அபிசேக் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபிசேக் சிங்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
16 மே 2014 – 23 மே 2019
முன்னையவர்மதுசூதன் யாதவ்
பின்னவர்சந்தோஷ் பாண்டே
தொகுதிராஜ்நாந்துகாவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 மார்ச்சு 1981 (1981-03-05) (அகவை 43)
கவர்தா, மத்தியப் பிரதேசம் (தற்பொழுது சத்தீசுகர்), இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
ஐஸ்வர்யா சிங் (தி. 2011)
பெற்றோர்
முன்னாள் கல்லூரிதேசிய தொழில்நுட்பக் கழகம் (தொழில்நுட்பவியல் இளையர்) ஜாம்செட்பூர் (முதுகலை வணிக மேலாண்மை)
தொழில்அரசியல்வாதி

அபிசேக் சிங் (Abhishek Singh)(பிறப்பு 5 மார்ச் 1981) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ராஜ்நாந்துகாவினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியப் பாராளுமன்றத்தின் கீழ் சபையான 16வது மக்களவையின் உறுப்பினராக இருந்தார். இவர் சத்தீசுகர் மாநில முன்னாள் முதல்வர் ரமன் சிங்கின் மகன் ஆவார்.

இளமை[தொகு]

அபிசேக் சிங் 198 ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி கவர்தாவில் பிறந்தார். இவர் ராமன் சிங் மற்றும் வீணா சிங் ஆகியோரின் மகன். இவர் ராய்ப்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் கல்வி படித்தார். இதன் பிறகு எக்ஸ். எல். ஆர். ஐ.-சவேரியார் நிர்வாகப் பள்ளியில் முதுநிலை வணிக நிர்வாகவியல் கல்வி பயின்றார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

தனது கல்வியை முடித்தவுடன், சிங் அரசியலில் ஈடுபட்டார். 2013 சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜ்நந்துகாவ் மற்றும் கபீர்தாம் மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். ஏப்ரல் 2014-இல், இத்தொகுதியில் அப்போதைய உறுப்பினரான மதுசூதன் யாதவுக்கு போட்டியிட வாய்பு மறுக்கப்பட்டதையடுத்து, ராஜ்நந்த்காவ்னில் பொதுத் தேர்தலில் போட்டியிட பாஜக இவரை வேட்பாளராக அறிவித்தது. இவர் 235,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சத்தீசுகரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் (33 வயது) நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிசேக்_சிங்&oldid=3873603" இலிருந்து மீள்விக்கப்பட்டது