணைக் கொண்டுள்ளது. பெரிய பகுதி காடுகளினால் சூழப்பட்டிருந்தது. மேலும் சிறு ஏற்றுமதி தொழில் நடைப்பெற்றது. 1896-1897 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சத்தால் அரசு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஜெயல்பூருக்கு வடக்கே 97 மைல் (156 கி.மீ) தொலைவில் உள்ள சத்னா மற்றும் ஜபல்பூருக்கு இடையிலான கிழக்கு இந்திய ரயில்வே (இப்போது மேற்கு மத்திய ரயில்வே ) பாதையில் மைகார் ஒரு தரிப்பிடமாக மாறியது. சன்னதிகள் மற்றும் பிற கட்டிடங்களின் இடிபாடுகளை நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணலாம்.[1]
புவியியல்
[தொகு]மைகார் நகரம் 24.27 ° வடக்கு 80.75 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமையப் பெற்றுள்ளது.[2] இது சராசரியாக 367 மீட்டர் (1204 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது . இந்த பகுதியில் சூலை மற்றும் ஆகத்து மாதங்களில் பெரும்பாலும் மிதமான மழை பெய்யும்.
புள்ளிவிபரங்கள்
[தொகு]2001 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி மைகார் நகரின் மக்கட் தொகை 34,347 ஆகும். மொத்த மக்கட் தொகையில் ஆண்கள் 52% வீதமாகவும், பெண்கள் 48% வீதமாகவும் காணப்படுகின்றனர்.
மைகார் மக்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 64% ஆகும். ஆண்களின் கல்வியறிவு விகிதம் 72% ஆகவும், பெண் கல்வியறிவு 56% ஆகவும் உள்ளது. மொத்த மக்கட் தொகையில் 15% வீதமானோர் ஆறு வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.[3]
பொருளாதாரம்
[தொகு]மைகாரின் நிலத்தின் அடியில் சுண்ணாம்பு கிடைப்பதால் இந்த நகரம் மாநிலத்தின் மிகவும் வளர்ந்த தொழிற்துறை நகரங்களில் ஒன்றாகும். இங்கு மைகார் சீமேந்து தொழிற்சாலை அமைந்திருக்கின்றது.[4] தொழிற்சாலை வளாகமும், நகரியமும் மைகார் நகரிலிருந்து மைகார் -விஜயராகவ்கர் சாலையில் 8 கி.மீ தூரத்தில் சர்லநகரில் அமைந்துள்ளது. கே.ஜே.எஸ் சீமேந்து தொழிற்சாலை ரேவா சாலையில் உள்ள முக்கிய தொழிற்சாலையாகும். ரிலையன்ஸ் தனது முதல் சீமேந்து ஆலையை மைகார் அருகே கட்னி சாலையில் 2014 ஆம் ஆண்டில் திறந்தது. ஆனால் நிதி மற்றும் தொழிற்துறை பிரச்சினைகளின் காரணமாக எம்.பி. பிர்லா குழுமம் இத் தொழிற்சாலையை 2016 ஆம் ஆண்டில் வாங்கியது. மைகார் மக்களில் பெரும்பான்மையானோர் விவசாயிகள் ஆவார்கள். இவர்களின் வாழ்வாதாரம் விவசாயமாகும்.
போக்குவரத்து
[தொகு]மைகார் பிற நகரங்களுடன் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இது முக்கிய ரயில் பாதைகளினாலும், தேசிய நெடுஞ்சாலை 7 வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது.
ஜவல்பூர் மற்றும் கஜுராஹோ ஆகியவை அருகில் அமைந்துள்ள விமான நிலையங்கள் ஆகும்.
சான்றுகள்
[தொகு]- ↑ "Maihar", 1911 Encyclopædia Britannica, Volume 17, retrieved 2019-11-28
{{citation}}
:|volume=
has extra text (help) - ↑ "Maps, Weather, and Airports for Maihar, India". www.fallingrain.com. Retrieved 2019-11-28.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Archived from the original on 2004-06-16.
- ↑ ":: BIRLA GOLD ::". birlagoldcement.com. Archived from the original on 2019-11-28. Retrieved 2019-11-28.