அபு ஆஸ்மி
அபு ஆஸ்மி (சட்டப்பேரவை உறுப்பினர்) | |
---|---|
Abu Asim Azmi ابو عاصم اعظمی अबु आसिम आजमी மகாராஷ்டிரா சட்டப் பேரவை உறுப்பினர் பதவிக்காலம் 2014 - 2019 ஆட்சி மான்குர்த் சிவாஜி நகர் (சட்டமன்றத் தொகுதி) | |
மகாராட்டிர சமாஜ்வாதி கட்சியின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1995 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆகத்து 08, 1955 |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
வேலை | அரசியல், வணிகம் |
இணையத்தளம் | www |
அபு அசிம் ஆஸ்மி (மராத்தியம்: अबु आसिम आजमी) (பிறப்பு: ஆகத்து 8 1955), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் ஆசம்கர் மாவட்டம் மஞ்சிர் பட்டி என்ற இடத்தில் பிறந்த இவர், சமாஜ்வாதி கட்சியின் மகாராட்டிர மாநிலக் கிளையின் தலைவராக உள்ளார்.[1]
இவர், மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள மன்குர்த் சிவாஜி நகர் (மகாராஷ்டிர சட்டமன்ற) தொகுதியிலிருந்து 12-வது மகாராட்டிர சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]1995 இல், இவரது தலைமையில், சமாஜ்வாதி கட்சி மகாராட்டிர மாநில சட்டமன்றத்தில் இரண்டு இடங்களை வென்றது.
2004 இல், தனது முதல் தேர்தலில், பிவாண்டி தொகுதியில் சிவசேனாவின் யோகேஷ் பாட்டீலிடம் தோற்றார். 2002 முதல் 2008 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
2009 வடமேற்கு மும்பை மக்களவைத் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலில் குருதாஸ் காமத்திடம் (காங்கிரஸ்) தோல்வியடைந்தார். இருப்பினும், 2009 ஆம் ஆண்டில், அஸ்மி மகாராட்டிர சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு முறை பதவி வகித்தார்.மன்குர்த்-சிவாஜி நகர் மற்றும் பிவாண்டி (கிழக்கு) இரு இடங்களில் போட்டியிட்டு இரு இடங்களிலும் வெற்றி பெற்றார். அரசியலமைப்புச் சட்டம் காரணமாக மன்குர்த்-சிவாஜி நகரைத் தேர்வு செய்தார்.
மகாராஷ்டிராவில் ஒரே நேரத்தில் ஒரே நேரத்தில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஒரே சட்டமன்ற உறுப்பினர் இவர் ஆவார்.
2009 முதல் 2024 வரை தனது மன்குர்த் சிவாஜி நகர் தொகுதியில் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
சர்ச்சை
[தொகு]ஒரு காணொளியில், அஸ்மி: "சொந்த தலைமையை உருவாக்க விரும்பும் ஒரு முஸ்லீம் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும், இது மதச்சார்பற்ற இந்தியா, இங்கு தலைவர்கள் இந்துக்களாக இருக்கப் போகிறார்கள்" என்று கூறினார்.[2]
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]தேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | அபு ஆஸ்மி | சமாஜ்வாதி கட்சி | |
2014 | அபு ஆஸ்மி | சமாஜ்வாதி கட்சி | |
2019 | அபு ஆஸ்மி | சமாஜ்வாதி கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajya Sabha members" பரணிடப்பட்டது 2019-02-14 at the வந்தவழி இயந்திரம் Rajya Sabha Secretariat, New Delhi Accessed 30 December 2009
- ↑ imAsadShaikh (5 October 2021). "A Muslim who wants to build own leadership should go to Pakistan, this is secular India where our leaders use to be…" (Tweet).
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)