உள்ளடக்கத்துக்குச் செல்

அபீஸ் அலி கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபீஸ் அலி கான்
2000இல் வெளியிடப்பட்ட இந்திய அஞ்சல் முத்திரையில் அபீஸ் அலி கான்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு1888
குவாலியர், மத்தியப் பிரதேசம்
இறப்பு1972 (வயது 84)[1]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், சரோத் இசைக்கலைஞர்
இசைக்கருவி(கள்)சரோத்

அபீஸ் அலி கான் (Hafiz Ali Khan; 1888-1972) ஒரு இந்திய சரோத் கலைஞர். [2] சரோத் இசைக்கலைஞர்களின் பங்காஷ் கரானாவின் (பள்ளி அல்லது பாணி) ஐந்தாவது தலைமுறை வழித்தோன்றலான இவர், தனது இசையின் பாடல் அழகுக்காக அறியப்பட்டார். அவ்வப்போது விமர்சனத்திற்கு ஆளானாலும், இவரது கற்பனையானது பெரும்பாலும் இவரது காலத்தில் நிலவிய கடுமையான துருபத் பாணியை விட அரை-பாரம்பரிய தும்ரி மொழிக்கு நெருக்கமாக இருப்பதை கைவிடவில்லை. 1960 இல் இந்திய அரசு பத்ம பூசண் விருதை வழங்கி கௌரவித்தது. [3]

நிகழ்ச்சி

[தொகு]

அபீஸ் அலியின் தோற்றம் மிகவும் விரும்பப்பட்ட இசைக்கலைஞர்களில் ஒருவராக ஆக்கியது. இது பெரும்பாலும் குரல் இசையால் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சகாப்தத்தில் ஒரு வாத்தியக்கலைஞருக்கு சாதாரண சாதனையாக இல்லை. குவாலியரில் அரசவை இசைக்கலைஞராக இருந்தபோது, இவர் வங்காளத்திற்கு பல பயணங்களை மேற்கொள்வார். அங்கு இவர் முக்கிய இசை விழாக்களில் நிகழ்த்தினார், மேலும் பல சீடர்களுக்கு கற்பித்தார். இரண்டு பெங்காலி பிரபுக்களான ராய்சந்த் போரல் மற்றும் மன்மத கோஷ் ஆகியோர் இவருக்கு பொருளுதவி வழங்கினர். " காட் சேவ் தி கிங் " என்ற தனித்துவமான பிரித்தானிய நாட்டுப்பண்ணை காலனித்துவ இந்தியாவின் ஆளுநர்கள் முன் இசைத்து பாரட்டைப் பெற்றார்.

மரபு

[தொகு]

இபீஸ் அலி 1972 இல் தனது 84 வயதில் புது தில்லியில் இறந்தார். இவரது பெயரில் ஒரு சாலையை முதல்வர் திருமதி. சீலா தீக்‌சித் பிப்ரவரி 10 அன்று திறந்து வைத்தார். நிஜாமுதீன் தொடருந்து நிலையத்திற்கு இது 2வது நுழைவுச் சாலையாகும். தலைநகரில் தான்சேன் மற்றும் தியாகராஜருக்குப் பின் ஒரு கலைஞரின் பெயரிடப்பட்ட ஒரே சாலை இதுதான். இந்த சாலை சுமார் 300 மீட்டர் நீளம் கொண்டது.

இதனையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. Profile of Hafiz Ali Khan on SwarGanga.org website Retrieved 26 January 2018
  2. Brick, mortar & false notes Dawn (newspaper), Published 29 April 2010, Retrieved 26 January 2018
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் 26 January 2018.

மேலும் படிக்க

[தொகு]

McNeil, Adrian (2004). Inventing the Sarod: A Cultural History. Calcutta: Seagull Books. p. 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7046-213-4.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபீஸ்_அலி_கான்&oldid=3793512" இலிருந்து மீள்விக்கப்பட்டது