உள்ளடக்கத்துக்குச் செல்

அபூர்வி சண்டேலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபூர்வி சண்டேலா
Apurvi Chandela
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு4 சனவரி 1993 (1993-01-04) (அகவை 31)
செய்ப்பூர், இந்தியா
உயரம்156 cm (5 அடி 1 அங்)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுகுறி பார்த்துச் சுடுதல்
நிகழ்வு(கள்)10 மீ காற்றுத் துப்பாக்கி
பதக்கத் தகவல்கள்
26 ஜூலை 2014 இற்றைப்படுத்தியது.

அபூர்வி சண்டேலா (Apurvi Singh Chandela) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையாவார். 1993 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் தேதி இவர் பிறந்தார்.

10 மீ காற்றழுத்த துப்பாக்கி சுடும் போட்டி நிகழ்வில் இந்தியாவின் சார்பாக இவர் போட்டியிட்டு வருகிறார். 2014 ஆம் ஆண்டு கிளாசுக்கோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுகளில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.[1] 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் காற்றழுத்தத் துப்பாக்கி சுடும் பிரிவில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.[2] 2016 ஆம் ஆண்டு இந்திய அரசு அபூர்விக்கு அர்ச்சுனா விருதை வழங்கி சிறப்பித்தது.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இராசத்தான் மாநிலத்தின் தலைநகரமான செய்ப்பூரில் அபூர்வி பிறந்தார். இவருடைய குடும்பம் விளையாட்டைப் பின்னணியாக கொண்ட ஒரு குடும்பமாகும். தாய் பிந்து சண்டேலா ஓர் கூடைப்பந்து வீராங்கனையாவார்.[3] தந்தை குல்தீப் சிங் சண்டேலா தீவிரமான விளையாட்டு ஆர்வம் கொண்டிருந்தார்.

விளையாட்டு பத்திரிகையாளராக வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டிருந்த அபூர்வி, 2008-ஆம் ஆண்டு பீகிங் ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்த அபினவ் பிந்த்ரா  தங்கப் பதக்கம் வென்றதைப்  பார்த்து ஈர்க்கப்பட்டு துப்பாக்கி சுடுதல் மீது ஆர்வம் கொண்டார். குடும்பத்தினர் உதவியுடன் பயிற்சிகள் மேற்கொள்ளத் தொடங்கினார்.[4]

தொழில்முறை சாதனைகள்

[தொகு]
  1. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் சண்டேலா வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். மேலும் 2012 ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற மூத்தோர் தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார். 2012- 2019 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து ஆறு முறை தேசிய அளவிலான இத்தகைய போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்தார்.[5]
  2. 2015 ஆம் ஆண்டு தென் கொரியாவின் சாங்வோன் மற்றும் செருமனியின் மூனிச் நகரங்களில் நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடுவோர் கூட்டமைப்பின் துப்பாக்கி சுடும் போட்டிகளில் 10மீ காற்றழுத்த துப்பாக்கி சுடுதல் பிரிவில் முறையே மூன்று மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்தார்.
  3. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் அபூர்வி சண்டேலா வெண்கலப் பதக்கம் வென்றார்.
  4. 2019 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடுவோர் கூட்டமைப்பின் துப்பாக்கி சுடும் போட்டிகளில் இரண்டாம் இடமும் ரியோ ஒலிம்பிக்கில் போட்டியிட தகுதியும் பெற்றார்.[6][7]
  5. டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட அபூர்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  6. ஆத்திரியாவில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற மேடோன் காப் என்ற தனியார் துப்பாக்கிசுடும் போட்டியில் அபூர்வி தங்கப் பதக்கம் பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Women's 10 metre air rifle Finals". glasgow2014.com. 26 July 2014. Archived from the original on 29 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 26 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "தங்கம் வென்றார் சண்டேலா". தினமலர். 23 பெப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "अपूर्वी चंदेला: ओलंपिक में जीत के लिए तैयार" (in hi). BBC News हिंदी. https://www.bbc.com/hindi/sport-55962771. 
  4. "துப்பாக்கியே துணை: ஒலிம்பிக்சில் பிரகாசிக்க காத்திருக்கும் அபூர்வி சண்டேலா". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-02-20.
  5. "Indian Shooter Apurvi Chandela on Winning Gold at ISSF World Cup | The Quint - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
  6. "Rio Olympics 2016: Jitu Rai finishes 8th in 10m Air Pistol; Apurvi Chandela, Ayonika Paul out in qualifiers". First Post. 7 August 2016. பார்க்கப்பட்ட நாள் 8 August 2016.
  7. "Apurvi Chandela Biography, Records and Age". Olympic Channel. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.

"Apurvi Chandela, the girl with the golden date". SportsCafe. SportsCafe.in. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபூர்வி_சண்டேலா&oldid=3927121" இலிருந்து மீள்விக்கப்பட்டது