உள்ளடக்கத்துக்குச் செல்

அன்ரிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்ரிக்
மாகாணம்
மாகாண வரைபடம்
மாகாண வரைபடம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்மேற்கு விசயாசு
நேர வலயம்ஒசநே+8 (பிசீநே)

அன்ரிக் (Antique) என்பது பிலிப்பீன்சின் விசயாசின், மேற்கு விசயாசுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் சன் ஜோஸ் டி பயூனவிஸ்டா ஆகும். இது 1780 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ரொடோரா கடியாவோ (Rhodora Cadiao) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 2,729.17 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக அன்ரிக் மாகாணத்தின் சனத்தொகை 582,012 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 49ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 52ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் 590 கிராமங்களும், 18 மாநகராட்சிகளும் உள்ளன. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு ஆங்கிலம் உள்ளடங்கலாக ஏழு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. விவசாயம், காடுகள், விமானநிலையங்கள், நிர்மாணங்கள், வர்த்தகம், வங்கிகள், கைத்தொழில் மற்றும் விலங்கு வளர்ப்பு ஆகியவை இம்மாகாணத்தின் பொருளாதாரத்தில் பங்களிப்பு வழங்குகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 11 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. Department of Tourism - Antique பரணிடப்பட்டது 2017-06-20 at the வந்தவழி இயந்திரம் Accessed August 25, 2013
  3. "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-04.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்

[தொகு]

அதிகாரபூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2017-01-02 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்ரிக்&oldid=3927108" இலிருந்து மீள்விக்கப்பட்டது