அப்பட்டுவிளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்பட்டுவிளை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இங்கு புனித சூசையப்பர் ஆலயம் மற்றும் புனித அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இது தக்கலை-மணக்கரை சாலையில் தக்கலையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

அப்பட்டுவிளை பற்றி தகவல்[தொகு]

அப்பட்டுவிளையில் புல்வெளிகள், பசுமையான நெல் வயல்கள் நிறைந்து காணப்படுவதால், சிலர் பார்வையில் திகைப்பூட்டும் காட்சியமைப்பாக உள்ளது. அப்பட்டுவிளை அடிப்படையில் கலாச்சாரம், பாரம்பரியம் கொண்டது. அப்பட்டுவிளையில் ஒரு வர்த்தக மையம் உள்ளது. இந்த வர்த்தக மையம் சுற்றிலும் இன்னொரு பெரிய வர்த்தக மையம் ஒன்று உள்ளது. அப்பட்டுவிளை நவீன வரலாற்றில் திருவாங்கூர் மாநில வரலாறு பின்னிப் பிணைந்திருக்கிறது. திருவாங்கூர் மாநிலத்தில், அப்பட்டுவிளை மிக முக்கியமான இடமாகும். தொடக்கத்தில் அப்பட்டுவிளை மக்கள் வறுமையால் பீடிக்கப்பட்டு இருந்தனர். கடின மற்றும் உண்மையான வேலை, நம்பிக்கை மற்றும் விடாமுயற்சி காரணமாக, அவர்கள் தாராள உணர்வும் ஒரு அமைதியான, வளமான வாழ்க்கையைப் பெற்று உள்ளனர். கிராம மையத்தில் புனித ஜோசப் தேவாலயம் உள்ளது. இது, ஒரு சமய மையமாக அல்லாமல் கிராம மக்கள் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மே 1-ல் நடை பெறும் புனித ஜோசப் தேவாலயம் திருவிழா பத்து நாட்கள்வரை நீடிக்கும். இசை, நாடகம் மற்றும் மத நிகழ்வுகளை, வாணவேடிக்கையைப் பார்க்க சுற்றி உள்ள பகுதிகளிலிருந்து இருந்து நிறைய கூட்டம் வருகிறது.

ஆலயம்[தொகு]

ஊரின் நடுவே இரண்டு கோவில்கள் உள்ளது: புனித அந்தோணியார் தேவாலயம் மற்றும் புனித சூசையப்பர் தேவாலயம் ஆலயம். இங்குள்ள மக்கள் அனைவரும் கத்தோலிக்க கிருத்தவர்கள் ஆவர். மாடதட்டுவிளை கிளைப்பங்காக இருந்த அப்பட்டுவிளை தேவாலயம் கிபி 1995 ஆம் ஆண்டு தனிப்பங்காக உருவானது. இது கோட்டாறு மறைமாவட்டத்திற்கு உட்பட்ட பங்கு ஆகும். பங்கு அருட்பணிப் பேரவை இதனை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று செயல்பட்டு வருகின்றது. இப்பங்கில் 10 அன்பியங்கள் செயல்பட்டுவருகின்றன. புலியூர்குறிச்சி இதன் கிளைப்பங்காகும். பருத்திமூட்டுவிளை பகுதியில் மக்களின் வசதிக்காக சிற்றாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காலை 6.30 மணிக்கு திருப்பலி நடைபெறுகிறது. பங்கு குடும்ப விழா, பாதுகாவலரான புனித சூசையப்பர் நாள் விழாவையொட்டி பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

மக்களின் வாழ்க்கை முறை[தொகு]

அப்பட்டுவிளை ஊரில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. இந்த ஊரின் மக்கள் தொகை சுமார் 2000 ஆகும். இவ்வூர் மக்கள் தொகையில் ஆண் பெண் விகிதம் 50 க்கு 50 என்று கூறலாம். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயமே இங்கு முதன்மை தொழிலாக இருந்தது. தற்போது மக்கள் பல்வேறு வேலைகளைச் செய்து வருகிறார்கள். பெரும்பாலான ஆண்கள் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் வேலைப் பார்த்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கட்டிடப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அரசு பணி செய்வோரில் பெரும்பாலோர் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சுமார் 100 விழுக்காட்டினர் கான்கிரீட் வீடுகளில் வாழ்கிறார்கள். இங்கு, ஓட்டுவீடு, ஓலை குடிசை ஆகியன இல்லை.

கல்வி[தொகு]

இந்த ஊர் 100 சதவிகிதம் எழுத்தறிவுப் பெற்றுள்ளது. பெரும்பாலான மக்கள் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளார்கள். ஊரின் நடுவே கோயில் வளாகத்தில் 115 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் தொடக்க பள்ளி செயல்பட்டு வருகின்றது. புனித மேரி தொடக்கப் பள்ளி சி.பி.எஸ்.இ. முறைகளில் செயல்பட உள்ளது.

குளங்கள்[தொகு]

இந்த ஊர் நீர் வளமும் நிலவளமும் கொண்ட ஊர். இயற்கை வளங்கள் சூழ்ந்த இவ்வூரைச் சுற்றி 9 குளங்கள் காணப்படுகின்றன. அவைகளின் விவரம்

  • பெரியகுளம் 0.1 கிமீ
  • கரமுத்து குளம் 0.2கிமீ

சாலை வசதி[தொகு]

இவ்வூர் மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்கின்றது.

பக்கத்தில் உள்ள ஊர்கள்[தொகு]

  • செம்மன்விளை, அப்பட்டுவிளை. 0.02 கி.மீ.
  • புனித அந்தோணியார் தேவாலயம், செம்மன்விளை, அப்பட்டுவிளை. 0.05 கி.மீ.
  • சிவனிகோணம் 0.5 கி.மீ
  • எழுதன்கோட்டுகோணம் 0.6 கி.மீ
  • மனக்கரை 0.5 கி.மீ
  • ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில், மனக்கரை 0.7 கி.மீ
  • குழுமைகாடு 0.9 கி.மீ
  • மாடதட்டுவிளை 1.5 கி.மீ
  • வில்லுக்குறி 1.5 கி.மீ
  • கண்டன்விளை 1.5 கி.மீ
  • தக்கலை 1.5 கி.மீ
  • புலியூர்குறிச்சி 1.6 கி.மீ
  • சடயமங்கலம் 1.7கி.மீ
  • கல்குறிச்சி 1.9 கி.மீ
  • இரனியல் இரயில் நிலையம் 3.1 கி.மீ
  • நெய்யூர் 3.8கி.மீ
  • திங்கள் நகர் 4.2 கி.மீ
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பட்டுவிளை&oldid=1633062" இலிருந்து மீள்விக்கப்பட்டது