அமர் சிங் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமர் சிங்
2008ஆம் ஆண்டு உலக பொருளாதார மன்றத்தின் இந்தியா பொருளாதார உச்சிமாநாட்டில் அமர்சிங்.
மக்களவை உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 சனவரி 1956 (1956-01-27) (அகவை 68)
அசம்கர்,தர்வான் உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇராட்டிரிய லோக் மன்ச்
துணைவர்பங்கஜகுமாரி சிங்
பிள்ளைகள்2 மகள்கள்
முன்னாள் கல்லூரிபுனித சேவியர் கல்லூரி, கொல்கத்தா
பல்கலைக்கழக சட்டக் கல்லூரி, கொல்கத்தா
தொழில்அரசியல்வாதி
இணையத்தளம்[1]

அமர் சிங் (Amar Singh, இந்தி: अमर सिंह, 27 சனவரி 1956) இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் சமாஜ்வாடி கட்சியை நிறுவிய தலைவர்களில் ஒருவருமாவார். அவரது தூய இந்தி வன்மைக்காகவும் அரசியல் தொடர்புகளுக்காகவும் பெரிதும் அறியப்படுபவர். பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் இவர்மீது நிலுவையில் உள்ளது [1][2] சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச்செயலாளராகவும் மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். சனவரி 6, 2010 அன்று கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவுடனான மனவேற்றுமை காரணமாக அக்கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகினார் [[3]; பின்னர் கட்சித் தலைமை அவரை அப்பதவிகளிலிருந்து நீக்கியது.

நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க ஒரு கோடி ரூபாய் பணம் தரப்பட்ட எழுந்த வழக்கில் இவரது உதவியாளர் எனக் கருதப்படும் சஞ்சீவ் சக்சேனா கைது செய்யப்பட்டுள்ளார்; இவரும் இவ்வழக்கில் தொடர்புடையவராக காவல்துறை கருதுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Corruption case: Amar Singh gets reprieve from high court". Archived from the original on 2010-09-12. பார்க்கப்பட்ட நாள் 2011-07-19.
  2. Amar Singh’s telephone conversations recorded, Such acts are surely very bad and very shameful
  3. Amar Singh resigns as general secretary of Samajwadi Party[தொடர்பிழந்த இணைப்பு]
  4. அமர்சிங்கிடம் விசாரணை: தில்லி போலீஸ் முடிவு[தொடர்பிழந்த இணைப்பு] - தினமணி நாளிதழ் - சூலை 19,2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்_சிங்_(அரசியல்வாதி)&oldid=3541237" இலிருந்து மீள்விக்கப்பட்டது