அமோனியம் சோடியம் பாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமோனியம் சோடியம் பாசுபேட்டு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் சோடியம் பாசுபேட்டு,
வேறு பெயர்கள்
மைக்ரோகாசுமிக் உப்பு, அமோனியம் சோடியம் பாசுபேட்டு, அமோனியம் சோடியம் ஐதரசன் பாசுபேட்டு,
இனங்காட்டிகள்
7783-13-3 N
ChemSpider 140225 N
EC number 250-787-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 159458
பண்புகள்
Na(NH4)HPO4
வாய்ப்பாட்டு எடை 137.0077 கி/மோல்
தோற்றம் நெடியற்ற படிகங்கள்
அடர்த்தி 1.544 கி/செ.மீ3
உருகுநிலை
5 பகுதி குளிர்ச்சி, 1 பகுதி கொதிக்கும் நீர். நடைமுறையில் எத்தனாலில் கரையாது.
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைசரிவச்சு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

அமோனியம் சோடியம் பாசுபேட்டு (Microcosmic salt) என்பது Na(NH4)HPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மைக்ரோகாசுமிக் உப்பு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் சிறுநீரில் கிடைக்கிறது. சிறுநீர் படிகங்களுடன் ஆல்ககாலைச் சேர்த்து யூரியாவைப் பிரித்தெடுத்த பின்னர் எஞ்சியிருக்கும் கசடில் அமோனியம் சோடியம் பாசுபேட்டு எஞ்சியிருக்கிறது. சிடெர்கோரைட்டு என்ற கனிம வடிவில் இம்மைக்ரோகாசுமிக் உப்பு காணப்படுகிறது.

என்னிக் பிராண்ட் என்பவர் சிறுநீரில் இருந்து தங்கத்தை எடுக்க முயன்றபோது இந்த உப்பிலிருந்து தூய்மையான பாசுபரசின் முதல் பிரித்தெடுத்தல் நிகழ்ந்தது.

ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் மைக்ரோகாசுமிக் உப்பு மணி சோதனையில் மைக்ரோ காசுமிக் உப்பு ஓர் அத்தியாவசிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இச்சோதனையில் உலோக இயங்குறுப்புகள் அடையாளம் காணப்படுகின்றன. வெப்பம் அல்லது குளிர்ச்சியான நிபந்தனைகளில் ஆக்சிசனேற்ற அல்லது ஒடுக்க சுவாலைகளில் அவை உருவாக்கும் நிறங்களை அடிப்படையாகக் கொண்டு இச்சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மைக்ரோகாசுமிக் உப்புகள் நான்கு நீரேற்றுகளை உருவாக்குகின்றன.

மேற்கோள்கள்[தொகு]