புத்ததேவ் தாசு குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டிட்
புத்ததேவ் தாசு குப்தா
Pandit Buddhadev Dasgupta at a concert accompanied by Pandit Chandra Nath Shastri in Tabla.jpg
1987இல் கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பண்டிட் சந்திரநாத் சாத்திரியுடன் புத்ததேவ் தாசு குப்தா.
பின்னணித் தகவல்கள்
பிறப்புபெப்ரவரி 1, 1933(1933-02-01)
பாகல்பூர், பீகார், இந்தியா
இறப்பு15 சனவரி 2018(2018-01-15) (அகவை 84)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)சரோத்
வெளியீட்டு நிறுவனங்கள்நிம்புஸ் இசைத் தட்டு நிறுவனம்
இணைந்த செயற்பாடுகள்சந்திர நாத் சாத்திரி
ராதிகா மோகன் மைத்ரா
அனைத்திந்திய வானொலி
இணையதளம்www.buddhadevdasgupta.com

புத்ததேவ் தாசு குப்தா (Buddhadev Das Gupta) (1 பிப்ரவரி 1933 - 15 சனவரி 2018) இவர் இந்திய பாரம்பரிய இசைக் கருவியான சரோத் வாசித்த இசைக்கலைஞராவார். [1] இவர் இந்தியாவின் கொல்கத்தாவில் வசித்து வந்தார். 'நிம்பசு' இசைத்தட்டு நிறுவனத்தின் தி ராகா கைடில் இடம்பெற்ற கலைஞர்களில் இவரும் ஒருவர்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர், 1933 பிப்ரவரி 1 அன்று இந்தியாவின் பாகல்பூரில் பிரபுல்லா மோகன் தாசு குப்தா, பபானி ஆகியோருக்கு பிறந்தார். இவரது தந்தை தொழில் ரீதியாக மாவட்ட நீதிபதியாக இருந்தார். மேலும், இசையில் ஆர்வம் கொண்டிருந்தார்.

1948 இல் தனது மெட்ரிகுலேசன் தேர்வில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பின்னர் சிபூரின் வங்காள பொறியியல் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் பயின்றார். இவரது வாழ்க்கையின் பிற்பகுதியில், 2010 பிப்ரவரி 16 அன்று, பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கியது.

மிகச் சிறிய வயதிலேயே, இவர் சரோத் மேதையான ராதிகா மோகன் மைத்ராவிடமிருந்து சரோத் பாடங்களை எடுக்கத் தொடங்கினார். அனைத்திந்திய வானொலியில் இவரது முதல் நிகழ்ச்சி விருந்தினர் கலைஞராக இருந்தது. இறுதியில் வானொலியில் 17க்கும் மேற்பட்ட தேசிய நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.

விருதுகள்[தொகு]

2011 ஆம் ஆண்டில், இவருக்கு இந்திய அரசு பத்மசிறீ விருதினை வழங்கியது. ஆனால் இவர் "மிகத் தாமதமாக வழங்கப்பட்டது" என்று கூறி அதை நிராகரித்தார். 2012 சனவரியில், இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது. [2] இவருக்கு 1993 ல் சங்கீத நாடக அகாதமி விருதும், 2011 ல் தாகூர் ரத்னா விருதும் வழங்கப்பட்டது.

இறப்பு[தொகு]

இவர், 2018 சனவரி 15 அன்று தெற்கு கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் இருதய நோயால் தனது 84 வயதில் இறந்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இவரது மரணம் பாரம்பரிய இசைத்துறையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது என்றார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hunt, Ken. "Buddhadev Das Gupta". Allmusic. 2 May 2010 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Padma Awards". pib. 27 January 2013. 27 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Indian Express : Sarod Maestro Pt Buddhadev Dasgupta passes away".

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:பத்ம வூசண் விருதுகள்