ராதிகா மோகன் மைத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராதிகா மோகன் மைத்ரா
பிறப்பு1917
பிறப்பிடம்கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு16 அக்டோபர் 1981
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)சரோத் கலைஞர்
இசைக்கருவி(கள்)சரோத்
இணைந்த செயற்பாடுகள்புத்ததேவ் தாசு குப்தா, கல்யாண் முகர்ஜி, சஞ்சய் பந்தோபாத்யாய், நரேந்திர நாத் தார், சமரேந்திர நாத் சிக்கார், மைக்கேல் ராபின்சு, அபனீந்திர மைத்ரா

ராதிகா மோகன் மைத்ரா (Radhika Mohan Maitra) (1917-1981) இவர் ஓர் இந்திய சரோத் கலைஞராவார். மேலும், நரேந்திர நாத் தார், கல்யாண் முகர்ஜியா, புத்ததேவ் தாசு குப்தா, சஞ்சய் பந்தோபாத்யாய், அபனீந்திர மைத்ரா, சமரேந்திர நாத் சிக்தார், மைக்கேல் ராபின்சு போன்ற பல சிறந்த இசைக்கலைஞர்களின் குருவுமாவார். [1] 20 ஆம் நூற்றாண்டின் சரோத் இசையில் மைத்ரா ஒரு செல்வாக்கு மிக்கவராக கருதப்பட்டு 'சங்கீதாச்சார்யா' என்ற பட்டத்தைப் பெற்றார். [2] 1971 இல் சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். [3]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

இவர், இசைக்கலைஞர்களின் வழிவந்த ஒரு பெங்காலி ஜமீந்தார் குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது தாத்தா, லலித் மோகன் மைத்ரா தபலா இசைக்கலைஞராக இருந்தார். இவரது தந்தை, பிரஜேந்திர மோகனும் சரோத் கலைஞராவார். மேலும் இவரது தாய் சித்தார் கற்றுக் கொண்டிருந்தர். இவரது தாத்தாவால் ஆதரிக்கப்பட்டவர்களில் முகமது அமீர்கானும், ராதிகாவின் குருவாகவும், முதன்மை ஆசிரியராகவும் செயல்பட்டவர் இவர்தான். இருப்பினும் மாணவர்கள் இவரது அனுமதியுடன் பிற கருவிகளையும் இசை பாணிகளையும் கற்றுக்கொனர். மைத்ரா தனது இசை பயிற்சிக்கு மேலதிகமாக , கொல்கத்தா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட தத்துவத்தில் முதுகலைப் பட்டமும், சட்ட பட்டமும் பெற்றிருந்தார். இவர் சிறிது காலம் தத்துவத்தை கற்பித்தார். மேலும் பல புத்தகங்களை எழுதிய ஒரு பிரபல இசைக்கலைஞராகவும் இருந்தார். [4]

சுற்றுப்பயணம்[தொகு]

மைத்ரா 1950களில் ஒரு இசைக்கலைஞராக முக்கியத்துவம் பெற்றார். இவர் இந்தியாவிலும் உலகின் பிற இடங்களிலும் இசை நிகழ்ச்சிகளுக்கு தேவைப்பட்டபோது. வானொலி ஒலிப்பதிவுகளைத் தவிர, ஆப்கானித்தான், ஆத்திரேலியா, நியூசிலாந்து, பிலிப்பீன்சு, சீனா போன்ற நாடுகளில் இந்திய அரசு ஏற்பாடு செய்த கலாச்சார பிரதிநிதிகளின் ஒரு பகுதியாக இவர் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். மேலும் 1975 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அரசு சாரா சுற்றுப்பயணத்திலும் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.

திருமணம்[தொகு]

1944 சூலையில் இவர் சுசாங்க் "அரச குடும்பத்தைச் சேர்ந்த" இலலிதா என்ற பெண்ணை மணந்தார். [5]

இறப்பு[தொகு]

மைத்ரா 1981 இல், தனது 64 வயதில், ஒரு விபத்தில் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Music on the screen". 8 August 2008. Archived from the original on 2008-10-11. https://web.archive.org/web/20081011013739/http://www.hindu.com/thehindu/fr/2008/08/08/stories/2008080850020100.htm. பார்த்த நாள்: 2015-01-24. 
  2. "Timeout". 23 January 2006. Archived from the original on 2015-01-28. https://web.archive.org/web/20150128115041/http://www.telegraphindia.com/1060123/asp/calcutta/story_5745971.asp. பார்த்த நாள்: 2015-01-24. 
  3. "Sangeet Natak Akademi Puraskar (Akademi Awards)". Sangeet Natak Akademi. 30 May 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-01-24 அன்று பார்க்கப்பட்டது.
  4. Hamilton, James Sadler (1994). Sitar Music in Calcutta: An Ethnomusicological Study. Motilal Banarsidass Publisher. பக். 3–6, 113–114. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8-12081-210-9. https://books.google.com/books?id=JP5Wzqq7I80C. 
  5. Kalyan Mukherjea; Peter Manuel (2010). "Radhika Mohan Maitra: His Life and Times". Asian Music 41 (2): 188. https://muse.jhu.edu/article/382336. 

மேலும் படிக்க[தொகு]

  • Mukherjea, Kalyan; Manuel, Peter (2010). "Radhika Mohan Maitra: His Life and Times". Asian Music 41 (2): 180–197. doi:10.1353/amu.0.0065. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராதிகா_மோகன்_மைத்ரா&oldid=3269924" இருந்து மீள்விக்கப்பட்டது