கண்டன்விளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்டன்விளை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் இருக்கும் நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும். இது மாநில நெடுஞ்சாலை எண் 91-இல் (பரசேரி-திங்கள்நகர்-புதுக்கடை), பரசேரியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு நுள்ளிவிளை ஊராட்சி கட்டிடமும், நுள்ளிவிளை 'எ' கிராம நிர்வாக அலுவலகமும், கண்டன்விளை அஞ்சல் அலுவலகமும் அமைந்துள்ளது. இங்கு சிமெண்ட் செங்கல் தொழிற்சாலைகள் அதிகம் காணப்படுகின்றன.

பள்ளிகள்[தொகு]

  1. அரசு மேல்நிலைப் பள்ளி, கண்டன்விளை.
  2. புனித திரேசாள் நடுநிலைப் பள்ளி.

வங்கிகள்[தொகு]

  1. இந்தியன் வங்கி, கண்டன்விளை கிளை[1]
  2. ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர், கண்டன்விளை கிளை

கிறித்தவக் கோவில்[தொகு]

புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ஆலயம்.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டன்விளை&oldid=3590804" இலிருந்து மீள்விக்கப்பட்டது