அபரணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹபரணை
நகரம்
Habarana statue 02.JPG
நாடுஇலங்கை
மாகாணம்வடமத்திய மாகாணம்
மாவட்டம்அனுராதபுரம்
நேர வலயம்Sri Lanka Standard Time Zone (ஒசநே+5:30)

ஹபரணை இலங்கை அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுநகரம் ஆகும். இது அம்பேபுசை-திருகோணமலை (A6) வீதியில் அமைந்துள்ள ஓர் முக்கிய சந்தியாகும். இங்கிருந்து பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு நகரங்களுக்கான பேருந்து சேவை நடைபெறுகின்றது. திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு செல்வோர் இப்பகுதியிலேயே பேருந்து மாறுதல் வேண்டும்.

இப்பகுதியானது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகும். இதற்கருகே சிகிரியாவும் அமைந்துள்ளது. இங்கே யானைகளில் சவாரிசெய்யமுடியும். சுற்றுலாத் துறைக்கெனவே வளர்க்கப்பட்ட நன்கு பழக்கப் படுத்தப்பட்ட யானைகள் இங்கு உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபரணை&oldid=2220648" இருந்து மீள்விக்கப்பட்டது