அப்துல் கபூர் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்துல் கபூர் (Abdul Ghafoor 1918 - 10 ஜூலை 2004) ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் அரசியல்வாதி ஆவார், இவர் பீகாரின் 13வது முதலமைச்சராக 02 ஜூலை 1973 முதல் 11 ஏப்ரல் 1975 வரை பணியாற்றினார்;[1][2] மற்றும் ராஜீவ் காந்தியின் அரசாங்கத்தில் கேபினட் அமைச்சராகவும் பணியாற்றினார். சுதந்திரப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்று சிறைவாசம் அனுபவித்தார்.

பிறப்பும் கல்வியும்[தொகு]

அவர் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சரேயா அக்தேரியார் எனும் சிறிய கிராமத்தில், ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். கோபால்கஞ்ச் மாவட்டத்தில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த அவர், உயர் கல்விக்காக பாட்னாவிற்கும், பின்னர் அலிகாருக்கும் குடிபெயர்ந்தார். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் தனது எம்.ஏ மற்றும் சட்டத்தை முடித்தார்.[3]

வெள்ளையனே வெளியேறு இயக்கம்[தொகு]

கபூர் இந்திய சுதந்திர இயக்கத்தின் போது பீகார் காங்கிரஸின் புகழ்பெற்ற இளந்தலைவர்களில் ஒருவராக இருந்தார். பின்னால் பீகார் முதல்வர்களான‌ பிந்தேஸ்வரி துபே, பகவத் ஜா ஆசாத், சந்திரசேகர் சிங், சத்யேந்திர நாராயண் சின்கா, கேதார் பாண்டே ஆகியோருடன் பயணித்தார். மேலும் இந்திய தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவர் சீதாராம் கேஸ்ரி ஆகியோருடன் சுதந்திரப் போராட்டத்தின் போது பங்கேற்றார்.

சட்டமன்றத்தில்[தொகு]

1952 ஆம் ஆண்டு பீகாரின் பரேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்ட மேலவை உறுப்பினரானார். தொடர்ந்து பீகார் சட்ட மேலவை தலைவரானார்.[4] 1957, 1977, 1980 ஆம் ஆண்டுகளிலும் பீகாரின் பரேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்ட மேலவை உறுப்பினரானார். 1962 ஆம் ஆண்டு பீகாரின் கோபால்கஞ்ச் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்ட மேலவை உறுப்பினரானார்.[5]

முதலமைச்சர்[தொகு]

1973 ஜூலை 02 முதல் 1975 ஏப்ரல் 11 வரை பீகார் முதல்வராக இருந்தார்.

நாடாளுமன்றத்தில்[தொகு]

1991 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் கோபால்கஞ்ச் நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து காங்கிரஸ் மற்றும் சமதா கட்சி சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] உள்துறைக்குழு மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினராக இருந்தார். [8]

  • அவரது அரசியல் பாரம்பரியத்தை அவரது பேரன் ஆசிப் கபூர் முன்னெடுத்துச் செல்கிறார். ஆசிப் கபூர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும், பீகார் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். 2010 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பராலி தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார்.

இறப்பு[தொகு]

கபூர் 10 ஜூலை 2004 அன்று பாட்னாவில் இறந்தார். [9]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. Paswan's Muslim CM issue impractical: Cong பரணிடப்பட்டது 21 செப்டெம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம், ExpressIndia.com, accessed March 2009
  2. Chief Minister list பரணிடப்பட்டது 19 மார்ச்சு 2011 at the வந்தவழி இயந்திரம், cm.bih.nic.in, accessed March 2009
  3. "Biographical Sketch of Member of 12th Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-16.
  4. https://en.wikipedia.org/wiki/Barauli,_Bihar_(Vidhan_Sabha_constituency)
  5. https://en.wikipedia.org/wiki/Gopalganj_(Vidhan_Sabha_constituency)
  6. https://en.wikipedia.org/wiki/Siwan_(Lok_Sabha_constituency)
  7. http://loksabhaph.nic.in/writereaddata/biodata_1_12/3021.htm
  8. https://en.wikipedia.org/wiki/Gopalganj_(Lok_Sabha_constituency)
  9. "EX-Bihar CM Abdul Ghafoor passes away" (in en). ZeeNews. 10 July 2004. https://zeenews.india.com/home/exbihar-cm-abdul-ghafoor-passes-away_167386.html.